search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Afghanistan Attack"

    ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்காக வெடிகுண்டுகளை நிரப்பியபோது கார் வெடித்து சிதறியதில் 35 தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். #AfghanistanTaliban #Talibankilled
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதனால் ராணுவ முகாம்கள் மற்றும் ரோந்து வாகனங்கள் மற்றும் போலீசார் மீது தலிபான்கள் திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நாட்டின் வடக்கு பகுதியில் பாகிஸ்தான் நாட்டின் எல்லையையொட்டியுள்ள கந்தஹார் மாகாணம், மருஃப் மாவட்டத்தில்  ராணுவத்தினர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்காக ஒரு காரில்  தலிபான் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை நிரப்பி கொண்டிருந்தனர்.

    அப்போது, எதிர்பாராத விதமாக அந்த கார் வெடித்து சிதறியதில் 35-க்கும் அதிகமான தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. எனினும், இந்த தகவலை தலிபான்கள் மறுத்துள்ளனர். #AfghanistanTaliban #Talibankilled
    ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் பர்யான் மாகாணத்தில் வெடித்த மோதலில் இருதரப்பிலும் 18 பேர் உயிரிழந்தனர். #Afghan #Taliban
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த பர்யான் மாகாணத்தில் அன்ட்கோய் மற்றும் கர்கான் மாவட்டங்களில் உள்ள சோதனை சாவடிகள் மீது நேற்றிரவு தலிபான் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர்.



    அவர்களுக்கும் ராணுவ  வீரர்களுக்கும் இடையில் பயங்கரமான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 11 பயங்கரவாதிகளும், 7 ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக அந்த மாகாணத்தின் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    மற்ற பகுதிகளில் இருந்து உடனடியாக கூடுதலான படைகள் அனுப்பப்பட்டால்தான் இங்குள்ள பயங்கரவாதிகளை சமாளிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Afghan #Taliban #Talibanskilled
    ஆப்கானிஸ்தான் நாட்டின் கோக்யானி மாவட்டத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் - தலிபான்கள் இடையே வெடித்த மோதலில் இருதரப்பிலும் 21 பேர் உயிரிழந்தனர். #21killed #ISISTalibanclash #Talibanmillitants
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹர் மாகாணத்துக்குட்பட்ட சில பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மற்ற பகுதிகளில் தலிபான்களின் ராஜ்ஜியம் கொடிகட்டி பறக்கிறது. இவர்கள் இருதரப்பினரும் அடிக்கடி ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதுடன் பொதுமக்களின் உயிர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இங்குள்ள கோக்யானி மாவட்டத்துக்குட்பட்ட ஸாவா பகுதியில்  ஐ.எஸ். பயங்கரவாதிகள் - தலிபான்கள் இடையே இன்று வெடித்த மோதலில் தலிபான்கள் 18 பேரும், ஐ.எஸ்.பயங்கரவாதிகள் 3 பேரும் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  #21killed  #ISISTalibanclash #Talibanmillitants
    தலிபான்களின் தாக்குதல் எதிரொலியாக நாளை நடைபெறும் ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் கந்தஹார் மாகாணத்தில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Afghanistanelections #Kandaharelectiondelay #Talibanattack
    காபுல்:

    249 உறுப்பினர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு நாளை (20-ம் தேதி) தேர்தல் நடைபெறுகிறது. 2500-க்கும் அதிகமான வேட்பாளர்கள் மோதும் இந்த தேர்தலில் சுமார் 89 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர். சுமார் ஐயாயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என அறிவுத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள், நாட்டின் பல பகுதிகளில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

    கடந்த சில நாட்களில்இவர்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்களில் பத்துக்கும் அதிகமான வேட்பாளர்களும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

    இந்நிலையில், தலிபான்களின் கோட்டை என்று கருதப்படும் கந்தஹார் மாகாணத்தில் உள்ள  கவர்னர் அலுவலகத்தில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கந்தஹார் மாகாணத்தின் காவல்துறை தலைவர் ஜெனரல் அப்துல் ரசிக், உளவுத்துறை தலைவர் மற்றும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர். கவர்னர் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.

    வாக்குப்பதிவு தினமான நாளையும் (20-ம் தேதி) தலிபான்கள் இதுபோன்ற கொடூரமான தாக்குதல்களில் ஈடுபடலாம் என அங்குள்ள பொதுமக்களிடையே பீதி நிலவி வருகிறது.

    இதனைதொடர்ந்து, கந்தஹார் மாகாணத்தில் மட்டும் பாராளுமன்ற தேர்தல் ஒருவாரத்துக்கு பின்னர் நடத்தப்படும் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியின் செய்தி தொடர்பாளர் இன்று அறிவித்துள்ளார். அங்கு வாக்குப்பதிவுக்கான தேதியை தேர்தல் கமிஷன் விரைவில் அறிவிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Afghanistanelections #Kandaharelectiondelay #Talibanattack
    துருக்கியில் இருந்து இன்று தாய்நாடு திரும்பிய ஆப்கானிஸ்தான் துணை அதிபரை வரவேற்ற நிகழ்ச்சியில் நடந்த மனிதகுண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். #KabulSuicideBombing #AbdulRashidDostum
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அப்துல் ரஷீத் தோஸ்தும் போர்குற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த ஓராண்டுக்கும் மேலாக துருக்கி நாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்திருந்தார்.

    இன்று தாய்நாடு திரும்பிய அப்துல் ரஷீத் தோஸ்தும்-ஐ வரவேற்க காபுல் நகரில் உள்ள ஹமித் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் ஏராளமான ஆதரவாளர்களும், இரண்டாம் துணை அதிபர் சர்தார் தனிஷ் மற்றும் ஏராளமான அரசு அதிகாரிகளும் திரண்டிருந்தனர்.

    துணை அதிபர் அப்துல் ரஷீத் தோஸ்தும் வந்த தனி விமானம் மாலை 4.30 மணியளவில் தரையிறங்கியதும், அவரது ஆதரவாளர்கள் உற்சாக மிகுதியில் முழக்கங்களை எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர்.

    ஆதரவாளர்களின்  வரவேற்பை ஏற்ற பின்னர் துணை அதிபரின் கார் மற்றும் அவருக்கு பாதுகாப்பாக சென்ற வாகனங்கள் சுமார் 5 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றன.

    அப்போது, காபுல் விமான நிலைய வாசலில் பயங்கரமான குண்டு வெடிக்கும் சப்தம் கேட்டது. மனிதகுண்டு தாக்குதல் என நம்பப்படும் இந்த குண்டு வெடிப்பில் பாதுகாப்பு படையினர் உள்பட 11 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #KabulSuicideBombing  #AbdulRashidDostum
    ×