search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AUSvWI"

    • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கிர்க் மெக்கன்சி அதிக பட்சமாக 50 ரன் எடுத்தார்.
    • கேப்டன் கம்மின்ஸ், ஹசில்வுட் தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    அடிலெய்டு:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிக் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் அடிலெய்டுவில் இன்று தொடங்கியது.

    ஆஸ்திரேலியா 'டாஸ்' வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 62.1 ஓவரில் 188 ரன்னில் சுருண்டது. கிர்க் மெக்கன்சி அதிக பட்சமாக 50 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்கள். கேப்டன் கம்மின்ஸ், ஹசில்வுட் தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 45 ரன்னில் 2 விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரராக ஆடிய ஸ்டீவ் சுமித் 12 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். லபுஷேன் 10 ரன்னில் வெளியேறினார். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்கள் எடுத்தது. கவாஜா 30 ரன்னிலும் க்ரீன் 6 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

    • ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் சமீபத்தில் ஓய்வு பெற்றார்.
    • கேமரூன் கிரீன் 4-வது வரிசையில் விளையாடுகிறார். மேத்யூ ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் சமீபத்தில் ஓய்வு பெற்றார். இதனால் அவர் இடத்தில் தொடக்க வீரராக யார் ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித் விளையாடுகிறார்.

    வெஸ்ட்இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவரில் விளையாட ஆஸ்திரேலியா சென்று உள்ளது. முதல் டெஸ்ட் வருகிற 24-ந்தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது.

    இந்த டெஸ்டில் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக ஆடுவார் என்று ஆஸ்திரேலிய தேர்வு குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி உறுதிப்படுத்தியுள்ளார். வார்னர் ஓய்வுக்கு பிறகு டெஸ்ட் தொடக்க வீரராக விளையாட ஸ்டீவ் ஸ்மித் விருப்பம் தெரிவித்து இருந்தார். தற்போது அவரது கனவு நனவாகுகிறது.

    கேமரூன் கிரீன் 4-வது வரிசையில் விளையாடுகிறார். மேத்யூ ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    முதல் டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணி வருமாறு:-

    கம்மின்ஸ் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் கிரீன், லபுஷேன், மிச்சேல் மார்ஷ், டிரெவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, ரென்ஷா, ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலண்டு, ஹாசல்வுட்.

    • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 511 ரன்னும், 2வது இன்னிங்சில் 199 ரன்னும் எடுத்து டிக்ளேர் செய்தது.
    • வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 214 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 511 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. லபுசேன் 163 ரன்னிலும், ஹெட் 175 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், டேவன் தாமஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 214 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சந்தர்பால் 47 ரன்னும், பிலிப் 43 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் லயோன் 3 விக்கெட்டும், ஸ்டார்க், நீசர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    297 ரன்கள் முன்னிலை பெற்ற அஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கவாஜா அதிகபட்சமாக 45 ரன் எடுத்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டும், ரூஸ்டன் சேஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 497 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது.

    மூன்றாம் நாள் ஆட்டநேர இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுக்கு ரன்களை எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்காட் போலண்ட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இன்னும் இரண்டு நாள் ஆட்டம் உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி எளிதில் வெற்றி பெறும் நிலை காணப்படுகிறது.

    • லபுசேன் 163 ரன்னிலும் ஹெட் 175 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 511 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

    ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    டிராவிஸ் ஹெட், லபுசேன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் சதமடித்து அசத்தினர். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 89 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்துள்ளது.

    லபுசேன் 120 ரன்னும், டிராவிஸ் ஹெட் 114 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனையடுத்து 2-வது நாளான இன்று தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 511 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. லபுசேன் 163 ரன்னிலும் ஹெட் 175 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    • முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 330 ரன்கள் எடுத்துள்ளது.
    • லபுசேன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நேற்று தொடங்கியது. இது பகல்-இரவு போட்டியாகும். இந்த போட்டிக்கு பிரத்யேகமாக பிங்க் (இளஞ்சிவப்பு) நிற பந்து பயன்படுத்தப்படும். டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா அரை சதமடித்து 62 ரன்னில் அவுட்டானார். கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அடுத்து இறங்கிய டிராவிஸ் ஹெட், லபுசேனுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் சதமடித்து அசத்தினர்.

    முதல் நாள் முடிவில் ஆச்திரேலியா அணி 89 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்துள்ளது. லபுசேன் 120 ரன்னும், டிராவிஸ் ஹெட் 114 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 199 ரன்கள் சேர்த்துள்ளது.

    • வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் 110 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
    • ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 6 விக்கெட் வீழ்த்தினார்.

    பெர்த்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 30-ந் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணி முதல் இன்னிங்சில் 598 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 283 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பின்னர் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 182 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 498 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

    இதனையடுத்து 2-வது இன்னிங்ஸ் விளையாடிய வெஸ்ட இண்டீஸ் அணியில் டேகனரைன் சந்தர்பால் 45 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ப்ரோக்ஸ் 11 ரன்னிலும் பிளாக்வுட் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் சிறப்பாக ஆடிய பிராத்வேட் சதம் அடித்தார். 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி நாளான இன்று வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிக்கு 306 ரன்கள் தேவைப்பட்டது. இதில் சதம் அடித்திருந்த கேப்டன் பிராத்வெய்ட் 110 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து களம் இறங்கிய ஹோல்டர் 3 ரன்னிலும், சில்வா 12 ரன்னிலும், அல்சாரி ஜோசப் 43 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 333 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதையடுத்து 164 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லயன் 6 விக்கெட்டும், டிராவிஸ் ஹெட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 182 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
    • பிராத்வேட் - சந்தர்பால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. சந்தர்பால் 45 ரன்னில் அவுட் ஆனார்.

    ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 30-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சில் 598 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    இதனையடுத்து முதல் இன்னிங்சில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 283 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா அணி 315 ரன்கள் முன்னிலை பெற்றது. 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 182 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 498 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

    இதனையடுத்து 2-வது இன்னிங்ஸ் விளையாடியது. பிராத்வேட் - சந்தர்பால் ஜோடி நிதானமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. சந்தர்பால் 45 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ப்ரோக்ஸ் 11 ரன்னிலும் பிளாக்வுட் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் சிறப்பாக ஆடிய பிராத்வேட் சதம் அடித்து அசத்தினார்.

    4-வது நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து உள்ளது. நாளைய கடைசி நாள் ஆட்டத்தில் 306 ரன்கள் எடுத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெரும்.

    • ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்து 598 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
    • இரண்டாவது இன்னிங்சில் இன்றைய ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்திருந்தது

    பெர்த்:

    ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 293 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 65 ரன் எடுத்தார். 3-வது வீரராக களம் இறங்கிய மார்னஸ் லபுஸ்சேன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 154 ரன்னும், ஸ்டீவ் சுமித் 59 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இரண்டாவது நாளான நேற்றைய ஆட்டத்தின்போது லபுஸ்சேன் அபாரமாக ஆடி இரட்டை சதம் எடுத்தார். அவர் 348 பந்துகளில் 20 பவுண்டரி, 1 சிக்சருடன் 200 ரன்னை கடந்தார் . 204 ரன்கள் எடுத்த நிலையில் லபுஸ்சேன் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 402 ஆக இருந்தது. இதே போல மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம் அடித்து அசத்தினார் . மறுபுறம் சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்ட்ட ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 598 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஸ்மித் 200 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீசும் சிறப்பான தொடக்கம் கண்டது. 2-வது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 25 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 74 ரன்கள் எடுத்தது. கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் 18 ரன்களுடனும் , தேஜ்நரின் சந்தர்பால் 47 ரன்களுடனும்,களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த தேஜ்நரின் சந்தர்பால் 51 ரன்களிலும் , கிரேக் பிராத்வெய்ட் 64 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை.அந்த அணியின் ஜெர்மன் பிளாக்வுட் 36 ரன்களிலும் , கைல் மேயெர்ஸ் 21 ரன்களும் ,ஜேசன் ஹோல்டர் 27 ரன்களும், புரூக்ஸ் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 283 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் , பேட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதனை தொடர்ந்து 315 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடி வரும் ஆஸ்திரேலியா, இன்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீசின் முதல் இன்னிங்சைவிட ஆஸ்திரேலியா 344 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

    • ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 598 ரன்கள் எடுத்துள்ளது.
    • அந்த அணியின் லபுஸ்சேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இரட்டை சதமடித்து அசத்தினர்.

    பெர்த்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 மற்றும் 2 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்கு 293 ரன் எடுத்திருந்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 65 ரன் எடுத்தார். 3-வது வீரராக களம் இறங்கிய மார்னஸ் லபுஸ்சேன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 154 ரன்னும், ஸ்டீவ் சுமித் 59 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய லபுஸ்சேன் சிறப்பாக ஆடி இரட்டை சதம் எடுத்தார். லபுஸ்சேன் 204 ரன்னில் அவுட்டானார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

    சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் 99 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 598 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஸ்டீவ் ஸ்மித் 200 ரன்களில் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி 74 ரன்கள் எடுத்துள்ளது. சந்தர்பால் 47 ரன்னும், பிராத்வெயிட் 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • 75 ரன்கள் குவித்த டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருதையும் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
    • ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக டேவிட் வார்னர் 75 ரன்கள் குவித்தார். இதனையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.

    முதல் ஓவரின் 5-வது பந்தில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது வெஸ்ட் இண்டீஸ். அதனையடுத்து சார்லஸ்-கிங் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கிங் ஸ்டெம்பிங் மூலம் வெளியேறினார். அடுத்த ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பூரன்(2) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். நிதானமாக விளையாடிய சார்லஸ் 30 பந்தில் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.

    அடுத்த வந்த வீரர்கள் ஹோல்டர்(16), பவல்(18), ஹோசைன் (25), சுமித் (4), என விக்கெட்டுகளை பறிக்கொடுக்க 20 ஓவரில் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்த போட்டியில் 75 ரன்கள் குவித்த டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருதையும் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

    • டிம் டேவிட் அதிரடியாக விளையாடி 20 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார்.
    • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் - கீரின் களமிறங்கினர். முதல் ஓவரில் வார்னர் 2 பவுண்டரிகள் மூலம் ரன்களை தொடங்கினர். 2-வது ஓவரில் அதிரடி ஆட்டக்காரர் கீரின் 1 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த பிஞ்ச் 15 ரன்னிலும் மேக்ஸ்வெல் 1 ரன்னிலும் வெளியேறினார்.

    ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வார்னர் அரை சதம் அடித்தார். அவர் 75 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்த வந்த டிம் டேவிட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவர் 20 பந்தில் 42 ரன்கள் குவித்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.

    ஸ்டீவ் சுமித்17 ரன்னிலும் மேத்யூ வேட் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. 

    • அதிகப்பட்சமாக கைல் மேயர்ஸ் 39 ரன்கள் எடுத்தார்.
    • ஆஸ்திரேலியா தரப்பில் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்த தொடருக்கான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கைல் மேயர்ஸ்- ஜான்சன் சார்லஸ் களமிறங்கினர். 2-வது ஓவரிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் விக்கெட்டை இழந்தது. 2 பந்துகளை சந்தித்த அவர் 3 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கிங் 12 ரன்னில் ஹசில்வுட் பந்தில் அவுட் ஆனார். நிதானமாக விளையாடிய கைல் மேயர்ஸ் 36 பந்தில் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போல்ட் முறையில் வெளியேறினார்.

    அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் பூரன் (2) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்த வந்த வீரர்கள் ரெய்மான் ரெய்பர் 19, பவல் 7, ஹோல்டர் 13 என விக்கெட்டை இழந்தனர்.

    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தனர். அதிகப்பட்சமாக கைல் மேயர்ஸ் 39 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கிறது.

    ×