search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆத்தூர் சோமசுந்தரி அம்பாள் கோவிலில் யாகசாலை அமைப்பதற்கான பூஜை-பெருங்குளம் செங்கோல் ஆதீனம் பங்கேற்பு
    X

    பூஜையில் பங்கேற்க வந்த பெருங்குளம் செங்கோல் ஆதீனத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி.

    ஆத்தூர் சோமசுந்தரி அம்பாள் கோவிலில் யாகசாலை அமைப்பதற்கான பூஜை-பெருங்குளம் செங்கோல் ஆதீனம் பங்கேற்பு

    • 2 ஆயிரம் ஆண்டுகள் பழம்பெருமை வாய்ந்த இந்த கோவிலில் வருகிற 13-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • நேற்று மாலை தாமிரபரணி நதிக்கரையில் இருந்து புனித தீர்த்தம் பஞ்ச வாத்தியங்கள் முழங்க நான்கு ரத வீதி வழியாக பட்டத்து யானை முன் செல்ல கொண்டு வரப்பட்டது.

    ஆத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் பிரசித்திபெற்ற சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவில் உள்ளது.

    2 ஆயிரம் ஆண்டுகள் பழம்பெருமை வாய்ந்த இந்த கோவிலில் வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதையொட்டி யாகசாலைகள் அமைப்பதற்கான தீர்த்த சங்கிரஹணம் பூஜைகள் நேற்று நடைபெற்றது.

    பூஜையில் பெருங்குளம் 103-வது செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவபிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சார்ய சுவாமிகள் பங்கேற்றார்.

    நேற்று மாலை தாமிரபரணி நதிக்கரையில் இருந்து புனித தீர்த்தம் பஞ்ச வாத்தியங்கள் முழங்க நான்கு ரத வீதி வழியாக பட்டத்து யானை முன் செல்ல கொண்டு வரப்பட்டது.

    இதில் ஆத்தூர் சைவ வேளாளர் சங்க முன்னாள் தலைவர் அண்ணாமலை சுப்பிரமணியம், ஆத்தூர் சிற்பி ஸ்ரீதர்,ஆத்தூர் சைவ வேளாளர் சங்க தலைவர் ஆண்டியப்பன் என்ற கண்ணன், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் சீனிவாசன்,

    வீர கணபதி,சுரேஷ், முத்துராமலிங்கம், வ.உ.சி இளைஞரணி மீனாட்சி சுந்தரம், வள்ளிநாயகம்,ஆத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் கமால்தீன், கவுன்சிலர் ராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×