search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arson"

    • வில்லியனூர் அருகே முன்விரோதத்தில் மோட்டார் சைக்கிளுக்கு தீவைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • வில்லியனூர் அருகே சங்கரன்பேட்டை சிவராந்தகம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கென்னடி.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே முன்விரோதத்தில் மோட்டார் சைக்கிளுக்கு தீவைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வில்லியனூர் அருகே சங்கரன்பேட்டை சிவராந்தகம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் விக்னேஷ் (வயது26). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கந்தன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில்விக்னேஷ் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்கினார். நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் தீபிடித்து எரிந்தது. மோட்டார் சைக்கிளை கந்தன் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து விக்னேசின் தந்தை கென்னடி மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடலூர் முதுநகர் குழந்தை காலனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் கொட்டகையில் இயங்கி வந்தது.
    • தீ வைத்து எரித்த மர்ம நபர்களை உடனடியாக பிடித்து குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் குழந்தை காலனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் கொட்டகையில் இயங்கி வந்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென்று கட்சி அலுவலகம் எரிந்து சாம்பலானது. அப்போது இதனை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதிர்ச்சி அடைந்து ஏராளமானோர் திரண்டனர். ஆனால் மர்ம நபர்கள் யார் கட்சி அலுவலகத்திற்கு தீ வைத்தனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அப்பகுதி முழுவதும் தீவிரமாக தேடி வந்தனர். 


    தகவல் அறிந்த மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அப்பகுதியில் திரண்டனர். இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையும் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைசெல்வன் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கரிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை உடனடியாக பிடித்து குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்தன. மேலும் அப்பகுதி முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது.

    • கொள்ளையடிப்பதை தடுத்ததால் ஆத்திரம்: தனியார் தொழிற்சாலை குடோனுக்கு மர்ம கும்பல் தீ வைத்தனர்.
    • தொழிற்சாலை நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், காவல்துறை இணைந்து ஒரு ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்பட்டது.

    கடலூர் அருகே சிப்காட் பகுதியில் தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிலையம் 20 ஆண்டுகளுக்கு முன்பு பணிகளை தொடங்கியது. இதனை தொடர்ந்து பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு இறுதியில் தானே புயல் காரணமாக அந்த தொழிற்சாலை கடும் சேதம் ஏற்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் பாதிப்படைந்தது.அதன் பிறகு தொழிற்சாலையை தொடர முடியாத காரணத்தினால் தொழிற்சாலை நிர்வாகம் தொழிற்சாலை பணிகளை கைவிட்டது. ஆனால் சுமார் கோ1,000டி ரூபாய் மதிப்பிலான தளவாட சாமான்கள் தொழிற்சாலைக்குள் இருந்தது.

    இந்த தொழிற்சாலை 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அங்கு இருக்கும் தளவாட பொருட்கள் சமீபகாலமாக இரவு பகல் பாராமல் கொள்ளையர்கள் கொள்ளையடித்து வந்தனர். இதனை அறிந்த போலீசார் தடுக்கச் சென்ற போது அவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நடைபெற்றது.

    கடந்த வாரம் தொழிற்சாலை நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், காவல்துறை இணைந்து ஒரு ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆலோசனை கூட்டத்தில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு போலீசாரால் உரிய பாதுகாப்பு கொடுக்க முடியாது என்ற காரணத்தினால் தொழிற்சாலை நிர்வாகம் அதிலுள்ள முக்கிய தளவாட சாமான்கள் ஒரே இடத்தில் வைத்து பாதுகாப்பதற்கு அறிவுறுத்தப் பட்டது.


    இதனையடுத்து கடந்த சில நாட்களாக தொழிற்சாலையில் உள்ள முக்கிய தளவாட பொருட்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணி நடைபெற்று வந்தது. இருந்தாலும் தொழிற்சாலையின் அதிமுக்கிய பொருட்கள் அடங்கிய குடோனுக்கு2 பக்கமும் கண்டெய்னர் வைத்து பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சமூகவிரோதிகள் இன்று அதிகாலை தொழிற்சாலைக்குள் அந்த முக்கிய குடோனுக்கு தீ வைத்தனர். இதனால் தீ பற்றி முழுவதுமாக எரியத் தொங்கியது. கடலூர் சிப்காட் பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருந்தாலும் குடோனில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.


    இந்த தொழிற்சாலை 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய எண்ணை சுத்திரிகரிப்பு நிலையம் "ஹால்தியா" என்ற நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதுபோன்ற தொடர் சம்பவங்களால் இந்தப் பகுதியில் இந்த தொழிற்சாலை வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

    ×