search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anna arivalayam"

    முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆர். கழகத் தலைவருமான ஆர்.எம்.வீரப்பனின் 93-வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. கலைஞர் அரங்கில் ஆர்.எம்.வீரப்பன் பிறந்தநாள் விழா எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் நடக்கிறது.
    சென்னை:

    முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆர். கழகத் தலைவருமான ஆர்.எம்.வீரப்பனின் 93-வது பிறந்தநாள் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை காலை அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களுக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

    பின்னர் தியாகராய நகர் திருமலைப்பிள்ளை தெருவில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். எம்.ஜி.ஆர். கழக நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள், பல்வேறு கட்சி பிரமுகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

    மாலை 6 மணிக்கு தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் ஆர்.எம்.வீரப்பன் பிறந்தநாள் விழா எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் நடக்கிறது. விழாவுக்கு நீதிபதி எஸ்.மோகன் தலைமை வகிக்கிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தொழிலதிபர் பழனி பெரியசாமி, எம்.ஜி. ஆர். கழக மகளிர் அணி செயலாளர் அபிராமி உள்பட பலர் ஆர்.எம். வீரப்பனுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

    ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவன செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் வரவேற்று பேசுகிறார். சாரதா நம்பி ஆரூரன் தமிழ்த் தாய் வாழ்த்து பாடுகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர். கழக பொதுச் செயலாளர் டி.ராமலிங்கம் செய்துள்ளார்.
    திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நாளை சென்னையில் நடைபெற உள்ள கூட்டத்தில், மு.க அழகிரி பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது தெரியவரும். #DMK #MKStalin
    சென்னை:

    திமுக தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட பின்னர், அவர் தலைமையில் நாளை அக்கட்சி மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு நடக்க உள்ளது. 

    கடந்த 5-ம் தேதி கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி நடத்திய மு.க அழகிரி, “பேரணியில் பங்கேற்ற 1 1/2 லட்சம் பேர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா?” என மறைமுகமாக ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், கட்சி நிர்வாகிகள் யாரும் அழகிரி பேரணியில் பங்கேற்றனரா? என்ற விசாரணையையும் ஸ்டாலின் நடத்தியதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், அப்படி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றது தெரிய வரும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நாளை நடக்க உள்ள கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    தி.மு.க. தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்திற்கு சென்று தலைவர் அறையில் கருணாநிதி அமர்ந்திருந்த இருக்கையில் இன்று மாலை அமர இருக்கிறார். #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.30 மணிக்கு தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வர உள்ளார். இதுவரை தலைவர் அறையில் கருணாநிதி அமர்ந்திருந்த இருக்கையில் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அமர இருக்கிறார். உடனடியாக அவர் கட்சி பணிகளை தொடங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தலைவர் இருக்கையில் அமரும் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. மூத்த நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் வாழ்த்து தெரிவிக்க உள்ளனர். தி.மு.க. நிர்வாகிகளிடம் இருந்து புத்தகங்களை மு.க.ஸ்டாலின் பரிசாக பெற உள்ளார். #DMK #MKStalin

    ×