search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ukraine Dam"

    • உக்ரைனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய அணை உடைக்கப்பட்டது.
    • உக்ரைனும், ரஷியாவும் அணையை குண்டு வைத்து தகர்த்ததாக பரஸ்பர குற்றம்சாட்டியது.

    உக்ரைன்- ரஷியா போர் ஒன்றரை வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மீது கட்டப்பட்ட சோவியத்- காலத்து மிகப்பெரிய அணையான ககோவ்கா அணை ஜூன் 6-ம் தேதி உடைந்து 18 கியூபிக் கிலோமீட்டர் பரப்பளவு நீர், தென் உக்ரைன் பகுதியை மூழ்கடித்தது.

    இதை ஆராய்ந்த நார்வே நிலநடுக்கவியலாளர்களும், அமெரிக்க செயற்கைக்கோள்களும் இது குண்டு வைத்து தகர்த்தது போன்று இருப்பதாக தெரிவித்தன. எனினும், இந்த அணை உடைந்ததற்கு உக்ரைனும், ரஷியாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டின.

    இதன் தாக்கம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஐ.நா. சபையின் உதவிகளுக்கான தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ், இந்த தாக்குதலால் உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வும், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் பிரச்சனைகளும் ஏற்படலாம் என தெரிவித்திருக்கிறார்.

    மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

    கோதுமை, பார்லி, சோளம், ராப்சீட், ராப்சீட் எண்ணெய், சூரியகாந்தி விதை மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் உக்ரைன் மற்றும் ரஷியா முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த உடைப்பின் காரணமாக, வரப்போகும் பயிரிடும் காலங்களில் இவற்றை விதைப்பதிலும், அறுவடை செய்வதிலும் மிகப்பெரிய சிக்கல் வருவது தவிர்க்க முடியாதது.

    சுமார் 7 லட்சம் பேர் வரை குடிநீருக்காக அணைக்கு பின்னால் உள்ள நீர்த்தேக்கத்தை நம்பியிருக்கின்றனர். இந்த உடைப்பின் காரணமாக சுத்தமான குடிநீர் இல்லாமல் மக்கள் நோய்வாய்ப்படும் வாய்ப்பும், குழந்தைகளுக்கு அதிகமான பாதிப்பும் ஏற்படும்.

    ஜெனிவா உடன்படிக்கையின்படி ஏற்படுத்தப்பட்ட சட்டங்களுக்கு எதிரான வகையில், சிவிலியன் உள்கட்டமைப்புக்கு எதிராக இந்த பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது.

    "யார் இதை (அணை தகர்ப்பு) செய்திருந்தாலும் ஜெனிவா உடன்படிக்கைகளை மீறியதாகும்" என்றும் கிரிஃபித்ஸ் கூறினார்.

    • ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பகுதியில் கக்கோவ்கா அணை உடைக்கப்பட்டது.
    • பல அடி உயரத்துக்கு சென்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மூழ்கின.

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. போரில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளன. இதில் தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷியா கைப்பற்றியது.

    இதற்கிடையே ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பகுதியில் கக்கோவ்கா அணை உடைக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த நீர் மின் நிலையமும் சேதம் அடைந்தது.

    அணை மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் தான் தாக்குதல் நடத்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன.

    இதற்கிடையே டினிப்ரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிகப் பெரிய அணையின் ஒரு பகுதி உடைந்ததால் சுமார் 18 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் வெளியேறியது.

    அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் பல நகரங்கள், கிராமங்களுக்குள் புகுந்தது. பல அடி உயரத்துக்கு சென்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மூழ்கின.

    இந்நிலையில், ரஷ்யாவால் தகர்க்கப்பட்டதாக கூறப்படும் கக்கோவ்கா அணை மீது நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வெடிகள் மிதப்பதாகவும், அதிகளவில் நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் உக்ரைன் துணைப் பிரதமர் ஒலெக்சாண்டர் குப்ராகோவ் எச்சரித்துள்ளார்.

    மேலும் அவர், "முன்பு போடப்பட்ட கண்ணிவெடிகள் நீரில் தற்போது மிதந்து வருகிறது. அவை வெடித்து சிதறுகின்றன" என்றார்.

    • கெர்சன், கக்கோவ்கா பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உக்ரைன் அரசு அறிவுறுத்தியது.
    • அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரால் 24 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

    கிவ்:

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 1½ ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. போரில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளன.

    இதில் தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷியா கைப்பற்றியது. இதற்கிடையே ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பகுதியில் கக்கோவ்கா அணை உடைக்கப்பட்டது.

    மேலும் அங்கிருந்த நீர் மின் நிலையமும் சேதம் அடைந்தது. அணை மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் தான் தாக்குதல் நடத்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன.

    இதற்கிடையே டினிப்ரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிகப் பெரிய அணையின் ஒரு பகுதி உடைந்ததால் சுமார் 18 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் வெளியேறியது. இதையடுத்து கெர்சன், கக்கோவ்கா பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உக்ரைன் அரசு அறிவுறுத்தியது.

    மேலும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் பல நகரங்கள், கிராமங்களுக்குள் புகுந்தது. பல அடி உயரத்துக்கு சென்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மூழ்கின.

    சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. சில இடங்களில் வீடுகளும் வெள்ளத்தில் மிதந்து சென்றன. அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரால் 24 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

    அங்கிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 17 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். பலர் வீட்டின் கூரை மீது அமர்ந்து இருந்தனர். அவர்களை படகில் சென்று மீட்பு குழுவினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.

    அணை உடைந்துள்ளதால் ரஷிய மற்றும் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சுமார் 42 ஆயிரம் பேர் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில் அணையில் இருந்து வெளியேறிய வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதுதொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை கூறும்போது, 'உக்ரைன் அணை உடைப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும், என்று தெரிவித்துள்ளது.

    அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கெர்பி கூறும்போது, 'இந்த நேரத்தில் என்ன நடந்தது என்பதை அமெரிக்காவில் உறுதியாக கூற முடியாது. ஆனால் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்கா இறுதி முடிவுக்கு இன்னும் வரவில்லை. நாங்கள் தகவல்களை சேகரித்து உக்ரைனியர்களுடன் பேச முயற்சிக்கிறோம்' என்றார்.

    இதற்கிடையே ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள நதிக்கரையில் இருக்கும் கஸ்கோவா டிப்ரோவா உயிரியல் பூங்கா முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கிருந்த 300 விலங்குகளும் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×