search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhumi Pooja"

    • 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • 2-வது வார்டு உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட பெட்டை லைன் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சரியான நடைபாதை இல்லாததால் மழைக்காலங்களில் குழந்தைகள், முதியோர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனை கருத்தில் கொண்டு 2-வது வார்டு உறுப்பினர் விக்டர் வசந்த் கேத்தி பேரூராட்சி தலைவர் முன்னிலையில் அப்பகுதியில் நடை பாதை அமைக்க திட்டம் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பூமி பூஜை கேத்தி பேரூராட்சி தலைவர் ஹேமா மாலினி தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து பேரூராட்சி தலைவர் ஹேமா மாலினி மற்றும் 2-வது வார்டு உறுப்பினர் விக்டர் வசந்த் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

    • நாகை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரிதிவிராஜ் தலைமை வகித்தார்.
    • தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் கட்டிடம்கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் -நாகை சாலையில் அரசு கலைக் கல்லூரி எதிரே வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு ரூ.3 கோடியே 69 லட்சத்தில்கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது .

    நாகை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரிதிவிராஜ் தலைமை வகித்தார்.

    தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் கட்டிடம்கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் கோட்டாட்சியர் (பொ)மதியழகன், நகர மன்ற தலைவர் புகழேந்தி, கூட்டுறவு சங்க இயக்குனர் உதயமுருகையன், நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராஜு, பாஸ்கர்மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.14லட்சம் மதிப்பில் புதிய மேல் நிலை குடிநீர் தொட்டி கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
    • மேல்நிலை குடிநீர் தொட்டி திட்டப்பணியை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., க.செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

    பல்லடம் : 

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி தங்கம்மன் நகரில் ரூ.14லட்சம் மதிப்பில் புதிய மேல் நிலை குடிநீர் தொட்டி கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தலைமை வகித்தார்.

    பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். ஊராட்சி துணைத்தலைவர் முத்துகுமார் வரவேற்றார்.இதில் மேல்நிலை குடிநீர் தொட்டி திட்டப்பணியை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., க.செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் குமார்,பல்லடம் ஒன்றிய குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் ஊராட்சி செயலர் பிரபுசங்கர் நன்றி கூறினார்.

    • தோளூர்ப்பட்டியில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
    • இதில் தோளூர்ப்பட்டி ஊராட்சி உறுப்பினர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் தோளூர்ப்பட்டி ஊராட்சி உள்பட்ட தோளூர்ப்பட்டியில் ரூபாய் 9 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை ஒன்றிய துணை சேர்மன் பாபு என்கின்ற சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தோளூர்ப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் மேஸ்திரி முருகன் ஏழூர்ப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் தங்க. தமிழ்ச்செல்வன் பாலசமுத்திரம் பிரபு தோளூர்ப்பட்டி கதிர்வேல், சங்கரி, சேகர் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    இதில் தோளூர்ப்பட்டி ஊராட்சி உறுப்பினர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • அண்டனூர் மணக்குளம், ஆண்டனி வயல் மற்றும் இடுகாடு செல்லும் சாலையில் இணைப்பு பாலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 34 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கான பூமி பூஜையை நடைபெற்றது.
    • விழாவில் கந்தர்வக்கோட்டை ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அண்டனூர் ஊராட்சியில் அண்டனூர் மணக்குளம், ஆண்டனி வயல் மற்றும் இடுகாடு செல்லும் சாலையில் இணைப்பு பாலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 34 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கான பூமி பூஜையை நடைபெற்றது.

    விழாவில் கந்தர்வக்கோட்டை ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன்மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் இளவரசன், அதிமுக ஒன்றிய செயலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கண்மாய் பூமிபூஜையில் அழைப்பு இல்லை என கூறி அதிகாரிகளுடன் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    கொடைரோடு:

    கொடைரோடு அருகே உள்ள ராமராஜபுரம் அரண்மனை குளம் கண்மாய் புனரமைப்பு செய்ய நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.61.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதற்கான பணிகளை தொடங்குவதற்காக பூமி பூஜை அம்மையநாயக்கனூர் பேரூராட்சி சார்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். அதை தெரிந்துகொண்ட தி.மு.க. பேரூர் செயலாளர் விஜயகுமாருக்கு அழைப்பு இல்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பூமி பூஜை தொடங்குவதற்கு முன்ன தாக அரண்மனை குளத்தி ற்கு சென்று அங்குள்ள பேரூராட்சி உதவி பொறி யாளர், அலுவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் தி.மு.க. நகர செயலாளராவும் கவுன்சிலருமாக உள்ளேன்.

    எனக்கு அழைப்பு இல்லா மல் எப்படி பூமி பூஜை செய்யலாம் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நிலக்கோ ட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் (பொறுப்பு) சவுந்திர பாண்டியன் மற்றும் நிர்வாகி கள், நகரச் செயலாளர் விஜயகுமாரை சமாதானம் செய்தனர். அதன்பிறகு அரண்மனை குளம் கண்மாய் சீரமைக்கும் பணிக்கு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், செயல் அலுவலர் கலந்துகொள்ள வில்லை என்பது குறிப்பி டதக்கது. பூமி பூஜைகள் நிகழ்ச்சிக்கு வாக்குவாதம் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஒட்டன்சத்திரம் அருகே பல்வேறு கட்டிட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
    • நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் தெற்கு ஒன்றியம் சத்திரப்பட்டி ஊராட்சியில் புதிய சமுதாயக்கூடம், தங்கச்சியம்மாபட்டி ஊராட்சி ஏ.டி. காலனியில் புதிய சமுதாய கூடம், அரசப்பிள்ளை பட்டி ஊராட்சியில் புதிய ரேசன் கடை , வீரலப்பட்டி ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடம், வடகாடு ஊராட்சி கோமாளிப்பட்டியில் அரசு பள்ளி கழிவறை,

    புளிய மரத்துக்கோட்டை ஊராட்சி கோடாங்கிபட்டியில் புதிய அங்கன்வாடி கட்டிடம், புலியூர்நத்தம் ஊராட்சி முத்துநாயக்கன்பட்டியில் புதிய ரேசன் கடை மற்றும் வெரியப்பூர் ஊராட்சியில் புதிய ரேசன் கடை போன்ற பல்வேறு கட்டிட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    இதில் தி.மு.க ஒன்றிய செயலாளர் தர்மராஜன், ஒன்றியக் குழு தலைவர் அய்யம்மாள், ஒன்றியக் குழு துணை தலைவர் காயத்ரிதேவி தர்மராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதா பழனிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சாரதா சிவராஜ், முருகானந்தம், வேலுச்சாமி, சக்திவேல், தனலட்சுமி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.

    ×