search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "building maistry killed"

    தருமபுரியில் வீடு கட்டும் பணியின் போது மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார்.
    தருமபுரி

    தருமபுரி மாவட்டம், பழைய தருமபுரியை சேர்ந்தவர் பெருமாள் (வயது35). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவர் குமாரசாமிப் பேட்டை பகுதியில் புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டார்.  நேற்றிரவு வீட்டின் மேல்பகுதியில் தொழிலாளர்களுடன் கான்கிரீட் போட்டு கொண்டிருந்தார். அப்போது கான்கிரீட் சரியாக போடப்பட்டுள்ளதா என்று பெருமாள் பார்த்து போது திடீரென மின்சாரம் எதிர் பாராத விதமாக தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு படு காயம் ஏற்பட்டது.

    உடனே தொழிலாளர்கள் பெருமாளை மீட்டு தருமபுரி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். அப்போது போகும் வழியிலேயே ஆம்புலன்சில் பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    பெரும்பாலை அருகே கட்டிட மேஸ்திரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே உள்ள எர்ரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 45), கட்டிட மேஸ்திரி. நேற்று இரவு 11.30 மணிக்கு இவர் குடிபோதையில் இருந்தார். அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி (55) என்பவர் வீட்டுக்கு சென்ற இவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

    அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கட்டையை எடுத்து முனியப்பன் தலையில் சுப்பிரமணி தாக்கினார். சம்பவ இடத்திலேயே முனியப்பன் இறந்து போனார்.

    இந்த கொலை குறித்து பெரும்பாலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட முனியப்பனுக்கு சங்கோதி என்ற மனைவியும், அன்பரசு என்ற மகனும், அஞ்சலிதேவி என்ற மகளும் உள்ளனர்.
    மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அதியமான் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் மிட்டாநூல அள்ளி அருகே உள்ள ராஜாதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 40). கட்டிட மேஸ்திரி. இவர் சொந்தமாக நிலத்தை வாங்கி வீடுகளை கட்டி விற்பனை செய்து வந்தார். இவருக்கு நதியா என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று காலை சம்பத் தடங்கம் அருகே சத்யா நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு தண்ணீர் எடுத்து விடுவதாக சென்றார். அப்போது தண்ணீர் எடுத்து விடுவதற்காக மின் மோட்டார் சுவிட்சை ஆன் செய்யும் போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. 

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் வலியால் அலறி துடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சம்பத் மாலை பரிதாபமாக இறந்தார். 

    இந்த சம்பவம் குறித்து அதியமான் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×