search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CWC 2019"

    எம்எஸ் டோனி அணியில் இருப்பது எனது மனதில் உதிக்கும் சிந்தனைகளை சுதந்திரமாக செயல்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    விராட் கோலி தலைமையில் இந்திய அணி 50 ஓவர் உலகக்கோப்பையை சந்திக்க இருக்கிறது. எம்எஸ் டோனி விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். விராட் கோலி கேப்டன் குறித்து விமர்சனம் பெருகி வரும் நிலையில், டோனி குறித்து விமர்சனம் செய்யப்படுகிறது.

    டோனி குறித்த விமர்சனத்திற்கு அவ்வப்போது விராட் கோலி தக்க பதிலடி கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் அணியில் இருந்தால் அது எனக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நான் டோனியை பற்றி என்ன கூற முடியும்?. அவரது தலைமையில்தான் எனது கிரிக்கெட் வாழ்க்கை துவங்கியது. கடந்த சில வருடங்களாக அவரை நான் அருகில் இருந்து பார்த்து வருகிறேன். அவரும் அப்படித்தான்.

    டோனியைப் பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றால், எந்தவொரு விஷயத்தையும் விட அணி உயர்வானதாக இருக்க வேண்டும் என்பதுதான். எப்போதுமே அணியை பற்றிதான் எங்கள் எண்ணங்கள் இருக்கும். வேறு எந்த விஷயமும் இல்லை.

    அவர் அனுபவத்தை எங்களுக்கு பகிர்ந்தளிப்பார். சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் கூட அவரது சில ஸ்டம்பிங், போட்டியின் திருப்பத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது.



    டோனி மீதான விமர்சனம் துரதிருஷ்டவசமானது. நியாயமாக சொல்ல வேண்டுமென்றால், விமர்சனம் செய்பவர்களுக்கு பொறுமை சற்று குறைவு என நினைக்கிறேன். அவர் மீதான விமர்சனம் முடிவில்லாமல் இருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால், எம்எஸ் டோனி கிரிக்கெட்டில் மிகவும் புத்திசாலித்தனமான மனிதர்.

    ஸ்டம்பிற்கு பின்னால் விக்கெட் கீப்பராக பணியாற்றும் அவர், விலைமதிப்பற்றவர். என்னுடைய எண்ணங்களை சுதந்திரமாக செயல்படுத்த அவர் உதவி செய்கிறார். டோனியை போன்ற அனுபவமிக்க ஒருவர் இருப்பது சிறப்பானது’’ என்றார்.
    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்தி வரும் ஹர்திக் பாண்டியாவுக்கு இணையாக இந்திய அணயில் வேறு எந்த வீரரும் இல்லை என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்டியா திகழ்கிறார். ‘காபி வித் கரண்’ டிவி நிகழ்ச்சிக்குப்பின் அமைதியான வீரராக மாறிவிட்டார்.

    நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக 91 ரன்கள் குவித்து அசத்தினார். 15 இன்னிங்சில் 402 ரன்கள் குவித்துள்ளார். 10-க்கும் மேற்பட்ட விக்கெட்டுக்களை சாய்த்துள்ளார். இவரது பேட்டிங் ஸ்டிரைக் 191.42 ஆகும்.

    இந்நிலையில் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு இணையான வீரர் யாரும் இல்லை என்று முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் தெரிவித்துள்ளார்.



    ஹர்திக் பாண்டியா குறித்து சேவாக் கூறுகையில் ‘‘பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவின் திறமைக்கு இணையாக இந்திய அணியில் யாரும் இல்லை.

    அவருக்கு இணையாக யாராவது ஒருவர் இருந்திருந்தால், மூன்று துறைகளிலும் (பந்து வீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங்- three-dimensional) ஜொலிக்கும் வீரரரை பிசிசிஐ தேர்வு செய்திருக்கும். அப்படி இருந்திருந்தால் ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்கு திரும்பியிருக்க முடியாது’’ என்றார்.
    மே 30-ந்தேதி தொடங்கும் உலகக்கோப்பையை இந்தியா வெல்லாவிடில், நான் மிகவும் ஏமாற்றம் அடைவேன் என்று முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் வருகிற 30-ந்தேதி தொடங்கும் உலகக்கோப்பை தொடர் ‘ரவுண்ட் ராபின்’ முறையில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்ல அதிகமான வாய்ப்பு உள்ளதாக முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அசாருதீன் கூறுகையில் ‘‘நாம் உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. நாம் சிறந்த அணியை தேர்வு செய்துள்ளோம். ஆடுகளங்கள் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால், நாம் கஷ்டப்படுவோம் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.



    ஆனால், நம்முடைய பந்து வீச்சாளர்கள் கூட எதிரணியை எளிதில் அவுட்டாக்கி விடுவார்கள். நம்மிடம் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இந்தியா சிறந்த அணி. உலகக்கோப்பையை இந்தியா வெல்லவில்லை என்றால், நான் மிகவும் ஏமாற்றம் அடைவேன்’’ என்றார்.
    ×