search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஏகாதசி விரத முறை
    X

    ஏகாதசி விரத முறை

    • ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று (ஒருவேளை) பகலில் உணவருந்தலாம்.
    • பிறவி என்னும் சுழற்சியில் இருந்து விடுபட்டு, பிறவா நிலையை அடைவதே பிறந்ததன் நோக்கம்.

    ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று (ஒருவேளை) பகலில் உணவருந்தலாம்.

    அன்றிரவு உணவருந்தக் கூடாது. மறுநாள் ஏகாதசி முழு நாளும் உணவருந்தக் கூடாது.

    அதற்கடுத்த நாள் துவாதசி.

    அன்று அதிகாலை உப்பு, புளிப்பு சேர்க்காமல் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஏகாதசியன்று கதை பேசி பொழுதைக் கழிக்கக் கூடாது.

    திருமாலின் அவதாரப் பெருமை சொல்லும் நூல்களைப் படிக்கலாம்.

    பிரபந்தங்களைச் சொல்லலாம். அல்லது விஷ்ணுவை பூஜிப்பது என்று பொழுதை செலவிட வேண்டும்.

    ஏகாதசி நாளில் இரவில் தூங்கக் கூடாது.

    மறுநாள் துவாதசி பாரணை முடித்த அன்று, பகலிலும் தூங்கக் கூடாது.

    வைகுண்ட ஏகாதசியன்று இரவு கண்விழித்து பரமபதம் விளையாடுவது ஒரு முக்கியமான சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது.

    விளையாட்டில் ஏணி வழியே ஏறிச் சென்றால் சொர்க்கம்.

    சறுக்கி பாம்பின் வாயில் விழுந்தால் மறுபடியும் அப்பகுதிக்கே வர நேரிடும்.

    ஏணி என்பது புண்ணியம். பாம்பு என்பது பாவம்.

    வைகுண்ட ஏகாதசியன்று இரவு முழுவதும் கண் விழித்திருக்கும் பொருட்டு இவ்விளையாட்டை பெரும்பான்மையான பக்தர்கள் விளையாடுவதை வழக்கத்தில் வைத்திருந்தனர்.

    தற்போது அந்த பழக்கம் குறைந்து விட்டது.

    பாவம் செய்தவர்கள் வாழ்வில் கீழே இறங்குவர் என்பதையும், புண்ணியம் செய்தால் சொர்க்கமாகிய

    திருமாலின் வைகுண்டத்தை எளிதாக அடையலாம் என்பதையும் வலியுறுத்தும் ஆன்மிக "விளையாட்டு" இது.

    அன்றைய தினம் கண் விழித்து திருப்பாவை, திருவெம்பாவை, நாலாயிரத் திவ்ய பிரபந்தம், நாராயணீயம்,

    புருஷ சூக்தம், விஷ்ணுபதி பாராயணம் செய்வது மிகவும் நல்லது.

    பிறவி என்னும் சுழற்சியில் இருந்து விடுபட்டு, பிறவாநிலையை அடைவதே பிறந்ததன் நோக்கம்.

    அந்த நோக்கத்தை அடைவதற்கு நமக்கு உதவியாக இருப்பது ஏகாதசி விரதமாகும்.

    Next Story
    ×