search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூர் வெலிங்டன் முகாமில்  முப்படை ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கியது
    X

    குன்னூர் வெலிங்டன் முகாமில் முப்படை ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கியது

    • குதிரையேற்றம், மலையேற்றம், படகு சவாரி, உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும்.
    • 77 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டனில் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி உள்ளது.

    சா்வதேச அளவில் புகழ்பெற்ற இக்கல்லூரியில் அமெரிக்கா, கென்யா, பிரிட்டன், பாகிஸ்தான் உள்பட பல வெளிநாட்டு முப்படை அதிகாரிகள் பயிற்சி பெறுகின்றனா்.

    கடந்த ஏப்ரல் மாதம் 77 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 479 அதிகாரிகள் பட்டங்கள் பெற்றனர். இந்தநிலையில் 78 -வது பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கின. பயிற்சி வகுப்புகளை கல்லூரி முதல்வா் கமாண்டென்ட் லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.மோகன் தொடங்கிவைத்தாா்.

    இதில் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையைச் சோ்ந்த 439 அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமை ச்சகத்தின் தொடா்புடைய சேவைகளைச் சோ்ந்த அதிகாரிகள் சோ்ந்துள்ளனா். 11 மாதங்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்ததும் சென்னை பல்கலைக்கழகத்தின் சாா்பில் எம்எஸ்சி டிபன்ஸ் பட்டம் வழங்கப்படும்.

    பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ள அதிகாரிகளுக்கு பாடத் திட்டம் மட்டுமல்லாமல், குதிரையேற்றம், மலையேற்றம், படகு சவாரி, சைக்கிள் சவாரி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும்.

    Next Story
    ×