கிராம சபை கூட்டங்கள் வருகிற 15-ந் தேதி நடக்கிறது

வருகிற 15-ந் தேதி கிராம சபை கூட்டங்கள் நடக்கிறது. பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்து பயன்பெறலாம்.
கிராம சபை கூட்டங்கள் வருகிற 15-ந் தேதி நடக்கிறது
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்த தாவது:-

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற வேண்டுமென வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு அரசு உத்தரவின் பேரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி (செவ்வாக்கிழமை) காலை 11 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கிராமசபை கூட்டம் நடத்திட உத்தரவிட்டுள்ளார்.

இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது குறித்த விவாதித்தல், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்பு திட்டம், மாற்றுத்திறனாளி களுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இதர பொருட்கள் குறித்து இந்த கிராம சபையில் விவாதிக்கப்பட உள்ளது. இதனால் கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com