search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Therkukallikulam"

    • நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற் றத்துடன் தொடங்கியது. முன்னதாக புனித கொடி யை கோவில் தர்மகர்த்தா சேவியர் ஜமிலா தலைமை யில் பெரியவர்கள் எடுத்து வந்தனர்.

    பின்னர் புனித கொடியை அருட்தந்தை ஜெபநாதன், பங்கு தந்தை ஜெரால்டு ரவி ஆகியோர் ஜெபம் செய்து அர்ச்சித்தனர். தர்மகர்த்தா கொடியேற்றினார். அதனைத் தொடர்ந்து மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது. பின்னர் அசனவிருந்து நடை பெற்றது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும் மாலை மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது. வருகிற 28-ந் தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று இரவு 7 மணிக்கு அடைக்காலாபுரம் பங்கு தந்தை புரோமில்டன் லோபோ தலைமையில் மாலை ஆராதனை நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதரின் அலங்கார தேர்ப்பவனி நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபடுவார்கள்.

    10-ம் திருவிழா காலை 6 மணிக்கு அருட்தந்தை தேவராஜன் அடிகளார் தலைமையில் சிறப்பு திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு புனிதரின் அலங்கார தேர்ப்பவனி நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சேவியர் ஜமிலா, பங்கு தந்தை ஜெரால்டு ரவி மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    • நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் நாடார் மஹாஜன சங்கத்தின் அய்யாவைகுண்டர் ஐ.டி.ஐ செயல்பட்டு வருகிறது
    • ஐ.டி.ஐ-ன் பட்டமளிப்பு விழா இணைச் செயலாளர் எம்.ரோச் தலைமையில் நடைபெற்றது.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் நாடார் மஹாஜன சங்கத்தின் அய்யாவைகுண்டர் ஐ.டி.ஐ செயல்பட்டு வருகிறது. இந்த ஐ.டி.ஐ-ன் பட்டமளிப்பு விழா இணைச் செயலாளர் எம்.ரோச் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் படித்து முடித்த மாணவர்களுக்கு ஐ.டி.ஐ -ன் புரவலரும், பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் தர்மகர்த்தா வுமான மருத்துவர் எம்.ஜெபஸ்டின் ஆனந்த் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மதிப்பெண் தரவரிசையில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு மதர் இந்தியா இண்டஸ்ட்ரீஸ் இயக்குனர் தெரன்ஸ் பரிசுகள் வழங்கி பாராட்டி னார்.

    விழாவில் கள்ளிகுளம் டி.எம்.பி.வங்கி மேலாளர் அய்யனார் இளையரசன், அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஜாண்ததேயுஸ், முன்னாள் மாணவர் மனோஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஐ.டி.ஐ. முன்னாள் முதல்வர் டி.சி.ஸ்டீபன் வரவேற்றார். ஆசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்.

    ×