என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி ரூ.70 ஆயிரம் கொள்ளை
    X

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி ரூ.70 ஆயிரம் கொள்ளை

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி ரூ.70 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வலையங்குளம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு கூமாப்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 50) என்பவர் சூப்பர்வைசராகவும், பாரதக்கனி என்பவர் விற்பனையாளராகவும் உள்ளனர்.

    நேற்று இரவு பணியை முடித்துவிட்டு விற்பனை பணம் ரூ.70 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

    காடனேரி பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவர்களை மறித்தனர்.

    அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள், மாரிமுத்துவிடம் இருந்த ரூ.70 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பினர்.

    இது குறித்த புகாரின் பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×