என் மலர்
செய்திகள்

அர்ஜூனா விருதை எதிர்பார்க்கவில்லை - ஹிமா தாஸ் சொல்கிறார்
அர்ஜூனா விருதுக்கு எனது பெயர் தேர்வு செய்யப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் தெரிவித்துள்ளார். #ArjunaAward #HimaDas
புதுடெல்லி:
ஜூனியர் உலக தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தவரும், சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரு தங்கம் மற்றும் 2 வெள்ளிப்பதக்கம் வென்றவருமான இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் உள்பட 20 பேரின் பெயர் இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு விருது கிடைப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்ட நிலையில் அசாமை சேர்ந்த 18 வயதான ஹிமா தாஸ் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு எனது பெயர் தேர்வு செய்யப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அடுத்த ஆண்டு எனது பெயர் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படலாம் என்று நினைத்தேன். எனக்குரிய இந்த ஆண்டு போட்டிகள் நிறைவு பெற்று விட்டது. அடுத்த ஆண்டில் தெற்காசிய விளையாட்டு போட்டி, ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆகியவை நடக்க இருக்கிறது. அதற்கு தகுந்தபடி திட்டமிட்டு தயாராகுவேன்’ என்று தெரிவித்துள்ளார். #ArjunaAward #HimaDas

Next Story