search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "degree"

    • திருவெண்ணைநல்லூர் அரசு கல்லூரியில் 2,200 மாணவ மாணவிகளுக்கு பட்டம் - அமைச்சர் பொன்முடி வழங்கினார்
    • அமைச்சர் பொன்முடி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் 3-வது பட்டமளிப்பு விழா நடை பெற்றது. விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். உயர்கல்வித் துறை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன், ரவிக்குமார், எம்.பி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சபாபதிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் நாக லட்சுமி வரவேற்றார்.

    விழாவில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு 2013 -2020 வரை பயின்ற 2200 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்

    விழாவில் புகழேந்தி எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிகுழுத் தலைவர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் தங்கம், மாவட்டத் துணைச் செயலாளர் புஷ்பராஜ், கல்லூரிகள் கல்வியியல் இணை இயக்குநர் மகாவேரி அம்மாள், பதிவாளர் விஜயராகவன், மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், யூனியன்தலைவர் ஓம்சிவசக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக் அலி பேக், பேரூராட்சி மன்றத் தலைவர் அஞ்சுகம் கணேசன், ஒன்றிய பொரு ளாளர் கிருஷ்ண மூர்த்தி ஒன்றிய குழு துணை தலைவர் கோமதிநிர்மல்ராஜ், பேரூராட்சி துணைத் தலைவர் ஜோதி மற்றும் அரசு அலுவலர்கள் கல்லூரி யின் அனைத்து துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கொலை வழக்கில் கைதாகி இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர், தொண்டையில் ஏற்பட்ட கேன்சரையும் குணப்படுத்தி, 6 டிப்ளமோ மற்றும் 1 டிகிரி படித்து முடித்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 வருடங்களுக்கு மேலாக தண்டனை பெற்று வரும் ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் உத்தரவிட்டார்.

    இதையடுத்து, முதற்கட்டமாக சுமார் 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் ஒருவரின் தன்னம்பிகை ஊட்டும் சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

    1989-ம் ஆண்டு கொலை வழக்கில் கைதாகி இரட்டை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட கைதி சந்திரசேகரன். இவருக்கு சில ஆண்டுகள் முன்பு தொண்டையில் புற்று நோய் ஏற்பட்டது. இந்த புற்றுநோயை எதிர்த்து மன உறுதியுடன் போராடியுள்ளார் சந்திரசேகரன்.

    சிறைத்துறை அதிகாரிகளின் உதவியுடனும் மருத்துவர்களின் உதவியுடனும், மன உறுதியுடனும் தனக்கு வந்த உயிர்க்கொல்லி நோயை கடந்து புதுவாழ்வு பெற்றார். அதன்பின்னர் சிறையில் இருந்தபடியே, கல்வியின் மீது தனது கவனத்தை செலுத்தினார்.

    சிறையில் காலத்தை வீணாக்காமல், 50 வயதை கடந்த சந்திரசேகரன், 6 டிப்ளமோ படிப்புகளையும், ஒரு டிகிரியையும் படித்து முடித்து பட்டதாரியாக சுதந்திரம் பெற்றுள்ளார். இதுகுறித்து சந்திரசேகர் கூறும்போது, ‘சிறையில் எனது காலத்தை இனிமையானதாகவும், என்னை சுற்றி இருந்த பகுதிகளை சுவர்க்கம் போலவும் மாற்றிக்கொண்டேன்’ என கூறியுள்ளார்.



    தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை அடுத்து, சிறைத்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியருக்கு சந்திரசேகரனை பரிந்துரை செய்துள்ளனர். அவரது நன்னடத்தை மற்றும் உடல்நிலையை கருத்தில் கொள்ளுமாறு அளிக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டு, அவர் விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    சந்திரசேகரன் மட்டுமன்றி, சிறையில் இருந்த பலரும் பட்டதாரிகளாக வெளிவந்துள்ளதாக கைதி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு நொடியில் உணர்ச்சிவசப்பட்டு செய்த தவறுக்கு பல வருடங்களாக சிறை தண்டனை பெற்ற கைதிகள் தற்போது மனம் திருந்தி, குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

    சிறையிலும் கல்வி கற்கும் இவர்கள், உலகின் பலதரப்பினருக்கும் உதாரணமாக திகழ்வர் என்பதில் ஐயமில்லை. அதேசமயம் சிறைவாசிகள் என்பதனால் மட்டுமே இவர்களுக்கு பணி வழங்க மறுக்கும் சில நிறுவனங்களும் தங்களின் கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தனக்கு அளிக்கப்பட்ட கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்றுகொள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மறுத்து விட்டார். #RamNathKovind
    சிம்லா:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா ஆகியோர் 6 நாள் ஓய்வுமுறை பயணமாக நேற்று இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் சிம்லாவுக்கு வந்தனர்.

    சராப்ரா பகுதியில் உள்ள ஹெலிபேட் தளத்தில் வந்திறங்கிய அவர்களை மாநில கவர்னர் ஆசார்யா தேவ்ரத் மற்றும் முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர், மாநில மந்திரி மொகிந்தர் சிங் தாக்குர் ஆகியோர் வரவேற்றனர். 

    சிம்லா நகரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சோலான் மாவட்டத்தில் உள்ள நவ்னி பகுதியில் அமைந்திருக்கும் டாக்டர் ஒய்.எஸ்.பார்மர் தோட்டக்கலை மற்றும் வனவியல் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ராம்நாத் கோவிந்த் இன்று தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

    இவ்விழாவில், அவருக்கு அறிவியல் துறைசார்ந்த கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கான, குறிப்புகள் அடங்கிய பட்டயம் வாசிக்கப்பட்ட பின்னர், தனக்கான கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்றுகொள்ள ராம்நாத் கோவிந்த் மறுத்து விட்டார்.

    கொள்கை அடிப்படையில் இந்த பட்டத்தை பெற்றுகொள்வதற்கான துறைசார்ந்த தேர்ச்சி தனக்கு இல்லாததால் இந்த பட்டத்தை ஏற்றுகொள்ள விரும்பவில்லை என தனது உரையின்போது அவர் குறிப்பிட்டார்.  #tamilnews #RamNathKovind 
    ×