search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anna birthday"

    காஞ்சீபுரத்தில் நாளை அண்ணா பிறந்த நாள் கூட்டம் நடக்கிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். #edappadipalanisamy

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    காஞ்சீபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார். இதற்காக அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

    முன்னதாக காஞ்சீபுரத்துக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட எல்லையான படப்பையில் பூரண கும்ப மரியாதையுடன் மேள தாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பின்னர் வாலாஜாபாத், காஞ்சீபுரம் டோல்கேட் பகுதிகளிலும் முதல்- அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்கு செல்லும் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    பின்னர் காஞ்சீபுரம் ரங்கசாமி குளம் அருகே காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் அமைக்கப்பட்டு உள்ள கல்வெட்டினைத் திறந்து வைத்து அ.தி.மு.க. கொடியினை ஏற்றி வைக்கிறார்.

    இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி காஞ்சீபுரம் தேரடி ஆஞ்சநேயர் கோவிலில் சாமி கும்பிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குகிறார்.

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 501 சதுர அடி பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கூட்டரங்கினையும் அவர் திறந்து வைக்கிறார்.

    நிகழ்ச்சியையொட்டி காஞ்சீபுரம் மேற்கு மாவட்டத் திற்குட்பட்ட பகுதிகளில் பிரம்மாண்டமான பதாகைகள், தோரணங்கள், கட்சிக் கொடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத்.பா.கணேசன் செய்து வருகிறார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பெஞ்சமின், கொள்கை பரப்புச் செயலாளர்வைகைச் செல்வன், மாவட்டச் செய லாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம்.

    அமைப்புச் செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி, மரகதம் குமரவேல் எம்பி, பழனி எம்.எல்.ஏ., நிர்வாகிகள் கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், காஞ்சி பன்னீர் செல்வம், குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, தும்பவனம் ஜீவானந்தம், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, அத்திவாக்கம் ரமேஷ், அக்ரி நாகராஜன், என்.பி.ஸ்டாலின், ஆர்.டி. சேகர், ஆர்.வி.ரஞ்சித்குமார், கரூர் மாணிக்கம், மனோகரன், ராஜசிம்மன், ஜெயராஜ், பாலாஜி, விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். #edappadipalanisamy

    காஞ்சீபுரத்தில் வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்காக வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பது என்று மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்த நாள் விழா நடக்கிறது. இதையொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சின்ன காஞ்சீபுரம் பகுதியில் அமைந்துள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் ரங்கசாமி குளம் பகுதியில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்டமான கல்வெட்டினை திறந்து வைத்து அதிமுக கொடியேற்றுகிறார்.

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிகாக கட்டப்பட்ட பல்நோக்கு கூட்ட அரங்கத்தினை திறந்து வைக்கிறார். மாலையில் காஞ்சீபுரம் பஸ் நிலையம் எதிரே நடைபெறும் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். முதல்வர் வருகை குறித்து ஆலோசனைக் கூட்டம் காஞ்சீபுரத்தில் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத்.பா.கணேசன் தலைமையில் நடைபெற்றது.

    அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம் முழுவதும் சிறப்புறக் கொண்டாடப்பட வேண்டும். முதல்வருக்கு காஞ்சீபுரம் நகர எல்லையில் மேள தாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் அமைச்சர் பெஞ்சமின், அமைப்புச் செயலாளர்கள் வி.சோம சுந்தரம், மைதிலி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாணவரணி செயலாளர் வள்ளிநாயகம், நிர்வாகிகள் காஞ்சி பன்னீர்செல்வம், அத்திவாக்கம் ரமேஷ், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, அக்ரி நாகராஜன், குண்ண வாக்கம் கிருஷ்ணமூர்த்தி, கரூர் மாணிக்கம், ராஜசிம்மன், பாலாஜி, ஜெயராஜ், மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ×