search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andal"

    • ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து, வழிபாடு செய்ய வேண்டும்.
    • ஏகாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது.

    ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து, வழிபாடு செய்ய வேண்டும்.

    ஏகாதசி அன்று துளசியைப் பறிக்கக் கூடாது. முதல் நாளே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    மஹாவிஷ்ணுவை முறைப்படி பூஜை செய்ய வேண்டும்.

    முடிந்தவர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும்.

    முடியாத பட்சத்தில் ஸ்வாமிக்குப் பழங்களை நைவேத்தியம் செய்து விட்டு உண்ணலாம்.

    ஏகாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது.

    இரவில் பஜனை அல்லது மஹாவிஷ்ணுவின் கதைகளைக் கேட்பது முதலியவற்றில் ஈடுபட்டு கண்விழிக்க வேண்டும்.

    கோபம், கலகம், காமம் முதலியவற்றை விட்டுவிட வேண்டும்.

    துவாதசி அன்று காலையில் ஸ்வாமியைப் பூஜை செய்து விட்டுப் பிறகே உண்ண வேண்டும்.

    ஓர் ஏழைக்காவது உணவு தந்து, அதன் பிறகே நாம் உண்பது நல்லது.

    அன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை உண்பது நல்லது.

    • அதன் பலனாக அவன் முன்னோர்கள் நரகத்தில் இருந்து விடுதலை பெற்று, மகனுக்கு ஆசி கூறினார்கள்.
    • ஆம், நமக்கும் நம் முன்னோர்களுக்கும் நற்கதி தரக் கூடிய ஏகாதசி இது.

    கம்பம் எனும் நகரை மன்னர் வைகானஸர் ஆண்டு வந்தார்.

    ஒரு நாள் இரவு. மன்னர் ஒரு கனவு கண்டார்.

    அது அவருக்குத் துயரத்தை விளைவித்தது.

    பொழுது விடிந்ததும் வேதத்தில் கரை கண்டவர்களை அழைத்தார்.

    ''உத்தமர்களே! நேற்று இரவு நான் ஒரு கெட்ட கனவு கண்டேன். என் முன்னோர்கள் நரகத்தில் விழுந்து துயரப்படுகிறார்கள்.

    என்னைப் பார்த்து, 'மகனே! நாங்கள் படும் துயரம் உன் கண்ணில் படவில்லையா? இந்த நரகத்தில் இருந்து எங்களை விடுவிக்க ஏதாவது வழி செய்ய மாட்டாயா?' என்று கதறி அழுதார்கள்.

    இதற்கு என்ன அர்த்தம்? நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்" என்று வேண்டினார் மன்னர்.

    ''மன்னா! பர்வதர் என்று ஒரு முனிசிரேஷ்டர் இருக்கிறார்.

    உன் முன்னோர்கள் ஏன் நரகத்தில் இருக்கிறார்கள்? அவர்களை எப்படிக் கரை ஏற்றுவது என்பதெல்லாம் அவருக்குத்தான் தெரியும்.

    அவரிடம் போ!" என்று வழி காட்டினார்கள் உத்தம வேதியர்கள்.

    மன்னர் உடனே பர்வதரைத் தேடிப் போனார். அவரிடம் தான் கண்ட கனவைச் சொல்லி, தன் வருத்தத்தை நீக்குமாறு வேண்டினார்.

    உடன் கண்களை மூடி சிறிது நேரம் தியானித்த பர்வத முனிவர் பின் கண்களைத் திறந்து, எதிரில் கை கூப்பி நின்றிருந்த மன்னரிடம் சொல்லத் தொடங்கினார்

    ''வைகானஸா! உன் தந்தை, அரசன் என்ற பதவி போதையில் மனைவியை அலட்சியம் செய்தான்.

    'இல்லற தர்மத்தில் ஈடுபடுபவர்கள், நல்ல பிள்ளை பிறக்க வேண்டும் என்பதற்காக மனைவியுடன் சேர வேண்டிய காலங்களில் சேர வேண்டும்' என்பதை மறந்தான். அந்தப் பாவம்தான் அவனுக்கு நரகம் கிடைத்திருக்கிறது.'

    ''நீ உன் மனைவி மக்களுடன், மோட்ச ஏகாதசி விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து, பரவாசுதேவனான பகவானை பூஜை செய்! அதன் பலனை உன் முன்னோர்களுக்கு அர்ப்பணம் செய்! அவர்களுக்கு நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்!" என்று சொன்னார் பர்வதர்.

    வைகானஸனும் மோட்ச ஏகாதசி விரதம் இருந்து, பலனை முன்னோர்களுக்கு அர்ப்பணித்தார்.

    அதன் பலனாக அவன் முன்னோர்கள் நரகத்தில் இருந்து விடுதலை பெற்று, மகனுக்கு ஆசி கூறினார்கள்.

    அன்று முதல் வைகானஸன் மோட்ச ஏகாதசியைக் கடைப்பிடித்துச் சிறப்படைந்தார்.

    ஆம், நமக்கும் நம் முன்னோர்களுக்கும் நற்கதி தரக் கூடிய ஏகாதசி இது.

    • ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும்.
    • ஒரு சில வருடங்களில், ஒரு ஏகாதசி அதிகமாகி இருபத்தைந்து ஏகாதசிகளும் வருவதுண்டு.

    ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும்.

    ஒரு சில வருடங்களில், ஒரு ஏகாதசி அதிகமாகி இருபத்தைந்து ஏகாதசிகளும் வருவதுண்டு.

    இவற்றுள் மார்கழி மாதம் வளர்பிறையில் வருவது 'மோட்ச ஏகாதசி'.

    இதையே வைகுண்ட ஏகாதசியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம்.

    புண்ணியமிகு இந்தத் திருநாளில் பெருமாளை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப் பேறும்,

    அவர்களின் முன்னோர்களுக்கு முக்தியும் கிடைக்கும்.

    அன்றைக்கு ஏகாதசியின் மகிமையையும், இந்த விரதம் இருப்பதால் உண்டாகும் பலன்களையும்

    விவரிக்கும் திருக்கதைகளைப் படிப்பது வெகு விசேஷம் என்பார்கள்.

    • ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று (ஒருவேளை) பகலில் உணவருந்தலாம்.
    • பிறவி என்னும் சுழற்சியில் இருந்து விடுபட்டு, பிறவா நிலையை அடைவதே பிறந்ததன் நோக்கம்.

    ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று (ஒருவேளை) பகலில் உணவருந்தலாம்.

    அன்றிரவு உணவருந்தக் கூடாது. மறுநாள் ஏகாதசி முழு நாளும் உணவருந்தக் கூடாது.

    அதற்கடுத்த நாள் துவாதசி.

    அன்று அதிகாலை உப்பு, புளிப்பு சேர்க்காமல் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஏகாதசியன்று கதை பேசி பொழுதைக் கழிக்கக் கூடாது.

    திருமாலின் அவதாரப் பெருமை சொல்லும் நூல்களைப் படிக்கலாம்.

    பிரபந்தங்களைச் சொல்லலாம். அல்லது விஷ்ணுவை பூஜிப்பது என்று பொழுதை செலவிட வேண்டும்.

    ஏகாதசி நாளில் இரவில் தூங்கக் கூடாது.

    மறுநாள் துவாதசி பாரணை முடித்த அன்று, பகலிலும் தூங்கக் கூடாது.

    வைகுண்ட ஏகாதசியன்று இரவு கண்விழித்து பரமபதம் விளையாடுவது ஒரு முக்கியமான சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது.

    விளையாட்டில் ஏணி வழியே ஏறிச் சென்றால் சொர்க்கம்.

    சறுக்கி பாம்பின் வாயில் விழுந்தால் மறுபடியும் அப்பகுதிக்கே வர நேரிடும்.

    ஏணி என்பது புண்ணியம். பாம்பு என்பது பாவம்.

    வைகுண்ட ஏகாதசியன்று இரவு முழுவதும் கண் விழித்திருக்கும் பொருட்டு இவ்விளையாட்டை பெரும்பான்மையான பக்தர்கள் விளையாடுவதை வழக்கத்தில் வைத்திருந்தனர்.

    தற்போது அந்த பழக்கம் குறைந்து விட்டது.

    பாவம் செய்தவர்கள் வாழ்வில் கீழே இறங்குவர் என்பதையும், புண்ணியம் செய்தால் சொர்க்கமாகிய

    திருமாலின் வைகுண்டத்தை எளிதாக அடையலாம் என்பதையும் வலியுறுத்தும் ஆன்மிக "விளையாட்டு" இது.

    அன்றைய தினம் கண் விழித்து திருப்பாவை, திருவெம்பாவை, நாலாயிரத் திவ்ய பிரபந்தம், நாராயணீயம்,

    புருஷ சூக்தம், விஷ்ணுபதி பாராயணம் செய்வது மிகவும் நல்லது.

    பிறவி என்னும் சுழற்சியில் இருந்து விடுபட்டு, பிறவாநிலையை அடைவதே பிறந்ததன் நோக்கம்.

    அந்த நோக்கத்தை அடைவதற்கு நமக்கு உதவியாக இருப்பது ஏகாதசி விரதமாகும்.

    • ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை என்று அக்னி புராணம் கூறுகிறது.
    • பாற்கடலில் இருந்து அமிர்தம் வெளிப்பட்ட நாள் ஏகாதசி.

    ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை என்று அக்னி புராணம் கூறுகிறது.

    இந்நன்னாளில் விரதம் இருப்போருக்கு திருமாலே பரமபத வாசலைத் திறந்து வைத்து அருள்பாலிப்பார் என்பது ஐதீகம்.

    விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம் என்று உமையவளிடம் பரமசிவனே கூறுகிறார்.

    பல்வேறு புராணங்கள் ஏகாதசி விரதத்தின் பெருமையையும், அதனால் அளப்பரிய நலனைப் பெறலாம் என்றும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றன.

    பாற்கடலில் இருந்து அமிர்தம் வெளிப்பட்ட நாள் ஏகாதசி.

    அந்த அமிர்தத்தைப் போன்று விஷ்ணுவின் அருளை நமக்கு அளிக்கக்கூடிய விரதம் ஏகாதசி விரதம்.

    இந்த விரதத்தை எவரெல்லாம் மேற்கொள்கிறார்களோ, அவர்களுக்கு எல்லா வகையிலும் மேன்மை உண்டாகும்.

    அவர்களுக்கு மரண பயமோ நரக வாசமோ இல்லை.

    • ஏகம் என்றால் “ஒன்று” என்று பொருள். தசி என்றால் “பத்து” என்று அர்த்தம்.
    • ஏகாதசி என்பது திதிகளில் பதினொன்றாவதாக வருவது. ஏகம்+தசி=ஏகாதசி.

    வைகுண்ட ஏகாதசி தினம் அன்று விரதம் இருந்தால் செல்வம் சேரும்.

    மாதத்துக்கு 2 ஏகாதசி வீதம் ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் வரும்.

    ஒவ்வொரு மாதமும் சுக்லபட்சம் என்ற வளர்பிறையிலும், கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறையிலும் பதினோராவது நாள் வருவதே ஏகாதசி.

    அதாவது ஏகாதசி என்பது திதிகளில் பதினொன்றாவதாக வருவது. ஏகம்+தசி=ஏகாதசி.

    ஏகம் என்றால் "ஒன்று" என்று பொருள். தசி என்றால் "பத்து" என்று அர்த்தம்.

    ஏகாதசி என்றால் பதினொன்று நாள் என்று பொருள்.

    ஞானேந்திரியம் 5, கர்மேந்திரியம் 5, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் திருமாலுடன் ஒன்றுபடுத்தும் நாளே வைகுண்ட ஏகாதசி.

    இந்த ஒன்றுதல், அவனோடு என்றுமே ஒன்றுவதாக உருப்பெறும் என்பதுதான் ஏகாதசி விரதத்தின் உட்பொருள்.

    அந்த உட்பொருளின் வெளிவடிவாக நடைபெறுவதுதான் பரமபத வாசல் திறப்பும், வைகுண்ட ஏகாதசித் திருநாளும்.

    மார்கழியில் வரும் வளர்பிறை ஏகாதசி தான் சிறப்பானது.

    இதை பெரிய ஏகாதசி மற்றும் மோட்ச ஏகாதசி என்பார்கள்.

    • காலை 3 மணிக்கு பக்தி பாடல்களை பாட வேண்டும்.
    • அகத்திக்கீரை பொறியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை.

    வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி,

    துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும்.

    காலை 3 மணிக்கு பக்தி பாடல்களை பாட வேண்டும்.

    3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் (தென்மாவட்டங்களில் 21 கறி வைப்பார்கள்) உணவு தயாரிக்க வேண்டும்.

    சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்துவிட வேண்டும்.

    அகத்திக்கீரை பொறியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை.

    இதை குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும்.

    ஆனால், துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது.

    • திருமாலுக்குரிய திவ்ய தேசங்கள் 108. அவற்றில் நாம் பூமியில் காண முடியாதது இரண்டு.
    • மார்கழி சுக்ல ஏகாதசியன்று பரமபத வாசல் திறக்கப்படுகிறது.

    திருமாலுக்குரிய திவ்ய தேசங்கள் 108. அவற்றில் நாம் பூமியில் காண முடியாதது இரண்டு.

    ஒன்று வைகுண்டம், மற்றது பரமபதம்.

    விஷ்ணுவை எப்போதும் பாடிப் பரவுகின்ற பக்தர்கள், பகவானின் அணுக்கத் தொண்டர்களாக வசிப்பது இந்தப் பரமபதத்தில் தான்.

    அந்தப் பரமபதத்தில் பகவானுடன் உறையும் பெருமையைப் பெறுவதான வாயில்தான் பரமபத வாசல்.

    ஒரு சமயம் பிரளயத்தில் மூழ்கிவிட்ட உலகத்தை மீண்டும் படைத்த திருமால், மற்ற உயிரினங்களை உண்டாக்க பிரம்மாவை படைத்தார்.

    அப்போது பிரம்மாவை வதைக்க 2 அசுரர்கள் வந்தனர். அவர்களை திருமால் அழித்தார்.

    அப்போது அந்த 2 அசுரர்களும் திருமாலிடம், "நாங்கள் ஸ்ரீவைகுண்டத்தில் வாசம் செய்யும் பாக்கியம் தர வேண்டும்" என்றனர்.

    அதை ஏற்றுக் கொண்ட திருமால் அவர்கள் இருவரையும் மார்கழி மாத சுக்ல ஏகாதசியன்று வடக்கு நுழைவாயில் வழியாக பரமபதத்துக் அனுப்பி வைத்தார்.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த 2 அசுரர்களும் எங்களுக்கு அருளிய இந்த பரமபத சொர்க்க வாசலை பூமியில் திருவிழாவாக கொண்டாட வேண்டும்.

    அதோடு இந்த வாசல் வழியாக வரும் உங்களை தரிசிப்பவர்களுக்கும், இவ்வாசல் வழியாக வருபவர்களுக்கும்,

    அவர்கள் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் முக்தி அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர்.

    அதன்படியே மார்கழி சுக்ல ஏகாதசியன்று பரமபத வாசல் திறக்கப்படுகிறது.

    அதை உணர்த்தும் விதமாகத்தான், பெருமான் தானே வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் வழியே பக்தர்கள் புடைசூழ வருகிறார்.

    "என்னோடிருப்பீர்களாக" என்று பக்தர்களுக்கு அருளை அளிக்கிறார்.

    • இந்த 2 நாழிகை நேரத்தை பிரம்ம முகூர்த்த நேரம் என்பார்கள்.
    • கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாக பிடித்து மக்களை காத்தது மார்கழி மாதத்தில்தான்.

    நமது ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாளாகும். அந்த வகையில் மார்கழி மாதமானது தேவர்களுக்கு விடியற்காலை நேரம்.

    அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள 2 நாழிகை நேரமே தேவர்களின் விடியற்காலமாக கருதப்படுகிறது.

    இந்த 2 நாழிகை நேரத்தை பிரம்ம முகூர்த்த நேரம் என்பார்கள்.

    இந்த நேரத்தில் தான் தேவர்கள் கோவிலுக்குச் சென்று திருப்பள்ளி எழுச்சி சொல்வார்கள்.

    இறைவன் கண் விழித்ததும் முதல் ஆராதனையை செய்வார்கள்.

    அந்த சமயத்தில் நாமும் வழிபாடு நடத்தினால் பகவானின் அருளை மிகச் சுலபமாக பெற முடியும்.

    அதனால் தான் மார்கழி மாதம் மங்களகரமான, புண்ணிய மாதமாக கருதப்படுகிறது.

    மாதங்களில் நான் மார்கழி என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறியுள்ளார்.

    பாரத யுத்தம் இந்த மாதம் தான் நடந்தது. பகவத் கீதை அருளப்பட்டது மார்கழியில் தான்.

    திருப்பாற்கடல் கடையப்பட்டதும், அதில் இருந்து தோன்றிய விஷத்தை சிவபெருமான் உண்டதும் மார்கழி மாதத்தில்தான் என்று புராணம் சொல்கிறது.

    அய்யப்பன், ஆஞ்சநேயர் அவதரித்ததும், ஆண்டாள் அதிகாலையில் எழுந்து நீராடி, திருப்பாவை பாடி திருமால் மனதில் இடம் பிடித்ததும் இந்த மாதத்தில்தான்.

    கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாக பிடித்து மக்களை காத்தது மார்கழி மாதத்தில்தான்.

    இத்தகைய சிறப்புடைய மார்கழி மாதத்தை சிலர் மனம் போன போக்கில் பீடை மாதம் என்கிறார்கள்.

    உண்மையில் மார்கழியை நம் முன்னோர்கள் "பீடுடை மாதம்" என்றழைத்தனர்.

    பீடுடை என்றால் சிறப்பான மங்களகரம் நிறைந்தது என்று பொருள்.

    பீடுடை என்ற வார்த்தை உச்சரிப்பில் திரிந்து, மருவி பீடை என்றாகி விட்டது.

    இனியாவது மார்கழியை பீடை மாதம் என்று சொல்லாதீர்கள்.

    எல்லா சிறப்புகளும் வாய்ந்த மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் இறைவனை வழிபட்ட பலன் கிடைக்கும்.

    திருப்பாவை, திருவெம்பாவை ஓதி வழிபட்டால் நம் பாவங்கள் அழிந்து புண்ணியம் வந்து சேரும்.

    மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும்.

    எல்லா வைணவத் தலங்களிலும் பரமபதவாசல் உண்டு.

    • பல்வேறு சிறப்புகளையுடைய “வைகுண்ட ஏகாதசி” என்றவுடன் ஸ்ரீரங்கம்தான் நினைவுக்கு வரும்.
    • ஏனென்றால், பூலோக வைகுண்டம் என்ற புகழ்மிக்க திருத்தலம் அது.

    பல்வேறு சிறப்புகளையுடைய "வைகுண்ட ஏகாதசி" என்றவுடன் ஸ்ரீரங்கம்தான் நினைவுக்கு வரும்.

    ஏனென்றால், பூலோக வைகுண்டம் என்ற புகழ்மிக்க திருத்தலம் அது.

    எல்லா ஊர்களிலும் உள்ள விஷ்ணு ஆலயங்களில் இந்த வைகுண்ட ஏகாதசித் திருநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

    என்றாலும், ஸ்ரீரங்கத்துக்கு தனிச்சிறப்பு உண்டு.

    பிரம்மோற்சவம் என்றால் திருப்பதி எப்படி விசேஷமோ, தீபம் என்றால் திருவண்ணாமலை எப்படி விசேஷமோ, அப்படி வைகுண்ட ஏகாதசி விசேஷம் கொண்டது ஸ்ரீரங்கம்.

    • இந்தியாவிலேயே ஏழு பிரகாரங்களை கொண்ட கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மட்டுமே.
    • உடலின் நடுவே ஆத்மா உள்ளது போல, கோவிலின் நடுவே பரமாத்மா இருக்கிறார்.

    இந்தியாவிலேயே ஏழு பிரகாரங்களை கொண்ட கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மட்டுமே.

    இந்தப் பிரகராங்களின் வாசல் சுவர்களின் நடுவில் கோபுரம் அமைக்கப்பட்டிருக்கும்.

    பொதுவாக முதன்மை வாசல் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும்.

    ஆனால், இங்கு தெற்கு நோக்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கோவிலின் பரப்பு 6 லட்சத்து 31 ஆயிரம் சதுரஅடி. அதாவது 156 ஏக்கர்.

    ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டதற்கு காரணம் உண்டு.

    உடலின் நடுவே ஆத்மா உள்ளது போல, கோவிலின் நடுவே பரமாத்மா இருக்கிறார்.

    மனித உடல் ஏழு தாதுக்களால் ஆனதாகச் சொல்வதுண்டு.

    இதன் அடிப்படையிலேயே ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டது.

    • அன்று கோவில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது.
    • கூடுமான வரை கோவில்களில் பிரசாதம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

    ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள்துவாதசியன்று நடத்த வேண்டும்.

    அன்று கோவில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது.

    கூடுமான வரை கோவில்களில் பிரசாதம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

    குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்.

    ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான்.

    இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது.

    தேவையானதை முதல்நாளே பறித்து வைத்துவிட வேண்டும்.

    ×