குன்னூர் காட்டேரி பூங்காவில் விவசாயிகளுக்கான பயிற்சி

இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் பயிற்சி குன்னூர் காட்டேரி பூங்காவில் நடைபெற்றது. விவசாயிகளுக்கு இயற்கை உரம் தயாரித்தல், உயிர் உரங்களின் பயன்பாடு பற்றி விஞ்ஞானிகள் விளக்கி கூறினர்.
குன்னூர் காட்டேரி பூங்காவில் விவசாயிகளுக்கான பயிற்சி
Published on

அரவேணு :

கோத்தகிரி உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கான இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் பயிற்சி குன்னூர் காட்டேரி பூங்காவில் நடைபெற்றது. விவசாயிகளுக்கு இயற்கை உரம் தயாரித்தல், உயிர் உரங்களின் பயன்பாடு பற்றி விஞ்ஞானிகள் விளக்கி கூறினர்.

கோத்தகிரி தோட்டகலைதுறை மூலம் நடைபெற்ற இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆத்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை, பிரவீணா ஆகியோர் செய்திருந்தனர். இதில் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதி இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனர். நீலகிரி தோட்டகலை இயற்கை விவசாய சங்க செயலாளர் ராம்தாஸ் நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்து விளக்கி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com