search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Variety Pakora"

    மொறுமொறுப்பான பக்கோடா வகைகளை வீட்டிலேயே தயார் செய்து மாலை நேர ஸ்நாக்ஸாக டீ, காபியுடன் சேர்த்து ருசிக்கலாம். இன்று மீன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முள் நீக்கிய மீன் துண்டுகள் - அரை கிலோ
    முட்டை - 3
    சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
    மிளகாய் தூள் - சிறிதளவு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    இட்லி தட்டில் கழுவிய மீன் துண்டுகளை வைத்து வேகவைத்துக்கொள்ளவும்.

    பின்னர் அதனை சுமாரான அளவுகளில் உதிர்க்கவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கி அதனுடன் சோளமாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.

    இந்த கலவையில் உதிர்த்த மீனை கொட்டி அரை மணி நேரம் ஊற வைத்துவிட்டு எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    ருசியான மீன் பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ஸ்நாக்ஸ் பிரெட் பக்கோடா. இன்று இந்த பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் - 5 துண்டுகள்
    வெங்காயம் - 2 (நறுக்கியது)
    இஞ்சி துண்டு - சிறிய துண்டு
    மிளகாய் - 3
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய், தண்ணீர்- தேவைக்கு
    உப்பு - தேவைக்கு



    செய்முறை :

    ப.மிளகாய்,  கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பிரெட்டை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    பிரெட் துண்டுகளுடன் வெங்காயம், இஞ்சி, மிளகாய், உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பிரெட் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக பரவலாக கிள்ளி போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    சுவையான பிரெட் பக்கோடா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×