search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Authoor"

    • நடராஜருக்கு சிறப்பு அலங்காரத்துடன் தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.
    • நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

    ஆத்தூர்:

    ஆத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர நாளன்று நடராஜர் அபிஷேகம் நடைபெற்றது. காலையில் கும்பம் வைத்து யாகபூஜைகள் நடைபெற்றது. சோமநாத சுவாமி, சோசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஆனந்த நடராஜர் சமேத சிவகாம சுந்தரி அம்பாளுக்கு ஆனி உத்திர சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நடராஜருக்கு சிறப்பு அலங்காரத்துடன் தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

    நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர் ஆத்தூர் கீழரதவீதி தெய்வத்திருவாளர்கள் வேலாயுதப்பெருமாள் பிள்ளை, ராமலெட்சுமி அம்மாள் குடும்பத்தினர் மற்றும் தேவஸ்தான பூஜா ஸ்தானீகர் ஹரிஹர சுப்பிரமணிய பட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஆத்தூர் சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    • 24 வருடங்களுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் நடந்தது.

    ஆத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் பிரசித்தி பெற்ற சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவில் உள்ளது. கற்கோவிலான இக்கோவில் மன்னர் காலத்தில் மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

    கோவிலில் பழம் பெருமையை பறைசாற்றும் பல்வேறு கல்வெட்டுகளும் உள்ளது. தாமிரபரணி ஆற்றுக் கரையோரம் அமைந்துள்ள இக்கோவில் தாமிரபரணியின் குறுக்கே பாலம் இல்லாத காலத்தில் கட்டப்பட்டிருப்பதை பலரும் வியப்புடன் பார்க்கின்றனர். 24 வருடங்களுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் நடந்தது.

    அதிகாலையிலேயே கோவில் வளாகம் முழுவதும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. கோபுர தரிசனம் செய்வதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் இரண்டு இடங்களில் படி வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அனைத்து பொதுமக்களும் எளிதாக சென்று கோபுரங்கள் அருகில் சென்று தரிசனம் செய்தனர்.

    கோவிலில் கூட்டம் அலை மோதியதால் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பெருங்குளம் 103-வது செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பிரம்மச்சாரி சுவாமிகள், டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த தலைவர் ஸ்ரீனிவாசன், தி.மு.க. மாணவரணி செயலாளர் உமரி சங்கர், ஆழ்வை கிழக்கு ஒன்றிய சதீஷ்குமார், ஆத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர்கமால்தீன்,

    புன்னைக்காயல் ஊராட்சி மன்ற தலைவர் சோபியா, ஆத்தூர் பேரூராட்சி தி.மு.க. செயலாளர் முருகானந்தம், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, திருச்செந்தூர் சரக ஆய்வாளர் செந்தில்நாயகி, ஆத்தூர் சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி தேவஸ்தான செயல் அலுவலர் ஜெயந்தி, ஆத்தூர் இன்ஸ்பெக்டர் அய்யப்பன்,

    ஆத்தூர் அ.தி.மு.க. அவைத் தலைவர் அண்ணாமலை சுப்பிரமணியன், ஆத்தூர் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் ஆண்டிப்பட்டி என்ற கண்ணன், மற்றும் மண்டகப்படிதாரர்கள், கும்பாபிஷேக திருப்பணிகள் உபயதாரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 2 ஆயிரம் ஆண்டுகள் பழம்பெருமை வாய்ந்த இந்த கோவிலில் வருகிற 13-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • நேற்று மாலை தாமிரபரணி நதிக்கரையில் இருந்து புனித தீர்த்தம் பஞ்ச வாத்தியங்கள் முழங்க நான்கு ரத வீதி வழியாக பட்டத்து யானை முன் செல்ல கொண்டு வரப்பட்டது.

    ஆத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் பிரசித்திபெற்ற சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவில் உள்ளது.

    2 ஆயிரம் ஆண்டுகள் பழம்பெருமை வாய்ந்த இந்த கோவிலில் வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதையொட்டி யாகசாலைகள் அமைப்பதற்கான தீர்த்த சங்கிரஹணம் பூஜைகள் நேற்று நடைபெற்றது.

    பூஜையில் பெருங்குளம் 103-வது செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவபிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சார்ய சுவாமிகள் பங்கேற்றார்.

    நேற்று மாலை தாமிரபரணி நதிக்கரையில் இருந்து புனித தீர்த்தம் பஞ்ச வாத்தியங்கள் முழங்க நான்கு ரத வீதி வழியாக பட்டத்து யானை முன் செல்ல கொண்டு வரப்பட்டது.

    இதில் ஆத்தூர் சைவ வேளாளர் சங்க முன்னாள் தலைவர் அண்ணாமலை சுப்பிரமணியம், ஆத்தூர் சிற்பி ஸ்ரீதர்,ஆத்தூர் சைவ வேளாளர் சங்க தலைவர் ஆண்டியப்பன் என்ற கண்ணன், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் சீனிவாசன்,

    வீர கணபதி,சுரேஷ், முத்துராமலிங்கம், வ.உ.சி இளைஞரணி மீனாட்சி சுந்தரம், வள்ளிநாயகம்,ஆத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் கமால்தீன், கவுன்சிலர் ராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×