என் மலர்

  நீங்கள் தேடியது "police killed"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நைஜீரியாவில் 2 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்ற கடத்தல்காரர்கள் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் 2 பேரையும் கடத்திச்சென்றனர். #Nigeria #OilWorkers #Kidnapped
  மாஸ்கோ:

  நைஜீரியா நாட்டின் தென் மாகாணமான ரிவர்ஸ்சில் புகழ் பெற்ற ஷெல் எண்ணெய் நிறுவனம் இயங்கி வருகிறது.

  இந்த நிறுவனத்தின் 2 ஊழியர்கள், எண்ணெய் வியாபாரம் தொடர்பாக அண்டை மாகாணமான பாயேல்சா மாகாணத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக 2 போலீஸ் அதிகாரிகள் உடன் சென்றனர்.

  இந்த நிலையில் அவர்களை துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் திடீரென வழிமறித்தனர். அவர்களை கடத்தவும் முயன்றனர். ஆனால் அதை பாதுகாப்பு போலீஸ் அதிகாரிகள் தடுத்தனர். உடனே ஆத்திரம் அடைந்த கடத்தல்காரர்கள், 2 போலீஸ் அதிகாரிகளையும் சுட்டுக்கொன்று விட்டு எண்ணெய் நிறுவன ஊழியர்கள் 2 பேரையும் கடத்திச்சென்று விட்டனர்.

  அந்த எண்ணெய் நிறுவன ஊழியர்களின் கதி என்ன ஆனது என தெரியவில்லை. இந்த தாக்குதலை ஷெல் எண்ணெய் நிறுவனம் உறுதி செய்துள்ளது.   #Nigeria #OilWorkers #Kidnapped
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தில் போலீஸ் வாகன அணிவகுப்பின் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 22 போலீசார் கொல்லப்பட்டனர். #Afghanpolicekilled #Talibanambush #policekilled
  காபுல்:

  ஆப்கானிஸ்தான் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அங்குள்ள தலிபான் பயங்கரவாதிகள் போட்டி அரசாங்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர். பல மாகாணங்களில் இவர்கள் கை ஓங்கியுள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளில் போலீசார் மற்றும் ராணுவ முகாம்களை குறிவித்து இவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர்.

  இவர்களின் வன்முறைக்கு லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்களும் பலியாகியுள்ளனர். தலிபான்களின் ஆதிக்கத்தை வேரறுக்க அந்நாட்டு ராணுவம் 17 ஆண்டுகளாக எடுத்துவரும் நடவடிக்கைகள் பெரிய அளவிலான பலனை அளிக்கவில்லை.  இந்நிலையில், நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பரா மாகாணத்திக்குட்பட்ட ஜுவைன் மாவட்டத்தின் வழியாக சென்ற போலீஸ் வாகன அணிவகுப்பின் மீது நேற்று தலிபான் பயங்கரவாதிகள் அதிரடியாக வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.

  இதில் 4 வாகனங்கள் நாசமாகின. அவற்றில் வந்த 22 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ராணுவ கிடங்கு மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 27 வீரர்கள் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். #Afghanpolicekilled #Talibanambush #policekilled
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தானில் உள்ள பராக் மாகாணத்தின் சுங்கச்சாவடியில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் 7 போலீசார் பலியானார்கள். #Afghanistan #PoliceKilled #TalibanAttack
  காபூல்:

  ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகளின் அட்டூழியத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் உள்நாட்டு படைகளும், அமெரிக்க கூட்டுப்படைகளும் திணறி வருகின்றன.

  அங்கு சமீப காலமாக தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தாத நாள் இல்லை.

  இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள பராக் மாகாணத்தின் தலைநகரான பராக் நகரில் தெக்யாக் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது அங்கு வந்த தலீபான் பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராததால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நிலை குலைந்து போயினர். அவர்களால் சுதாரித்து எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் போய் விட்டது.

  இந்த தாக்குதலில் 7 போலீசார் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கு இருந்த ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் தலீபான் பயங்கரவாதிகள் அள்ளிச்சென்று விட்டனர்.

  இந்த தாக்குதலை நடத்தியது தாங்கள்தான் என தலீபான் பயங்கரவாதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், 7 போலீசாரை கொன்று அந்த சுங்கச்சாவடியை தாங்கள் கைப்பற்றி விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உ.பி.யில் போலீஸ்காரரால் சுட்டுக் கொல்லப்பட்ட விவேக் திவாரி வீட்டுக்கு சென்ற துணை முதல் மந்திரி, அவரது மனைவி கல்பனா திவாரிக்கு அரசு வேலைக்கான ஆணையை வழங்கினார். #VivekTiwarideath #KalpanaTiwari #DineshSharma
  லக்னோ :

  உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் விவேக் திவாரி. இவருக்கு கல்பனா என்ற மனைவியும், ஷானு (12), ஷிவி (7) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.
    
  28-9-2018 அன்றிரவு விவேக் திவாரி தனது தோழியுடன் ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு காரில் சென்றார். நள்ளிரவு 1.30 மணியளவில் கோமதி நகர் விரிவாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவரது காரை நிறுத்துமாறு கூறினர்.

  ஆனால் அவர் காரை நிறுத்தாமல் சென்றதால் போலீஸ்காரர்கள் பிரசாத் சவுத்திரி, சந்தீப் ஆகியோர் ஆத்திரம் அடைந்து மோட்டார் சைக்கிளில் காரை துரத்தி துப்பாக்கியால் சுட்டதில் அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

  கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ்காரர்கள் பிரசாந்த் சவுத்ரி, சந்தீப் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.   இந்நிலையில், போலீஸ்காரரால் சுட்டுக் கொல்லப்பட்ட விவேக் திவாரியின் வீட்டுக்கு சென்ற துணை முதல் மந்திரி தினேஷ் ஷர்மா, அவரது மனைவி கல்பனா திவாரிக்கு அரசு வேலைக்கான ஆணையை வழங்கினார்.

  இதுதொடர்பாக கல்பனா திவாரி கூறுகையில், விசாரணை சரியான கோணத்தில் நடந்து வருகிறது. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் எனக்கு திருப்தியை அளிக்கிறது என தெரிவித்துள்ளார். #VivekTiwarideath #KalpanaTiwari #DineshSharma
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 14 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். #AfghanTaliban #AfghanistanAttack
  காபூல்:

  ஆப்கானிஸ்தானில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அரசுப் படைகள் வசம் உள்ள சில இடங்களையும் கைப்பற்றி உள்ளனர்.

  இந்நிலையில் கிழக்கு காஸ்னி மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இன்றும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், தி யாக் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி, ரிசர்வ் போலீஸ் கமாண்டர் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர். ஜகாத்து மாவட்டத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 20-க்கும் அதிகம் இருக்கும் என மாகாண கவுன்சில் தலைவர் கூறியிருக்கிறார்.

  மேலும் தி யாக் மாவட்டத்தின் பல்வேறு காவல்  சோதனை சாவடிகளையும் பயங்கரவாதிகள் தகர்த்துள்ளனர். ஜகாத்து மாவட்ட தலைமையகம் மற்றும் சோதனைச் சாவடிகளை கைப்பற்றிவிட்டதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். #AfghanTaliban #AfghanistanAttack
  ×