search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Church Festival"

    • நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற் றத்துடன் தொடங்கியது. முன்னதாக புனித கொடி யை கோவில் தர்மகர்த்தா சேவியர் ஜமிலா தலைமை யில் பெரியவர்கள் எடுத்து வந்தனர்.

    பின்னர் புனித கொடியை அருட்தந்தை ஜெபநாதன், பங்கு தந்தை ஜெரால்டு ரவி ஆகியோர் ஜெபம் செய்து அர்ச்சித்தனர். தர்மகர்த்தா கொடியேற்றினார். அதனைத் தொடர்ந்து மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது. பின்னர் அசனவிருந்து நடை பெற்றது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும் மாலை மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது. வருகிற 28-ந் தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று இரவு 7 மணிக்கு அடைக்காலாபுரம் பங்கு தந்தை புரோமில்டன் லோபோ தலைமையில் மாலை ஆராதனை நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதரின் அலங்கார தேர்ப்பவனி நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபடுவார்கள்.

    10-ம் திருவிழா காலை 6 மணிக்கு அருட்தந்தை தேவராஜன் அடிகளார் தலைமையில் சிறப்பு திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு புனிதரின் அலங்கார தேர்ப்பவனி நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சேவியர் ஜமிலா, பங்கு தந்தை ஜெரால்டு ரவி மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    • கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புண்ணிய ஸ்தலங்களில் சிறப்பு பெற்ற திருத்தலம் தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலயமாகும்.
    • இந்த ஆலயத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5-ந் தேதி நிறைவுபெறும்.

    வள்ளியூர்:

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புண்ணிய ஸ்தலங்களில் சிறப்பு பெற்ற திருத்தலம் தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலயமாகும்.

    இந்த ஆலயத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5-ந் தேதி நிறைவுபெறும்.

    அதன்படி வருகிற 27-ந் தேதி காலை 5.15 மணிக்கு அருட்தந்தை ஒய்.தேவராஜன் அடிகளார் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது.

    மாலை 6.30 மணிக்கு புனித கொடியேற்றம் நடைபெறுகிறது. மாதா சொரூபம் பொறிக்கப்பட்ட புனித கொடியை அருட் தந்தையர்கள் ஜெபம் செய்து அர்ச்சித்தபின்னர் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் கொடியேற்றுகிறார்.

    அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறுகிறது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    திருவிழா நாட்களில் தினமும் காலை திரியாத்திரை திருப்பலியும் மாலை மறையுரையும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது.

    ஆகஸ்டு 2-ந்தேதி 7-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு பாளையங்கோட்டை பேரருட்திரு. ஜோமிக்ஸ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது. ஆகஸ்டு 3-ந் தேதி 8-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 7.30 மணிக்கு பேரருட்திரு - இளங்கே தலைமையில் முனைவர் ஜெரால்டு.எஸ்.ரவி மறையுரையுடன் புதுநன்மை திருப்பலி நடைபெறுகிறது.

    இத்திருப்பலியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புது நன்மை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நற்கருணை சிற்றாலயம் திறப்பு மற்றும் நற்கருணைப் பவனியும் அதனைத் தொடர்ந்து நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது.

    ஆகஸ்டு 4-ந் தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 7.30மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் உறுதிப்பூசுதல் திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு பாளை மறைவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் இரக்கத்தின் ஆண்டவர் கெபி திறப்பு விழா மற்றும் சிறப்பு நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு சிபு ஜோசப் தலைமையில் மலையாளத்திருப்பலி நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு அதிசய பனிமாதா அன்னையின் அலங்காரத் தேர்ப்பவனியும் நடைபெறுகிறது. ஆகஸ்டு 5-ந் தேதி 10-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5.15 மணிக்கு பாளை மறைவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் கூட்டுத்திருப்பலி காலை7.30 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி நடைபெறும் மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீருடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஆகஸ்டு 6-ந் தேதி முதல் சனி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பங்கு தந்தை ஜெரால்டு ரவி, உதவி பங்கு தந்தை சிபு ஜோசப் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    ×