search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Village council"

    • மறவமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் மறவ மங்கலம் ஊராட்சியில் காந்தி ஜெயந்திைய முன்னிட்டு 115-வது பிறந்தநாள் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

    இதில், பொதுவான விவாதப் பொருளாக, ஊராட்சிகளின் நிதிநிலை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் திட்டம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, பிரதம மந்திரி ஊரககுடியிருப்பு திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதம் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் ஜான்சிராணி, வேளாண்மை துறை விஜயகுமார், சுகாதார துறை ராஜேஸ், கிராம நிர்வாக அலுவலர் தினேஷ்குமார், மற்றும் அங்கன்வாடி மைய ஊழியர்கள், மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூர்-சிங்கம்புணரி ஒன்றியங்களில் நடந்த கிராமசபை கூட்டங்களில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார்.
    • துறை அதிகாரிகளும், கிராம மக்களும் கலந்துகொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி ஒன்றியங்க ளில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.முன்னதாக முறையூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.

    இதில் பெண் குழந்தை களின் கல்வி, பாதுகாப்பு, வளர்ச்சி உள்ளிட்ட வைகளை வலியுறுத்தி கலெக்டடர் உறுதி மொழியை வாசிக்க அமைச்சர், கிராம மக்கள் உட்பட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதே போல் மகிபாலன்பட்டியில் ஊராட்சி மன்றத்தலைவர் பாஸ்கரன் தலைமையிலும், கொன்னத்தான்பட்டியில் ஊராட்சி மன்றத்தலைவர் அழகுபாண்டியன் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.

    இதில் திட்ட இயக்குனர் சிவராமன், கோட்டாட்சியர் பால்துரை, ஊராட்சி உதவி இயக்குனர் குமார், வட்டாட்சியர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமண ராஜ், ராஜேந்திர குமார், வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகவடிவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், நெற்குப்பை பேரூராட்சி சேர்மன் பழனியப்பன், சிங்கம்புணரி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் செந்தில், நகர அவைத் தலைவர் சிவக்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிர மணியன், துணைச் செயலா ளர் ஷீலா ராணி சொக்கநாதன்,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன், மகிபாலன்பட்டி கால்நடை மருத்துவர் செல்வநாயகி, ஊராட்சிஒன்றிய மேற்பார்வையாளர் பெரியசாமி, ஊராட்சி செயலர்களான மதிவாணன், சிவனேஸ்வரி, உதவி யாளர் குரு, மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும், கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

    • வருகிற 15-ந் தேதி கிராம சபை கூட்டங்கள் நடக்கிறது.
    • பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்த தாவது:-

    தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற வேண்டுமென வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு அரசு உத்தரவின் பேரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி (செவ்வாக்கிழமை) காலை 11 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கிராமசபை கூட்டம் நடத்திட உத்தரவிட்டுள்ளார்.

    இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது குறித்த விவாதித்தல், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்பு திட்டம், மாற்றுத்திறனாளி களுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இதர பொருட்கள் குறித்து இந்த கிராம சபையில் விவாதிக்கப்பட உள்ளது. இதனால் கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • உலக தண்ணீர் தினத்தை யொட்டி பூத்துறை ஊராட்சி மன்ற வளாகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • வாழ்வாதார திட்டம், பொதுப்பொருட்கள் மற்றும் சேவை திட்டம் மற்றும் சமூக மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்பட்டு கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.

    புதுச்சேரி:

    உலக தண்ணீர் தினத்தை யொட்டி பூத்துறை ஊராட்சி மன்ற வளாகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கிராம சபை கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளை பற்றி விவாதிக்கப்பட்டது. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் பற்றி விவாதிக்கப்பட்டது. கடந்த 01.04.22 அன்று முதல் 28.02.23 வரை உள்ள காலத்தில் கிராம ஊராட்சி பொது நிதியிலிருந்து மேற்கொண்ட செலவின் அறிக்கை வாசிக்கப்பட்டது.

    இந்த தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கத்தில் ஊராட்சி உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு, குடிசை இல்லா தமிழகம் என்னும் நோக்கத்தினை அடையும் வகையில் கிராமத்தில் வீடு கணக்கெடுக்கப்பட்டு தகுதி வாய்ந்த குடும்பங்களில் இறுதிப்பட்டியலை கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.

    சிறுதானிய உற்பத்தி மற்றும் அதன் நன்மை குறித்து விழிப்புணர்வு செய்வதோடு சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023 மார்ச் 20 முதல் 25-ந் தேதி வரை ஊராட்சிகளில் சிறப்பாக கொண்டாடுதல், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2022-2023-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் உரிமை திட்டம், வாழ்வாதார திட்டம், பொதுப்பொருட்கள் மற்றும் சேவை திட்டம் மற்றும் சமூக மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்பட்டு கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.

    பூத்துறை ஊராட்சி மன்ற தலைவர் சேகர் என்ற உதயகுமார் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆதிலட்சுமி கோவிந்தராஜ், வார்டு உறுப்பினர்கள் சூர்யாகுணசேகரன், ராதா பாலகிருஷ்ணன், ஆறுமுகம் மண்ணாங்கட்டி, சக்கரவர்த்தி, சமையாள்வெங்கடேசன், சுதாஅரசகுமார், குனபூசணி ஆறுமுகம் ஆகியோர் முன்னில வகித்தனர். இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வானூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அதிகாரி மோகனா கலந்து கொண்டார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • இதில் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் காஞ்சிரங்குடி ஊராட்சி வளாகத்தில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் லட்சுமிபுரம் சமுதாய கூடத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி தலைமையில் நடந்தது.

    சிறப்பு அழைப்பாளர்களாக திருப்புல்லாணி ஒன்றியக்குழு தலைவர் புல்லாணி, மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஊராட்சி துணைத்த லைவர் பரீக்கா, ஒன்றிய குழு உறுப்பினர் கோவிந்த மூர்த்தி, பற்றாளர் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட 2022-23-ம் ஆண்டு வரவு-செலவு கணக்கு பிளக்ஸ் போர்டு மூலம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.

    கோகுல் நகரில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும். காஞ்சிரங்குடி ஊராட்சி க்கு உட்பட்ட தனியார் ஆக்கிரமிப்பு செய்த அரசு நிலத்தை மீட்க வேண்டும். ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.

    ராமநாதபுரம் கீழக்கரை வழித்தடத்தில் லட்சுமிபுரம் வழியாக இயக்கப்பட்ட டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    இதில் வட்ட வழங்கல் அலுவலர் பரமசிவம், கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், சின்னப்பன் (சைல்டு லைன்) சகாயராணி (கல்வித்துறை) உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற செயலர் அமுதா சத்தியேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்புல்லாணி ஒன்றியம் பெரியபட்டினம் ஊராட்சி வளாகத்தில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி தலைமையிலும், ஒன்றிய குழு உறுப்பினர் பைரோஸ்கான், பற்றாளர் அருண் பிரசாத் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

    இந்த கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப் பணிகள் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் வேளா ண்மை துறை உதவி இயக்குனர் அகர்லால், கிராம நிர்வாக அலுவலர் அங்கையற்கண்ணன், கொத்தாலிங்கம் (மீன்வளத்துறை), குழந்தை வேலு (மின்சாரத்துறை) சுகாதார ஆய்வாளர்கள் இளையராஜா, கலை முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ஊராட்சி மன்ற துணை தலைவர் புரோஸ் கான் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே திருவெற்றியூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் கலா முத்தழகு தலைமை தாங்கினார். இதில் பஞ்சாயத்து யூனியன் சார்பில் மாரியம்மாள் பார்வையாளராக கலந்துகொண்டார். கிராம சபைக்கான கோரம் இல்லாதால் கூட்டம் நடைபெறவில்லை.

    இது குறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த இந்து மக்கள் நல இயக்க மாநில தலைவர் இளையராஜா கூறும்போது, ஊராட்சிகள் சட்டத்தின்படி கிராம மக்கள் தொகை 501 முதல் 3000 பேர் உள்ள கிராமத்தில் 100 பேர் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். இக்கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளது.ஆனால் 40-க்கும் குறைவாகவே பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கடந்த கிராம சபை கூட்டத்தில் வாரம் ஒரு முறை கொசு மருந்து தெளிக்க வேண்டும். கிராம கண்மாயில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும். தடையின்றி குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆனால் அதில் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாததால், பொதுமக்கள் இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை என்று கூறினார்.

    ×