search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srivilliputhur robbery"

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தீயணைப்புத்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வருபவர் வீரராஜ்(வயது45). இவர் விருதுநகர் அருகே உள்ள கள்ளிக்குடி தீயணைப்பு நிலையத்தில் அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று வீரராஜ் பணிக்கு சென்றதால் அவரது மனைவி சங்கீதா இரவு 10 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார்.

    இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் இரவு வீட்டிற்குள் புகுந்துள்ளனர். இன்று காலை வீட்டிற்கு வந்த சங்கீதா வீட்டின் முன்புறம் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவை உடைத்து அதில் இருந்த 30 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சம் வரை கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் டி.எஸ்.பி. ராஜா இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் கொலை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் தடயவியல் துறை அதிகாரிகள் வந்து கொள்ளை அடிக்கப்பட்ட வீட்டை பார்வையிட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

    வன்னியம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியில் வீடுகள் அதிகமாகவும் நெருக்கமாகவும் உள்ள இடம். அந்த இடத்தில் இரவு நேரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி ரூ.70 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வலையங்குளம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு கூமாப்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 50) என்பவர் சூப்பர்வைசராகவும், பாரதக்கனி என்பவர் விற்பனையாளராகவும் உள்ளனர்.

    நேற்று இரவு பணியை முடித்துவிட்டு விற்பனை பணம் ரூ.70 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

    காடனேரி பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவர்களை மறித்தனர்.

    அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள், மாரிமுத்துவிடம் இருந்த ரூ.70 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பினர்.

    இது குறித்த புகாரின் பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போக்குவரத்து ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி கிராமத்தில் பாட்டகுளம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருபவர் கணேஷ் குமார்.

    இவர் வழக்கம் போல் பணிக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி முள்ளி குளம் கிராமத்திற்கு சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட திருடர்கள் வீட்டின் பின்புறம் உள்ள கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்து 15 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் 40 ஆயிரம் ரூபாய் மற்றும் கேமிரா ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். கணேஷ்குமார் வீடு திரும்பியபோது நகை-பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து மல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர்.

    போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று படுத்துக் கொண்டது. கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
    ×