search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arjuna award"

    பஞ்சாப்பை சேர்ந்த பாரா பேட்மிண்டன் வீரர் ராஜ்குமார், இரண்டு ஆண்டு போராட்டத்துக்கு பிறகு அர்ஜுனா விருதை விளையாட்டு துறை மந்திரியிடம் இருந்து இன்று பெற்றுக் கொண்டார். #Arjuna Award #RajKumar #RajyavardhanSinghRathore
    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். பாரா பேட்மிண்டன் வீரரான இவர் கடந்த 2015ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற பாரா பேட்மிண்டன் உலக சாமியன்ஷிப் தொடரில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார்.

    அந்த ஆண்டு விளையாட்டு துறை அமைச்சகம் வழங்கிய அர்ஜுனா விருது பெற்றோருக்கான பட்டியலில் இவரது பெயர் இடம் பெறவில்லை. இதையடுத்து, அவர் டெல்லி ஐகோர்ட்டில் விளையாட்டு துறை அமைச்சகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். விசாரணை முடிவில் ராஜ்குமாருக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது.



    இந்நிலையில், டெல்லியில் மத்திய விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரதோர் இன்று ராஜ்குமாரை வரவழைத்து அர்ஜூனா விருதை வழங்கினார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

    அர்ஜூனா விருது பெற்றது குறித்து ராஜ்குமார் கூறுகையில், நான் இந்த விருதை பெறுவதற்கு மிக்க உதவியாக இருந்த எனது பயிற்சியாளருக்கு இந்த எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். #Arjuna Award #RajKumar #RajyavardhanSinghRathore
    அர்ஜூனா விருதுக்கு எனது பெயர் தேர்வு செய்யப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் தெரிவித்துள்ளார். #ArjunaAward #HimaDas
    புதுடெல்லி:

    ஜூனியர் உலக தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தவரும், சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரு தங்கம் மற்றும் 2 வெள்ளிப்பதக்கம் வென்றவருமான இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் உள்பட 20 பேரின் பெயர் இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    அவருக்கு விருது கிடைப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்ட நிலையில் அசாமை சேர்ந்த 18 வயதான ஹிமா தாஸ் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு எனது பெயர் தேர்வு செய்யப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அடுத்த ஆண்டு எனது பெயர் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படலாம் என்று நினைத்தேன். எனக்குரிய இந்த ஆண்டு போட்டிகள் நிறைவு பெற்று விட்டது. அடுத்த ஆண்டில் தெற்காசிய விளையாட்டு போட்டி, ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆகியவை நடக்க இருக்கிறது. அதற்கு தகுந்தபடி திட்டமிட்டு தயாராகுவேன்’ என்று தெரிவித்துள்ளார்.  #ArjunaAward #HimaDas
    ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா உள்ளிட்ட 20 வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. #SmritiMandhana #HimaDas
    புதுடெல்லி:

    மத்திய அரசால் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம்.

    இந்த விருதுக்கான பெயரை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும். வீரர்களின் செயல்பாட்டை ஆராய்ந்து மத்திய அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். 



    இந்நிலையில், ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா உள்பட 20 வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    இதில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஸ்மிருதி மந்தனா, ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, ஜின்சன் ஜான்சன், தடகள வீராங்கனை ஹீமா தாஸ் மற்றும் டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா, ஹாக்கி வீரர் மன்பிரீத் சிங் உள்ளிட்ட 20 பேருக்கு அர்ஜூனா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. #SmritiMandhana #HimaDas
    ×