search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Convocation"

    • 300 மாணவர்கள் பட்டங்களை ெபற்றனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் சேலம் மெயின் ரோட்டில் உள்ள பொதிகை என்ஜினீயரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் பக.கணேஷ்மல் தலைமை தாங்கினார். பொருளாளர் கே.சி.எழிலரசன் முன்னிலை வகித்தார். அனைவரையும் கல்லூரி முதல்வர் எம்.பிரபாகரன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் உதவி கலெக்டர் ஆர். வில்சன் ராஜசேகர், கலந்து கொண்டு 300 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் வி.கே. ஆனந்த், சாக்‌ஷிகுமார், குஷால்சந்த் ஜெயின், ஸ்ரீபால் ஜெயின், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இறுதியில் செயலாளர் ஏலகிரி செல்வம் நன்றி கூறினார்.

    • திருச்சி கேர் கல்வி குழுமத்தின் 11 வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
    • இதில் ஐ.பி.எம். மேலாண்மை இயக்குனர் (பணிப்பாளர்) டாக்டர் சுப்பிரமணி ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு எம். பி.ஏ., எம். இ., பி.இ. பி.டெக். முடித்த மாணவ மாணவிகள் 342 பேருக்கு பட்டங்கள் வழங்கி பேசினார்.

    திருச்சி,

    திருச்சி கேர் கல்வி குழுமத்தின் 11 வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு கேர் கல்வி குழுமங்களின் முதன்மை நிர்வாக இயக்குனர் பிரதீவ் சந்த் முன்னிலை வகித்தார். முன்னதாக இயக்குனர் சாந்தி வரவேற்றார். கல்விக் குழுமங்களின் டீன் பசும்பொன் பாண்டியன், கட்டிட கலைத்துறை முதல்வர் காட்வின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இதில் ஐ.பி.எம். மேலாண்மை இயக்குனர் (பணிப்பாளர்) டாக்டர் சுப்பிரமணி ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு எம். பி.ஏ., எம். இ., பி.இ. பி.டெக். முடித்த மாணவ மாணவிகள் 342 பேருக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். அப்போது, மாணவர்கள் தங்களின் தொழில் தேர்வுகளை ஆர்வத்துடன் தேர்வு செய்ய வேண்டும். அதில் கவனத்துடன் தொழில்நுட்ப மாற்றங்களை கற்றுக்கொண்டு நவீன வசதிகளை நேர்மறையாக பயன்படுத்திக் கொண்டால் நீங்கள் நினைத்ததை விடவும் அதிகம் சாதிக்க முடியும் என்றார்.

    விழாவில் கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் பெற்றோர்கள் திரளாக பங்கேற்றனர்.




    • நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறி யியல் கல்லூரியில் 16-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
    • தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி டீன் பீட்டர் தேவதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 200 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    நாசரேத்:

    நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறி யியல் கல்லூரியில் 16-வது பட்டமளிப்பு விழா நடந்தது.

    நாசரேத் திருமண்டல உப தலைவர் தமிழ் செல்வன் தலைமை தாங்கினார்.கல்லூரி தாளாளர் ஜெயக்குமார் ரூபன் வரவேற்று பேசினார். தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி டீன் பீட்டர் தேவதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 200 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் திருமண்டலகுருத்துவ செய லாளர் இம்மானுவேல்வான் ஸ்டக், திருமண்டல'லே' காரியதரிசி கிப்ட்சன், திருமண் டல உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிக ளின் மேலாளர் பிரேம்குமார் ராஜசிங், ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி தா ளாளர் ஜாண்சன், கல்லூரி ஆட்சிமன்றகுழு உறுப்பினர் கள், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாசரேத் சேகர கமிட்டி உறுப் பினர்கள் கலந்து கொண்ட னர். முடிவில் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

    • நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் நாடார் மஹாஜன சங்கத்தின் அய்யாவைகுண்டர் ஐ.டி.ஐ செயல்பட்டு வருகிறது
    • ஐ.டி.ஐ-ன் பட்டமளிப்பு விழா இணைச் செயலாளர் எம்.ரோச் தலைமையில் நடைபெற்றது.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் நாடார் மஹாஜன சங்கத்தின் அய்யாவைகுண்டர் ஐ.டி.ஐ செயல்பட்டு வருகிறது. இந்த ஐ.டி.ஐ-ன் பட்டமளிப்பு விழா இணைச் செயலாளர் எம்.ரோச் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் படித்து முடித்த மாணவர்களுக்கு ஐ.டி.ஐ -ன் புரவலரும், பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் தர்மகர்த்தா வுமான மருத்துவர் எம்.ஜெபஸ்டின் ஆனந்த் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மதிப்பெண் தரவரிசையில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு மதர் இந்தியா இண்டஸ்ட்ரீஸ் இயக்குனர் தெரன்ஸ் பரிசுகள் வழங்கி பாராட்டி னார்.

    விழாவில் கள்ளிகுளம் டி.எம்.பி.வங்கி மேலாளர் அய்யனார் இளையரசன், அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஜாண்ததேயுஸ், முன்னாள் மாணவர் மனோஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஐ.டி.ஐ. முன்னாள் முதல்வர் டி.சி.ஸ்டீபன் வரவேற்றார். ஆசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்.

    • கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்றது.
    • பட்டமளிப்பு விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 17 மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.

    கரூர் :

    கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் வின்சென்ட் வரவேற்று பட்டமளிப்பு விழா அறிக்கையை வாசித்தார்.

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், 1947-ல் சுதந்திரத்திற்கு பிறகு எவ்வாறு இந்தியா கல்வி தரத்தில் உயர்ந்து உலகில் முக்கியமான இடத்தில் உள்ளதையும், மேலும் மாணவர்கள் பன்முக தன்மை கொண்டவர்களாக இருக்க வேண்டியதன் முக்கியதுவத்தையும் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். புதிய கல்விக் கொள்கையில் உள்ள முக்கிய அம்சங்களை பற்றியும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.

    பட்டமளிப்பு விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 17 மாணவர்கள் பாராட்டப்பட்டனர். இவ்விழாவில் 554 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இறுதியில் பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    • வருகிற 18-ந் தேதி நடக்கிறது
    • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்

    வேலூர்:

    வி.ஐ.டி.யின் 37-வது பட்டமளிப்பு விழா வரும் 18-ந் தேதி வேலூர் வி.ஐ.டி.யில் நடைபெற உள்ளது. பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் திரு.ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசுகிறார்.

    பட்டமளிப்பு விழா

    வி.ஐ.டி. வேந்தர் டாக்டர். கோ.விசுவநாதன் பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்க உள்ளார். பட்டமளிப்பு விழாவில் 215 ஆராய்ச்சி மாணவ, மாணவியர் , தங்கப்பதக்கம் பெற்ற 62 மாணவ, மாணவிகள் உள்பட 8161 மாணவ-மாணவிகள் பட்டம் பெற உள்ளனர்.

    மேலும் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த அமெரிக்காவின், தேசிய அறிவியல் அமைப்பின் இயக்குனர் டாக்டர். சேதுராமன் பஞ்சநாதனுக்கு வி.ஐ.டி.யின் பட்டமளிப்பு விழாவில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் டாக்டர். ஸ்ரீவாரி சந்திரசேகர் மற்றும் அமெரிக்க நாட்டின் சென்னைக்கான துணைத் தூதர் ஜூடித் ரவின் பட்டமளிப்பு விழாவில் கவுரவ விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

    வி.ஐ.டி. வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன், வி.ஐ.டி. துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் சமீபத்தில் மாண்புமிகு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கவர்னர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

    • திருச்சி தேசிய தொழில் நுட்பக்கழக 18-வது பட்டமளிப்பு விழாவில் 1977 பேருக்கு பட்டங்களை அதன் தலைவர் பாஸ்கர் பட் வழங்கினார்
    • நம்பிக்கை, பொருத்தம், நம்பகத்தன்மை, பேச்சுவார்த்தைகள், சவால்கள் மற்றும் விநியோகம் அகியவற்றின் மீது பட்டதாரி மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று சிறப்பு விருந்தினர் பேசினார்

    திருச்சி:

    திருச்சி தேசிacய தொழில் நுட்பக்கழகத்தில் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் திருச்சி என்.ஐ.டி. தலைவர் பாஸ்கர் பட் கலந்துகொண்டு பி.ஆர்க்கில் 38 பேர், பி.டெக்கில் 881 பேர், எம்.டெக்கில் 572 பேர், எம்.எஸ்சியில் 92 பேர், எம்.பி.ஏ.வில் 96 பேர் உள்பட 1977 பட்டதாரிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் 131 பேருக்கு டாக்டர் பட்டங்களை வழங்கினார்.

    மேலும் என்.ஐ.டி. தலைவரின் தங்கப்பதக்கத்தை பி.டெக். மெட்டலர்ஜிக்கல் மற்றும் மெட்டீரியல்ஸ் பிரிவு மாணவி கிமாரா பிரசாத் சூரியராவுக்கு ஷியாம் சீனிவாசன் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    விழாவில், பெடரல் வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அலுவலருமான ஷியாம் சீனிவாசன் பேசுகையில், நம்பிக்கை, பொருத்தம், நம்பகத்தன்மை, பேச்சுவார்த்தைகள், சவால்கள் மற்றும் விநியோகம் அகியவற்றின் மீது பட்டதாரி மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

    எந்த துறையில் சாதிக்க வேண்டும் என்றாலும், அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒன்றில் சரிவை சந்தித்தாலும் வெற்றியை நோக்கி செல்ல முடியாது. நிறுவனங்களுக்கு பிராண்டட் என்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் தங்களுக்கான பிராண்டட் யார் என்பதை தேர்வு செய்து செயல்பட வேண்டும்.

    அப்துல்கலாம், சச்சின் டெண்டுல்கர், மும்பை டப்பாவாலா என சாதனையாளர்கள் யாரை வேண்டுமானாலும் முன்னுதாரணமாக கொண்டு தங்களது வளர்ச்சியை நிலைநிறுத்த வேண்டும். இக்கட்டான சூழ்நிலையை எதிர்த்து போராடி உயர் தரத்துடன் வெளிவருவதால் பட்டதாரி மாணவர்கள் சிறந்த முன்னோடிகளை தேர்வு செய்து அவர்களது வாழ்க்கையில் இருந்து சிறந்தவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

    திருச்சி என்.ஐ.டி. தலைவர் பாஸ்கர் பட் பேசுகையில், இந்தியாவில் உள்ள என்.ஐ.டி.க்களில் திருச்சி முதலிடத்தை பெற்றிருப்பது பாராட்டுதலுக்குரியது. மாணவர்கள் அறிவை மேம்படுத்தும் வகையில், நவீன உள்கட்டமைப்புகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதிநவீன உந்து சக்திக்கான ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தை வளர்ப்பதற்காகவும் திருச்சி என்.ஐ.டி. தனது பங்களிப்பை வழங்கி வருகிறது என்றார்.

    திருச்சி என்.ஐ.டி. இயக்குனர் அகிலா பேசுகையில், ஒருங்கிணைந்த எம்.டெக்., பி.எச்.டி. படிப்புகளுடன் தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்துவதிலும் முன்னிலை வகிக்கிறது.

    தென்னிந்தியாவில் 67 கல்லூரிகள், 15 தொழில்கள் மற்றும் 5 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு பரிமாணமங்களில் வேலை வாய்ப்புகளை என்.ஐ.டி. உருவாக்கியுள்ளது என்றார்.

    விழாவில் பல்வேறு துறைகளின் புல முதன்மையர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 27-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், 2500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. #SathyabamaUniversity #SathyabamaConvocation
    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி சாலை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 27-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் அக்கல்லூரியின் வேந்தர் ரெமிபாய் ஜேப்பியார், நிகர்நிலை பல்கலைக்கழக தலைவர் மேரி ஜான்சன், இணை வேந்தர் மரியஜீனா ஜான்சன், இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத்தலைவர் பூனியா, திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனர் சோமநாத், இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குனர், திரிலோச்சன் மொகாபத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.



    2470 மாணவர்களுக்கு இளநிலை பட்டமும், 86 மாணவர்களுக்கு பல் மருத்துவ பட்டமும், 85 மாணவர்களுக்கு ஆராய்ச்சி முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கிய 29 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் வி.எஸ்.எஸ்.சி. இயக்குனர் சோமநாத் மற்றும் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குனர் திரிலோச்சன் ஆகியோருக்கு பல்கலைக்கழகம் சார்பாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர் மனோகரன், இணை வேந்தர் சசி பிரபா, பதிவாளர் S.S. ராவ், ஆராய்ச்சி இயக்குனர் ஷீலா ராணி, நிர்வாக இயக்குனர் லோக சண்முகம், மாணவ மாணவிகளின் டீன் சுந்தரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



    நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத்தலைவர் பூனியா, மாணவ மாணவிகள், பெற்றோரையும், அவர்கள் துறை சார்ந்த பேராசிரியர்களை என்றும் மறவாமல் வாழ்க்கையில் மேன்மையடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மருத்துவ படிப்பிற்கு நீட் என்னும் தகுதி தேர்வு நடைபெறுவது போல், பொறியியல் படிப்பிற்காக நீட் தேர்வு நடத்தப்படும் என்று கூறினார். மேலும், இந்த தேர்வானது வருகின்ற கல்வியாண்டு, அதாவது 2019 ஆண்டு முதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். #SathyabamaUniversity #SathyabamaConvocation
    ×