search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auto break"

    சாத்தான்குளம் அருகே முன்விரோத தகராறில் லோடு ஆட்டோ உடைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள தெற்குராமசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால் நாடார். இவரது மகன் சிவக்குமார். இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்துள்ளார் . இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், முத்துலிங்கம், கஞ்சா கருப்பு என்ற சரவணன் ஆகியோருக்கும் இடையே தசரா விழாவின் போது தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்று சிவக்குமார் மனைவியை சக்திவேல் அவதூறாக பேசினாராம். இதை சிவக்குமார் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சக்திவேல், கஞ்சா கருப்பு, முத்துலிங்கம் ஆகிய 3 பேர் சேர்ந்து லோடு ஆட்டோவை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

    பதிலுக்கு எதிர்தரப்பினர் சிவக்குமார் மற்றும் கோபால் ஆகியோர் சேர்ந்து இரும்பு கம்பியால் சக்திவேலை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சக்திவேல் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து இருதரப்பினரும் தனித்தனியே தட்டார்மடம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜன் விசாரணை நடத்தி சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து முத்துலிங்கத்தை கைது செய்தனர். சக்திவேல் கொடுத்த புகாரில் சிவக்குமார், கோபால் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    கிருமாம்பாக்கத்தில் மதுகுடிக்க பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் ஆட்டோவை உடைத்து சேதப்படுத்தி டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    பாகூர்:

    கிருமாம்பாக்கம் அருகே நரம்பை நாகமுத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவியரசு (வயது34), ஆட்டோ டிரைவர். இவர் கிருமாம்பாக்கத்தில் ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரிடம் கிருமாம்பாக்கம் மெயின்ரோட்டை சேர்ந்த பிரகாஷ்(31) என்பவர் மதுகுடிக்க அடிக்கடி பணம் கேட்டு பெறுவது வழக்கம்.

    சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த பிரகாஷ் மீண்டும் மதுகுடிக்க கவியரசுவிடம் பணம் கேட்டார். அதற்கு கவியரசு சவாரிக்கு சென்று விட்டு பணம் தருவதாக தெரிவித்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த பிரகாஷ் தனக்கு உடனடியாக பணம்தர வேண்டும் என்று தகராறு செய்தார்.

    மேலும் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் இரும்பு பைப்பை எடுத்து வந்து ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். அதோடு கவியரசுவை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதுகுறித்து கவியரசு கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பிரகாசை தேடி வருகிறார்கள்.

    ×