search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி- 164 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
    X

    ஆஸ்திரேலியா வீரர்கள்

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி- 164 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

    • வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் 110 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
    • ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 6 விக்கெட் வீழ்த்தினார்.

    பெர்த்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 30-ந் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணி முதல் இன்னிங்சில் 598 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 283 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பின்னர் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 182 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 498 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

    இதனையடுத்து 2-வது இன்னிங்ஸ் விளையாடிய வெஸ்ட இண்டீஸ் அணியில் டேகனரைன் சந்தர்பால் 45 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ப்ரோக்ஸ் 11 ரன்னிலும் பிளாக்வுட் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் சிறப்பாக ஆடிய பிராத்வேட் சதம் அடித்தார். 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி நாளான இன்று வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிக்கு 306 ரன்கள் தேவைப்பட்டது. இதில் சதம் அடித்திருந்த கேப்டன் பிராத்வெய்ட் 110 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து களம் இறங்கிய ஹோல்டர் 3 ரன்னிலும், சில்வா 12 ரன்னிலும், அல்சாரி ஜோசப் 43 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 333 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதையடுத்து 164 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லயன் 6 விக்கெட்டும், டிராவிஸ் ஹெட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    Next Story
    ×