search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congress march"

    • ராகுல்காந்தியிடம் மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்த காங்கிரஸ் எதிர்ப்பு
    • டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல காங்கிரஸ் எம்.பிக்கள் திட்டம்

    நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை சோனியாகாந்தி, ராகுல்காந்தி இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

    இது தொடர்பான சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டதன் அடிப்படையில் டெல்லியில் உள்ள மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஆஜராக உள்ளார்.

    இந்நிலையில்  ராகுல்காந்தியிடம் மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

    டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு இன்று காலை காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டம் நடத்த உள்ளனர். இதற்காக அனைத்து டெல்லிக்கு வருமாறு அனைத்து காங்கிரஸ் எம்பிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து இன்று காலை 10 மணிக்கு, மத்திய அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி காங்கிரஸ் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் பேரணியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த பேரணிக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டம் ஒழுங்கு நிலைமையை கருத்தில் கொண்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு காங்கிரஸ் கட்சி மீண்டும் டெல்லி காவல்துறையை அணுகியுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கிரஸ் பேரணிக்கு டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலக கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் பேரணி நடத்தினர். அப்போது 2 மாவட்ட நிர்வாகிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு ராகுல் காந்தி முடிவு எடுத்துள்ளார். அவரது முடிவை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது. எனினும் ராகுல்காந்தி தனது முடிவில் பிடிவாதமாக இருக்கிறார்.

    இந்தநிலையில் ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது. தொடர்ந்து அவர் அப்பதவியில் நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை தேனாம்பேட்டை ஏ.ஜி.-டி.எம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து காமராஜர் அரங்கம் வரையில் நேற்று பேரணி நடைபெற்றது. அப்போது வடசென்னை மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பேரணி முடிவில் காமராஜர் அரங்க வளாகத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையில் சிறப்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர்கள் சஞ்சய் தத், சிரிவல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி சமூகநலத்துறை மந்திரி கந்தசாமி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், கிருஷ்ணசாமி, தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், எச்.வசந்தகுமார், கார்த்தி ப.சிதம்பரம், டாக்டர் கே.செல்லக்குமார், பொருளாளர் நாசே ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் கே.சீரஞ்சிவி, மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராணி வெங்கடேசன், எஸ்.சி.பிரிவு மாநில அமைப்பாளர் பி.வி.தமிழ்செல்வன் உள்பட ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

    கூட்டம் தொடங்கியவுடன் வடசென்னை மாவட்ட செயலாளர் ரியாஸ் திடீரென்று உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.


    பின்னர் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் அனைவரும் ராகுல் காந்தி ராஜினாமா செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து கே.எஸ்.அழகிரி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி பேசினார்.அந்த தீர்மானம் வருமாறு:-

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு ராகுல் காந்தி பொறுப்பு ஏற்பதை காங்கிரஸ் கட்சியினர் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ராகுல் காந்தி எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டார் என்பதை இக்கூட்டம் உறுதியாக கூற விரும்புகிறது.

    இன்றைக்கு இந்தியாவுக்கு வகுப்புவாத சக்திகளால் சோதனை ஏற்பட்டிருக்கிறது. இந்த சோதனையில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்கும் ஆற்றல்மிகு தலைவராக ராகுல் காந்தி விளங்குகிறார். தற்போது ஏற்பட்டிருக்கிற தோல்வி தற்காலிக சறுக்கலே தவிர, வீழ்ச்சியல்ல. எனவே, காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிற தோல்விக்கு தலைவர் ராகுல்காந்தி காரணம் என எவ்வகையிலும் கூற முடியாது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சோதனையான நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையை தொடர்ந்து ஏற்று அவர் வழிநடத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த தீர்மான நகல் ராகுல் காந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    ×