search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congress President"

    காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைவராக ஷீலா தீட்சித் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். #SheilaDikshit #DelhiCongress
    புதுடெல்லி:

    முன்னாள் மத்திய மந்திரியான அஜய் மக்கான் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒப்புதலுடன் முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் டெல்லி காங்கிரஸ் தலைவராக இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.   

    தேவேந்திர யாதவ், ராஜேஷ் லிலோதியா, ஹாருண் யூசுப் ஆகியோர் செயல் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.



    இதுதொடர்பாக, ஷீலா தீட்சித் வெளியிட்டுள்ள செய்தியில், தலைவர் பதவியை அளித்துள்ளதன் மூலம் காங்கிரஸ் கட்சி என்னை கவுரவப்படுத்தி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், டெல்லி காங்கிரஸ் தலைவராக ஷீலா தீட்சித் நியமனம் செய்யப்பட்டதற்கு முன்னாள் தலைவர் அஜய் மக்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மத்தியில் உள்ள மோடி அரசையும், டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசையும் எதிர்த்து திறம்பட செயல்படுவார் என தெரிவித்துள்ளார். #SheilaDikshit #DelhiCongress
    மானசரோவர் ஏரி நீர் மிகுந்த சாந்தமும், அமைதியுமானது. அனைத்தையும் தருவதுடன், எதையும் இழப்பதும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு, மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். #RahulGandhi #KailashMansarovar
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஏப்ரல் மாதம் கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, விபத்து ஏற்படும் நிலை உருவானது.

    அப்போது அவர் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்ள விரும்பி வேண்டினார். பின்னர் விமானம் ஹூப்ளி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. இந்த தகவலை அவரே பின்னர் தேர்தல் பிரசார கூட்டத்தில் வெளியிட்டார்.



    சிவபெருமானின் உறைவிடமாக போற்றப்படும் இந்த கைலாஷ் (கைலாய மலை) மற்றும் மானசரோவர் புனித ஏரி ஆகியவை, திபெத்துக்கு உட்பட்ட இமயமலை பகுதியில் அமைந்திருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி ராகுல் காந்தி கடந்த 31-ந் தேதி டெல்லியில் இருந்து கைலாஷ் யாத்திரை புறப்பட்டார். தற்போது அங்கே தங்கியிருக்கும் அவர் மானசரோவர் ஏரியின் புகைப்படங்களை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு, மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘மானசரோவர் ஏரி நீர் மிகுந்த சாந்தமும், அமைதியுமானது. அனைத்தையும் தருவதுடன், எதையும் இழப்பதும் இல்லை. இதில் இருந்து யாரும் குடிக்கலாம்.

    இங்கு வெறுப்பு என்பதே இல்லை. எனவேதான் இந்தியாவில் நாம் இந்த தண்ணீரை வழிபடுகிறோம்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

    கைலாஷ் அழைத்தால் மட்டுமே ஒருவரால் அங்கு செல்ல முடியும் என்று கூறியுள்ள ராகுல் காந்தி, இந்த வாய்ப்பை பெற்றதற்காக மகிழ்ச்சியடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.  #RahulGandhi #KailashMansarovar
    தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் செய்வது எந்த பலனையும் அளிக்காது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #RahulGandhi #RTIAct
    புதுடெல்லி:

    தலைமை தகவல் ஆணையர், இதர ஆணையர், மாநில தகவல் ஆணையர்கள் உள்ளிட்டோரின் ஊதியம் மற்றும் பணி தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் செய்வது குறித்த முன்மொழிவை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

    தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்யும் திட்டம் தொடர்பாக அனைத்து மாநிலங்களவை  எம்.பி.க்களுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் செய்வது எந்த பலனையும் அளிக்காது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ஒவ்வொரு இந்தியரும் உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பார்கள். ஆனால், மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக உண்மையை மறைக்கப் பார்க்கிறது.

    மக்களிடம் உண்மையை மறைக்க பாஜக முயற்சிக்கிறது. யாரும் தங்களை கேள்வி கேட்கக்கூடாது என ஆட்சியில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள்.

    இப்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. அதனால் பயனுமில்லை. எனவே, இந்த சட்டத் திருத்தத்தை அனைத்து இந்தியர்களும் சேர்ந்து கண்டிப்பாக எதிர்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். #RahulGandhi #RTIAct
    ×