search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coonoor"

    • இந்த பூங்காவில் ஏரி உள்ளது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஏரியில் படகு சவாரி நடைபெற்று வருகிறது.
    • சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இதன் காரணமாக பூங்கா ஏரியில் படகு சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது.

    குன்னூர்:

    தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கு

    ன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவ மழை தான் அதிக அளவு பெய்யும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையும் தீவிரமாக பெய்து வருகிறது. படகு சவாரி நிறுத்தம் கடந்த 2 நாட்களாக காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர் பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது. குன்னூரில் முக்கிய சுற்றுலா தளமாக தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான சிம்ஸ் பூங்கா உள்ளது.

    இந்த பூங்காவில் ஏரி உள்ளது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஏரியில் படகு சவாரி நடைபெற்று வருகிறது. ஏரியில் 14 படகுகள் இயக்கப்படுகின்றன. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இதன் காரணமாக பூங்கா ஏரியில் படகு சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது. சவாரி இல்லாததால் படகு இல்லத்தில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    • ஜெகதளா குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடி வீடுகளின் கதவை தட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • நவ பழத்தை ருசிக்க கரடிகள் அடிக்கடி குன்னூர்- மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் உலா வருகின்றன.

    ஊட்டி:

    குன்னூர் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றன. காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் அவைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி நடமாடி வருகின்றன.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு குன்னூர் அருகேயுள்ள ஜெகதளா குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடி வீடுகளின் கதவை தட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குன்னூர்- மேட்டுப்பாளையம் ரெயில் பாதையின் இருப்புறமும் வனத்துறைக்கு சொந்தமான காடுகள் உள்ளன. இங்கு தற்போது இயற்கையாக விளையும் சோலைப் பழமான நவப்பழ சீசன் தொடங்கியுள்ளது.

    இந்த பழத்தை ருசிக்க கரடிகள் அடிக்கடி குன்னூர்- மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் உலா வருகின்றன. மரப்பாலம் அருகே குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையும் ரெயில் பாதையும் சந்திக்கும் இடத்தில் கரடி ஒன்று ரெயில் பாதையின் ஓரத்தில் அமர்ந்திருந்தது. இதனை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் பயிற்சி குன்னூர் காட்டேரி பூங்காவில் நடைபெற்றது.
    • விவசாயிகளுக்கு இயற்கை உரம் தயாரித்தல், உயிர் உரங்களின் பயன்பாடு பற்றி விஞ்ஞானிகள் விளக்கி கூறினர்.

    அரவேணு :

    கோத்தகிரி உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கான இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் பயிற்சி குன்னூர் காட்டேரி பூங்காவில் நடைபெற்றது. விவசாயிகளுக்கு இயற்கை உரம் தயாரித்தல், உயிர் உரங்களின் பயன்பாடு பற்றி விஞ்ஞானிகள் விளக்கி கூறினர்.

    கோத்தகிரி தோட்டகலைதுறை மூலம் நடைபெற்ற இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆத்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை, பிரவீணா ஆகியோர் செய்திருந்தனர். இதில் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதி இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனர். நீலகிரி தோட்டகலை இயற்கை விவசாய சங்க செயலாளர் ராம்தாஸ் நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்து விளக்கி கூறினார்.

    • நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் போரில் உயிா் தியாகம் செய்த ராணுவ வீரா்களின் நினைவுத் தூணில் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.
    • நவீன போா் சூழலில் முப்படைகள் ஒருங்கிணைந்து பல்முனை நடவடிக்கைகள் மூலம் போரை முழுமையாக எதிா்கொள்வது அவசியம்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ராணுவப் பயிற்சிக் கல்லூரிக்கு வருகை தந்தாா்.

    போரில் உயிா் தியாகம் செய்த ராணுவ வீரா்களின் நினைவுத் தூணில் அவர் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தைப் பாா்வையிட்டாா்.

    இதைத் தொடா்ந்து, முப்படை பாதுகாப்பு அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி தலைவா் லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.மோகன் முன்னிலையில் நடைபெற்ற 'இந்தியா ஐந்து டிரில்லியன் டாலா் பொருளாதார நிலையை அடைய மாநிலங்களின் வளா்ச்சி, சவால்கள் மற்றும் வாய்ப்புகள்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றினாா்.

    மாறிவரும் நவீன போா் சூழலில் முப்படைகள் ஒருங்கிணைந்து பல்முனை நடவடிக்கைகள் மூலம் போரை முழுமையாக எதிா்கொள்வது அவசியம் எனவும், சிறப்பான செயல்பாடுகள் மூலம் நாட்டின் புகழைத் தாங்கி நிற்கும் இக்கல்லூரின் செயல்பாடுகள் தொடர வேண்டும் எனவும் அமைச்சா் கூறினார். 

    • குன்னூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 28-ந் தேதி முதல் நேற்று வரை என 3 நாட்கள் ஜமாபந்தி முகாம் நடந்தது.
    • பொதுமக்களிடமிருந்து 401 மனுக்கள் பெறப்பட்டு, இதில் 49 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 28-ந் தேதி முதல் நேற்று வரை என 3 நாட்கள் நடந்த ஜமாபந்தி முகாமில் குன்னூர் தாலுக்காவில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மக்கள் பட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் திருத்தம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளித்திருந்தனர்.

    அதன்படி, நேற்று வரையில் பொதுமக்களிடமிருந்து 401 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மனுக்களில் 49 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட வருவாய்துறை அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, வட்டாச்சியர் சிவக்குமார் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
    • குன்னூர் நகராட்சி சார்பில், என் குப்பை, என் பொறுப்பு என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    ஊட்டி:

    குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது. இங்கு வசிக்கும் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். இதை தவிர்க்கும் வகையில் குன்னூர் நகராட்சி சார்பில், என் குப்பை, என் பொறுப்பு என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர மன்ற துணை தலைவர் வாசிம்ராஜா, நகர்நல அலுவலர் கோபாலகிருஷ்ணன், நகர மன்ற உறுப்பினர் மணி மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். மேலும் உணவு கழிவுகள், இறைச்சி கழிவுகளை தனியாக வழங்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் தரம் பிரித்து சரியாக வழங்குபவர்களுக்கு மாதந்தோறும் சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் தூய்மை குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

    நகரமன்ற உறுப்பினர் விசாலாட்சி தலைமையில் நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் மற்றும் நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி முன்னிலையில் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பலர் மற்றும் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் பொதுமக்களுடன் இணைந்து உறுதிமொழி எடுத்தனர்.  

    • குதிரையேற்றம், மலையேற்றம், படகு சவாரி, உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும்.
    • 77 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

     ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டனில் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி உள்ளது.

    சா்வதேச அளவில் புகழ்பெற்ற இக்கல்லூரியில் அமெரிக்கா, கென்யா, பிரிட்டன், பாகிஸ்தான் உள்பட பல வெளிநாட்டு முப்படை அதிகாரிகள் பயிற்சி பெறுகின்றனா்.

    கடந்த ஏப்ரல் மாதம் 77 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 479 அதிகாரிகள் பட்டங்கள் பெற்றனர். இந்தநிலையில் 78 -வது பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கின. பயிற்சி வகுப்புகளை கல்லூரி முதல்வா் கமாண்டென்ட் லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.மோகன் தொடங்கிவைத்தாா்.

    இதில் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையைச் சோ்ந்த 439 அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமை ச்சகத்தின் தொடா்புடைய சேவைகளைச் சோ்ந்த அதிகாரிகள் சோ்ந்துள்ளனா். 11 மாதங்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்ததும் சென்னை பல்கலைக்கழகத்தின் சாா்பில் எம்எஸ்சி டிபன்ஸ் பட்டம் வழங்கப்படும்.

    பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ள அதிகாரிகளுக்கு பாடத் திட்டம் மட்டுமல்லாமல், குதிரையேற்றம், மலையேற்றம், படகு சவாரி, சைக்கிள் சவாரி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும்.

    • கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை அரசு கண்டறிய வேண்டும்.
    • ஓராண்டு தி.மு.க. ஆட்சி என்பது மக்களுக்கு கிடைத்த தண்டனை

    குன்னூர்,

    அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்தது.

    கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    ஓராண்டு தி.மு.க. ஆட்சி என்பது மக்களுக்கு கிடைத்த தண்டனை. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் ஆனவுடன் மு.க.ஸ்டாலின் மறந்து விட்டார். குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் தருவேன் என்றார். அதை மறந்து விட்டார்.

    சொத்து வரியை உயர்த்த மாட்டேன் என்று கூறினார். பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4 குறைப்பதாக சொன்னார். அவற்றை மறந்து விட்டார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்களுக்கு கொண்டு வந்த திட்டங்கள் எல்லாவற்றையும் மூடுவிழா செய்து விட்டனர்.

    தி.மு.க. ஆட்சி விளம்பரங்களால் ஓடிக் ெகாண்டிருக்கிறது. அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு லஞ்ச ஊழல் ஒழிப்பு என்பதெல்லாம் ஊடக வெளிச்சத்துக்காக மு.க.ஸ்டாலின் செய்கிறார்.

    காவல்துறையினருக்கு அதிகாரம் இருப்பதால் அத்துமீறி செயல்படுவது மக்கள் மத்தியில் அவப்பெயரை தான் ஏற்படுத்துகிறது. காவல்துறையினர் கவனமுடன் செயல்பட வேண்டும்.

    அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. இணைய வாய்ப்பில்லை. கோடநாடு கொ லை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை அரசு கண்டறிய வேண்டும்.

    சசிகலா பா.ஜ.க. வுக்கு வந்தால் ஏற்று க்கொள்வோம் என நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறி வருகிறார். அதுகுறித்து சசிகலா தான் கூற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து டி.டி.வி. தினகரன் இன்று பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூரில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார்.

    குன்னூர் வனப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவிற்கு பரவிய காட்டுத்தீயை ஹெலிகாப்டர் மூலம் தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் சரவண மலை வனப்பகுதி உள்ளது. இப்பகுதியில் ஏராளமான அரிய மரங்கள், தேயிலை தோட்டங்கள், சிறுத்தை புலி, காட்டெருமை, கருஞ்சிறுத்தைகள், பாம்பு உள்ளிட்ட விலங்குகளும் அரிய வகை பறவைகளும் உள்ளது.

    இந்த வனப்பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 300 ஏக்கருக்கு மேல் உள்ள வனப்பகுதியில் 10 ஏக்கருக்கு மேல் தீப்பற்றி எரிந்தது. இந்த தீ மளமளவென்று பரவ தொடங்கியது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவிற்கு தீ பரவியது. இதனை அணைக்க வனத்துறையினர் முயன்றனர்.

    ஆனால் முடியவில்லை. இந்த மலை பகுதி அருகே ராணுவ அதிகாரிகள் பங்களாக்கள் உள்ளது. இதனை தொடர்ந்து குன்னூர் ராணுவ மையம் மூலம் டெல்லி தலைமை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து மத்திய அரசு உத்தரவுப்படி கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் ஊட்டி காமராஜர் சாகர் அணையில் இருந்து தண்ணீர் எடுத்து அதில் மோனோ அமோனியம் பாஸ்பேட் உள்பட ரசாயன பவுடர் கலந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.

    தீ ஓரளவு கட்டுக்குள் வந்ததால் ஹெலிகாப்டர் திருப்பி அனுப்பப்பட்டது. ஆனாலும் புகை மூட்டம் அதிகம் காணப்படுகிறது. குன்னூர் வண்டிச்சோலை, கோத்தகிரி-குன்னூர் சாலை, அட்டரி பகுதியில் புகை மூட்டம் காணப்படுகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த தீ விபத்தில் அபூர்வ மரங்கள் சேதம் அடைந்து உள்ளது. வனவிலங்குகள் உயிர் இழந்து இருக்கலாம் என தெரிகிறது.

    இதனை கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. தீப்பிடித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வனத்துக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தீ ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் முழுமையாக அணையவில்லை. தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி மீண்டும் ஹெலிகாப்டர் வரவழைக்கப்படும் என்றனர்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி வன கோட்டத்தில் ஆழியார் அருகே அடர்ந்த வனப்பகுதியில் தீப்பிடித்தது.

    இந்த தீயை அணைக்கும் பணியில் பொள்ளாச்சி வனத்துறையினர் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். ஆனாலும் முழுமையாக அணைக்க முடியவில்லை. ஒரு பகுதியில் மட்டும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மற்ற பகுதியில் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகிறார்கள்.

    ஆழியார் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஆங்காங்கே தீ எரிந்தவாறு உள்ளது. இதனையும் அணைப்பதற்காக நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.



    குன்னூரிலிருந்து ஊட்டி வரை நீராவி என்ஜின் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் ஊட்டி மலை ரெயில் முக்கிய இடம் பெறுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை 46.5 கிலோமீட்டர் கொண்ட இந்த மலை ரெயில் பாதையின் இரு புறங்களிலும் அழகிய இயற்கை காட்சிகள் காணப்படுகின்றன. இதில் மலை ரெயில் பயணத்தின்போது வனப்பகுதியில் உலாவும் காட்டு விலங்குகள் கண்டு ரசிக்கலாம்.

    மலைப்பாதை தண்டவாளத்தில் பல் சர்க்கரம் மூலம் ரெயில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. செங்குத்தாக செல்லும் இந்த தண்டவாளத்தில் ரெயில் பயணம் செய்வது திரிலான அனுபவம். இதை ரசிக்கவே சுற்றுலா பயணிகள் மலை ரெயில் பயணம் மேற்கொள்கிறார்கள். ஆசியாவிலேயே ஊட்டி மலை ரெயிலில் தான் பல்சக்கர தண்டவாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரெயிலுக்கு யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய அந்தஸ்து வழங்கியுள்ளது.

    இந்நிலையில் தென்னக ரெயில்வே சேலம் கோட்ட மேலாளர் சுப்பா ராவ் மற்றும் ரெயில்வே அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பணிமனை மற்றும் பழமை வாய்ந்த என்ஜின் அமைந்துள்ள பகுதிகளை பார்வையிட்டு ரெயில் நிலையத்தின் விரிவாக்கத்தையும் மற்றும் அங்கு நடைபெறும் பணிகளை குறித்தும் ரெயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது.

    ஊட்டியிலிருந்து கேத்தி வரை விடுமுறை நாட்களில் சிறப்பு ரெயில் விடப்பட்டு அதில் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வந்தது. தற்போது தொடர் அரசாங்க விடுமுறை நாட்களில் சிறப்பு ரெயில் ஊட்டியில் இருந்து கேத்திவரை இயக்கப்படும். நூற்றாண்டு பழமை வாய்ந்த நீராவி என்ஜின் தற்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லார் வரை இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளுக்காக குன்னூரில் இருந்து ஊட்டி வரை பழமை மிக்க நிலக்கரி நீராவி என்ஜின் இயக்கப்படும். தற்போது குன்னூர் ரெயில் நிலையத்தில் செல்பி படம் எடுக்க செல்பிஸ்பாட் உடன் வியூ பாய்ண்ட் சுற்றுலா பயணிகள் படம் எடுக்க அமைக்கப்படும்.

    மேலும் அங்கிருந்த பழமை வாய்ந்த நீராவி என்ஜின் பணிமனைகளையும் அங்கு அமைக்கப்படும் சிறப்பு பூங்காவையும் பார்வையிடும் வகையில் அமைக்கப்படும். ரன்னிமேடு ரெயில் நிலையத்தை புதுப்பித்து அங்கு சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுப்பதற்காகவும் மற்றும் நவீன இருக்கை வசதிகள் செய்யப்பட்டு செல்பி ஸ்பாட் அமைக்கப்படும். அக்டோபர் மாதம் முதல் மலைரெயில் கட்டணம் உயர்த்தப்படுவது சுற்றுலா பயணிகளுக்கு இந்த கட்டண உயர்வு பெரிதும் பாதிக்காது. குன்னூர் மேட்டுப்பாளையம் வரை செல்ல கூடிய பயணிகளுக்கு டிக்கெட்டுகள் குன்னூரில் இருந்தும் வாங்கி செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் அவர் கூறினார். #tamilnews
    ×