search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "taliban attack"

    ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினரின் முகாம்களில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 வீரர்கள் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistan #TalibanAttack
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக போரிட்டு வரும் தலிபான் பயங்கரவாத அமைப்பு, கைப்பற்றியுள்ள சில பகுதிகளையும் தாண்டி அதன் எல்லையை விரிவுபடுத்த பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதல்களில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் என பலரும் தினம் தினம் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர்.
     


    அதன்படி, குண்டஸ் மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் தங்கியிருந்த முகாம்கள் மீது தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 28 பாதுகாப்பு படை அதிகாரிகள் வீர மரணம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல், குண்டஸ் மாகாணத்தின் தலாவியா பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistan #TalibanAttack
    ஆப்கானிஸ்தான் நாட்டின் மைடான் வர்தாக் மாகாணத்தில் சிறப்புப் படையினர் அலுவலகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. #Talibanattack #specialforcesstation #AfghanTaliban
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் மைடான் வர்தாக் மாகாணத்தில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவம் மற்றும் போலீசாரை கொண்ட சிறப்புப்படை அலுவலகம் இயங்கி வருகிறது.

    மைடான் ஷார் நகரில் உள்ள இந்த அலுவலகத்தின் வாசலில் நேற்று காலை (உள்ளூர் நேரப்படி) சுமார் 9 மணியளவில் குண்டுகள் நிரப்பப்பட்ட காரை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்திய தலிபான் பயங்கரவாதிகள், துப்பாக்கிகளால் சுட்டவாறு சிறப்பு படை அலுவலகத்துக்குள் ஊடுருவ முயன்றனர்.

    அவர்களுக்கும் சிறப்புப்படை காவலர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருதரப்பிலும் 18 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த சுமார் 50 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


    சிகிச்சை பெற்றுவந்த சிலர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் இன்றைய நிலவரப்படி இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  #Talibanattack #specialforcesstation #AfghanTaliban
    ஆப்கானிஸ்தான் நாட்டின் மைடான் வர்தாக் மாகாணத்தில் உள்ள சிறப்புப் படையினர் அலுவலகம் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர். #Talibanattack #specialforcesstation #AfghanTaliban
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் மைடான் வர்தாக் மாகாணத்தில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவம் மற்றும் போலீசாரை கொண்ட சிறப்புப்படை அலுவலகம் இயங்கி வருகிறது.

    மைடான் ஷார் நகரில் உள்ள இந்த அலுவலகத்தின் வாசலில் இன்று காலை (உள்ளூர் நேரப்படி) சுமார் 9 மணியளவில் குண்டுகள் நிரப்பப்பட்ட காரை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்திய தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டவாறு சிறப்பு படை அலுவலகத்துக்குள் ஊடுருவ முயன்றனர்.

    அவர்களுக்கும் சிறப்புப்டை காவலர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருதரப்பிலும் 18 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த சுமார் 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சிகிச்சை பெறும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Talibanattack #specialforcesstation #AfghanTaliban
    ஆப்கானிஸ்தான் நாட்டின் இரு மாகாணங்களில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 16 போலீசார் பலியாகினர். #AfghanTalibans
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, நாட்டின் வடபகுதிகளில் உள்ள மாகாணங்களில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
      
    இந்நிலையில், அந்நாட்டின் பக்லான் மாகாணத்துக்குட்பட்ட ஹுசைன்ஹில் மாவட்டத்தில் காவல் நிலையம் அருகேயுள்ள சோதனைச்சாவடி மீது நேற்றிரவு தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 9 போலீசார் உயிரிழந்தனர்.

    இதேபோல், தக்கார் மாகாணத்தில் உள்ள பசார் மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடியில் தலிபான் பயங்கரவாதிகள்  நடத்திய தாக்குதலில் 7 போலீசார் பலியாகினர். #AfghanTalibans
    ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹேரட் மாகாணத்தில் ராணுவ முகாம் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர். #AfghanSoldiers #Talibanattack
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், ஹேரட் மாகாணத்தில் ராணுவ முகாம் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர்.


    இங்குள்ள ஷின்டான்ட் மாவட்டத்துக்குட்பட்ட சேஷ்மா பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமை நேற்றிரவு நூற்றுக்கணக்கான தலிபான்கள் முற்றுகையிட்டு ஆவேசமாக தாக்குதல் நடத்தினர்.

    அவர்களுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 20 வீரர்களை சிறைபிடித்து சென்ற பயங்கரவாதிகள் அந்த முகாமில் இருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை அள்ளிச் சென்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #AfghanSoldiers #Talibanattack
    ஆப்கானிஸ்தானில் உள்ள பராக் மாகாணத்தின் சுங்கச்சாவடியில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் 7 போலீசார் பலியானார்கள். #Afghanistan #PoliceKilled #TalibanAttack
    காபூல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகளின் அட்டூழியத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் உள்நாட்டு படைகளும், அமெரிக்க கூட்டுப்படைகளும் திணறி வருகின்றன.

    அங்கு சமீப காலமாக தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தாத நாள் இல்லை.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள பராக் மாகாணத்தின் தலைநகரான பராக் நகரில் தெக்யாக் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த தலீபான் பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராததால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நிலை குலைந்து போயினர். அவர்களால் சுதாரித்து எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் போய் விட்டது.

    இந்த தாக்குதலில் 7 போலீசார் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கு இருந்த ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் தலீபான் பயங்கரவாதிகள் அள்ளிச்சென்று விட்டனர்.

    இந்த தாக்குதலை நடத்தியது தாங்கள்தான் என தலீபான் பயங்கரவாதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், 7 போலீசாரை கொன்று அந்த சுங்கச்சாவடியை தாங்கள் கைப்பற்றி விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
    ஆப்கானிஸ்தான் நாட்டின் கோக்யானி மாவட்டத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் - தலிபான்கள் இடையே வெடித்த மோதலில் இருதரப்பிலும் 21 பேர் உயிரிழந்தனர். #21killed #ISISTalibanclash #Talibanmillitants
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹர் மாகாணத்துக்குட்பட்ட சில பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மற்ற பகுதிகளில் தலிபான்களின் ராஜ்ஜியம் கொடிகட்டி பறக்கிறது. இவர்கள் இருதரப்பினரும் அடிக்கடி ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதுடன் பொதுமக்களின் உயிர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இங்குள்ள கோக்யானி மாவட்டத்துக்குட்பட்ட ஸாவா பகுதியில்  ஐ.எஸ். பயங்கரவாதிகள் - தலிபான்கள் இடையே இன்று வெடித்த மோதலில் தலிபான்கள் 18 பேரும், ஐ.எஸ்.பயங்கரவாதிகள் 3 பேரும் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  #21killed  #ISISTalibanclash #Talibanmillitants
    தலிபான்களின் தாக்குதல் எதிரொலியாக நாளை நடைபெறும் ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் கந்தஹார் மாகாணத்தில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Afghanistanelections #Kandaharelectiondelay #Talibanattack
    காபுல்:

    249 உறுப்பினர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு நாளை (20-ம் தேதி) தேர்தல் நடைபெறுகிறது. 2500-க்கும் அதிகமான வேட்பாளர்கள் மோதும் இந்த தேர்தலில் சுமார் 89 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர். சுமார் ஐயாயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என அறிவுத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள், நாட்டின் பல பகுதிகளில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

    கடந்த சில நாட்களில்இவர்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்களில் பத்துக்கும் அதிகமான வேட்பாளர்களும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

    இந்நிலையில், தலிபான்களின் கோட்டை என்று கருதப்படும் கந்தஹார் மாகாணத்தில் உள்ள  கவர்னர் அலுவலகத்தில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கந்தஹார் மாகாணத்தின் காவல்துறை தலைவர் ஜெனரல் அப்துல் ரசிக், உளவுத்துறை தலைவர் மற்றும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர். கவர்னர் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.

    வாக்குப்பதிவு தினமான நாளையும் (20-ம் தேதி) தலிபான்கள் இதுபோன்ற கொடூரமான தாக்குதல்களில் ஈடுபடலாம் என அங்குள்ள பொதுமக்களிடையே பீதி நிலவி வருகிறது.

    இதனைதொடர்ந்து, கந்தஹார் மாகாணத்தில் மட்டும் பாராளுமன்ற தேர்தல் ஒருவாரத்துக்கு பின்னர் நடத்தப்படும் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியின் செய்தி தொடர்பாளர் இன்று அறிவித்துள்ளார். அங்கு வாக்குப்பதிவுக்கான தேதியை தேர்தல் கமிஷன் விரைவில் அறிவிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Afghanistanelections #Kandaharelectiondelay #Talibanattack
    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் பாராளுமன்ற வேட்பாளர் உடல் சிதறி உயிரிழந்தார். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர். #TalibanAttack
    கந்தகார்:

    ஆப்கானிஸ்தானில் வருகிற 20-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதையொட்டி தீவிர பிரசாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஹெல்மண்ட் மாகாணத்தில் வேட்பாளர் குர்மான் என்பவர் தேர்தல் அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அவர் அமர்ந்திருந்த சோபாவுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. அதில் அவர் அதே இடத்தில் உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றனர். தாக்குதல் நடைபெற்ற ஹெல்மண்ட் பகுதி பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்தது. தேர்தல் நடைபெறும் இக்கால கட்டத்தில் இதுவரை 10 வேட்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். #TalibanAttack
    ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பரா மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தை கைப்பற்ற தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 17 வீரர்கள் கொல்லப்பட்டனர். #Talibanattack #Afghanarmybase
    காபுல்:

    இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களுக்கு உள்பட்ட ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகள் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகளை வேட்டையாட ஆப்கானிஸ்தான் படைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

    மேலும், பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் மறைவிடங்கள் மீது உள்நாட்டு ராணுவம் மற்றும் சில வெளிநாட்டு விமானப்படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    இந்த இருதரப்பு மோதலில் இந்த ஆண்டில் மட்டும் அப்பாவி பொதுமக்கள் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போர் நிலவரங்களை கண்காணித்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின் முகமை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மேற்கு பரா மாகாணம், புஷ்ட் ராட் மாவட்டத்தில் உள்ள ராணுவ தளத்தை கைப்பற்றும் நோக்கத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நேற்று பின்னிரவு ஆவேச தாக்குதல் நடத்தினர்.

    வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் அவர்கள் நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 17 வீரர்கள் உயிரிழந்ததாகவும், அங்கிருந்த ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை பயங்கரவாதிகள் அள்ளிச் சென்றதாகவும், 11 வீரர்களை சிறைபிடித்துச் சென்றதாகவும் உள்நாடு ஊடகங்லள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Talibanattack #Afghanarmybase
    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புபடை வீரர்களுக்கும விடிய விடிய நீடித்த மோதலில் பாதுகாப்புபடை வீரர்கள் மொத்தம் 37 பேர் கொல்லப்பட்டனர். #Afghan #Taliban
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவர்களின் கொட்டத்தை ஒடுக்க முடியாமல் ஆப்கான் வீரர்களும், நேட்டோ படை வீரர்களும் திணறி வருகிறார்கள்.

    இந்தநிலையில் குண்டூஸ் மாகாணத்தின் தாஸ்தி ஆர்ச்சி மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடியில் நேற்றுமுன்தினம் இரவு பாதுகாப்புபடை வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த தலீபான் பயங்கரவாதிகள் பாதுகாப்புபடை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை மூண்டது. விடிய விடிய நீடித்த மோதலில் பாதுகாப்புபடை வீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இதே போல் ஷஜ்வான் மாகாணத்தின் காம்யாப் மாவட்டத்தில் போலீஸ் படையினருக்கும் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் போலீசார் 8 பேர் உயிர் இழந்தனர். 6 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

    சமான்கான் மாகாணத்தில் தாரா சுப் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் போலீசார் 14 பேர் பலியாகினர். சாரி புல் மாகாணத்தின் தலைநகர் சாரி புல்லில் உள்ள ராணுவ சோதனை சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 வீரர்கள் உயிர் இழந்தனர். அதே சமயம் ஆப்கானிஸ்தானின் பல்வேறு இடங்களில் நடந்த இந்த தாக்குதல்களில் தலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #Afghan #Taliban
    ஆப்கானிஸ்தானில் அதிபர் அறிவித்த போர்நிறுத்தத்துக்கு இடையில் தலிபான் பயங்கரவாதிகளால் இன்று கடத்தப்பட்டவர்களில் 149 பேரை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். #Afghanforces #149hostagesfreed #Talibanambush
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே சுமார் 17 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. 

    நாட்டின் பல பகுதிகளை பிடித்து வைத்துள்ள தலிபான்கள் கஸ்னி நகரை கைப்பற்றுவதற்காக கடந்த 15 நாட்களாக ஆவேசமாக போரிட்டு வருகின்றனர். இந்த நகரம் அவர்கள் கையில் சிக்காமல் இருப்பதற்காக அரசுப் படையினரும் தீவிரமான எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இருதரப்பு மோதல்கள் கடந்த புதன்கிழமை முடிவுக்கு வந்துள்ள நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மீண்டும் ஒரு இடைக்கால போர்நிறுத்தத்துக்கு அதிபர் அஷ்ரப் கானி நேற்று அழைப்பு விடுத்தார். 

    இன்றிலிருந்து (20-ம் தேதி) முஹம்மது நபியின் பிறந்தநாளான மீலாதுன்நபி விழா (நவம்பர் மாதம் 21-ம் தேதி) வரை இந்த போர்நிறுத்தம் அமலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், அந்நாட்டின் குன்டுஸ் மாகாணத்துக்கு உட்பட்ட கான் அபாட் மாவட்டம் வழியாக இன்று காலை சென்ற மூன்று பேருந்துகளை துப்பாக்கி முனையில் தலிபான் பயங்கரவாதிகள் வழிமறித்து மடக்கினர். அவற்றில் வந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி சுமார் 170 பேரை கடத்திச் சென்றனர். 

    பிணை கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டவர்கள் எங்கே கடத்திச் செல்லப்பட்டனர்? என்பது தெரியாத நிலையில் அவர்களை மீட்க குன்டுஸ் மாகாணம் முழுவதும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த வேட்டையில் பிணைகைதிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர் தலிபான்களின் கடுமையான துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்டனர். பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதலில் 7 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 149 பேர் விடுவிக்கப்பட்டதாகவும், மீதமுள்ளவர்களை மீட்பதற்காக அங்கு தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
    #Afghanforces #149hostagesfreed #Talibanambush
    ×