என் மலர்

  செய்திகள்

  ஆப்கானிஸ்தானில் ராணுவம் - தலிபான்கள் மோதலில் 18 பேர் பலி
  X

  ஆப்கானிஸ்தானில் ராணுவம் - தலிபான்கள் மோதலில் 18 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் பர்யான் மாகாணத்தில் வெடித்த மோதலில் இருதரப்பிலும் 18 பேர் உயிரிழந்தனர். #Afghan #Taliban
  காபுல்:

  ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

  இந்நிலையில், தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த பர்யான் மாகாணத்தில் அன்ட்கோய் மற்றும் கர்கான் மாவட்டங்களில் உள்ள சோதனை சாவடிகள் மீது நேற்றிரவு தலிபான் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர்.  அவர்களுக்கும் ராணுவ  வீரர்களுக்கும் இடையில் பயங்கரமான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 11 பயங்கரவாதிகளும், 7 ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக அந்த மாகாணத்தின் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

  மற்ற பகுதிகளில் இருந்து உடனடியாக கூடுதலான படைகள் அனுப்பப்பட்டால்தான் இங்குள்ள பயங்கரவாதிகளை சமாளிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Afghan #Taliban #Talibanskilled
  Next Story
  ×