search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "spot fixing"

    கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக கடந்த ஓராண்டில் ஐந்து கேப்டன்களை சூதாட்ட தரகர்கள் அணுகியதாக ஐசிசி அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது. #ICC
    கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் நடைபெறுவதை தடுக்க ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) ஊழல் தடுப்பு குழுவை அமைத்துள்ளது. இந்த குழு வீரர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது. எவ்வளவுதான் விழிப்புணர்வுடன் இருந்தாலும் சூதாட்ட தரகர்கள் வீரர்களை அணுகி விடுகிறார்கள். சில வீரர்கள் பேராசைப்படுவதால் மேட்ச் பிக்சிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டு சிக்கி கொள்கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டில் 5 கேப்டன்களை சூதாட்ட தரகர்கள் அணுகி உள்ளதாக ஐசிசி-யின் ஊழல் தடுப்பு பொது மேலாளர் அலெக்ஸ் மார்‌ஷல் பரபரப்பான தகவலை வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கடந்த ஒராண்டில் மட்டும் 5 சர்வதேச கேப்டன்களை சூதாட்ட தரகர்கள் (புக்கிகள்) அணுகியுள்ளனர். ஆனால் அந்த கேப்டன்களின் பெயர்களை இப்போதைக்கு நாங்கள் தெரிவிக்கமாட்டோம்.

    ஆசிய கோப்பை போட்டித் தொடரில் ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான முகமது ‌ஷேசாத்தை சூதாட்ட தரகர்கள் அணுகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் ப்ரிமீயர் ‘லீக்’ போட்டி சார்ஜாவில் அக்டோபர் மாதம் நடக்கிறது. இந்தப்போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு அவரிடம் புக்கிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இது தொடர்பான புகாரை ‌ஷசாத் எங்களிடம் தெரிவித்துள்ளார்.

    ஒருநாள் போட்டியைவிட 20 ஓவர் ஆட்டங்களில்தான் ஸ்பாட் பிக்சிங், மேட்ச் பிக்சிங் சூதாட்ட வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது.



    20 ஓவர் போட்டிகளில் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கு பஞ்சம் இல்லாததால் சூதாட்ட தரகர்கள் வீரர்களை அணுகுகின்றனர். தனியாக நடத்தப்படும் 20 ஓவர்கள் போட்டிகளில் சூதாட்டத்தை தடுப்பது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

    பெரும்பாலான சூதாட்ட தரகர்கள் இந்தியர்கள். அவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக 32 விசாரணை நடைபெற்றுள்ளது. இதில் 23 சம்பவங்களை வீரர்கள், நடுவர்கள் தெரிவித்தவையாகும். 8 சம்பவங்களில் வீரர்களின் செயல்பாடு சந்தேகத்தை அளித்துள்ளது. இதில் 4 முன்னாள் வீரர்களிடம் இன்று வரை விசாரணை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அலெக்ஸ் மார்‌ஷல் கூறியுள்ளார்.
    சூதாட்ட புகார் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாம்ஷெட்டுக்கு 10 ஆண்டு காலம் விளையாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. #SpotFixing #NasirJamshed
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசிர் ஜாம்ஷெட், இவர் 48 ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    கடந்த 2017-ம் ஆண்டில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் நசீர் ஜாம்ஷெட் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது சூதாட்ட புகாரில் சிக்கியதாக இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வந்தது.

    இந்நிலையில், சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாம்ஷெட்டுக்கு 10 ஆண்டு காலம் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று தடை விதித்துள்ளது.

    இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ஜாம்ஷெட் மீதான சூதாட்ட புகார்கள் உண்மையானவை என தெரிய வந்துள்ளது. எனவே, எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட அவருக்கு 10 ஆண்டு காலம் தடை விதிக்கப்படுகிறது. மேலும், இதில் தொடர்புடைய ஷர்ஜில் கான் மற்றும் காலித் லத்தீப் ஆகியோருக்கு 5 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். #SpotFixing #NasirJamshed
    ×