search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shed"

    • தீ வேகமாக சென்று கொட்டகையில் பட்டு கொட்டகை எரிந்து சாம்பலானது.
    • பனை மரத்திற்கு தீ வைத்து எரித்து விட்டு ஓடிவிட்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வேட்டங்குடியிலிருந்து தொடுவாய் செல்லும் சாலை ஓரத்தில் சீர்காழியை சேர்ந்த விவசாயி சங்கர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கீற்றுக் கொட்டகை உள்ளது.

    காலை அப்பகுதியில் உள்ள பனை மரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து காற்று வீசும்போது பனை மரத்திலிருந்து தீ வேகமாகச் சென்று கொட்டகையில் பட்டு கொட்டகை எரிந்து சாம்பல் ஆனது.

    இதில் கொட்டகைக்குள் இருந்த உரங்கள், பூச்சி மருந்துகள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பல் ஆயின.

    தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் அப்பகுதியில் யாரோ சில இளைஞர்கள் வந்து அங்குள்ள பனை மரத்திற்கு தீ வைத்து எரித்து விட்டு ஓடிவிட்டதாகவும், பனை மரத்தில் எரிந்து கொண்டிருந்த தீ மேலும் பரவி கொட்டகையில் பட்டு கொட்டகை தீயில் எரிந்து சாம்பலானதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்றிரவு ஓட்டலின் பின்பக்கம் உள்ள கீற்று சமையல் கூடம் தீடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
    • தீ விபத்தில் பல லட்சம் மதிப்பு பொருட்கள் எரிந்து முற்றிலும் நாசமாயின.

    வேதாரண்யம்:

    வேதாரணியம் சேதுர ஸ்தாவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 67). இவர் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலின் அருகில்மே லமட வளாகத்தில் 40 ஆண்டுகளாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு இவரது ஓட்டலின் பின்பக்கம் உள்ள கீற்று சமையல் கூடம் தீடீரென்று தீப்பிடித்து எரிந்தது தீ மளமள என்று பரவி சமையல் கொட்டகை முற்றிலும் எரிந்து சாம்பலானது.

    தகவல் அறிந்த வேதாரண்யம் தீயணைப்புத் துறையினர் மேலும் பரவாமல் அணைத்தனர். டிஎஸ்பி முருகவேல் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வந்து பார்னவையிட்டனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பு பொருட்கள் எரிந்து முற்றிலும் நாசமாயின.

    • மழை காலங்களில்தக்காளி செடி பாதிப்பதோடு, மண்ணில் விழுந்து காய்களும் அழுகி வீணாகி நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வரும் சூழல் உள்ளது.
    • பந்தல் அமைக்கும் பொழுது மண்ணோடு செடி, காய்கள் ஒட்டாதததோடு மழை பெய்தாலும், தரமான தக்காளி அறுவடை செய்ய முடியும்.

    உடுமலை :

    உடுமலை பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக மாறியுள்ளது. ஆண்டு முழுவதும் சாகுபடி சீசன் காலங்களில் ஏறத்தாழ 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு வரை சாகுபடி செய்யப்படுகிறது. மழை காலங்களில்தக்காளி செடி பாதிப்பதோடு, மண்ணில் விழுந்து காய்களும் அழுகி வீணாகி பெரும் நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வரும் சூழல் உள்ளது.

    இதற்கு தீர்வு காணும் வகையில்தோட்டக்கலைத்துறை சார்பில் தக்காளிச்செடிகளுக்கு குச்சி நட்டு, கம்பி கட்டி நவீன முறையில் பந்தல் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதோடு விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.

    உடுமலை பகுதிகளுக்கு இத்திட்டம் நடைமுறையில் இல்லாத நிலையில் நடப்பாண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது. இது குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:-

    மழை காலங்களில் தக்காளி செடிகள் மற்றும் காய்கள் மண்ணில் விழுந்தும், மழை நீர் வடியாமலும், ஒட்டுமொத்த சாகுபடியும் பாதிக்கிறது.இதற்கு தக்காளி நடவு செய்த வயல்களில் 6 அடி குச்சி நட்டு, 3 வரிசை கம்பி கட்டி, செடிகளை, கயிறு வழியாக இணைத்து, பாதுகாக்கும் தக்காளி பந்தல் நடைமுறை உள்ளது.இவ்வாறு செய்யும் போது மண்ணோடு செடி, காய்கள் ஒட்டாததோடு மழை பெய்தாலும், தரமான தக்காளி அறுவடை செய்ய முடியும்.

    கூடுதல் மகசூல் பெறமுடியும். நடப்பாண்டு முதல் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பந்தல் அமைத்தால் தோட்டக்கலைத்துறை சார்பில், ஹெக்டருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 100 ஹெக்டர் பரப்பளவில், மானியம் வழங்க இலக்கு நிர்ணயித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எனவே, விவசாயிகள் இந்த நடைமுறையில், பந்தல் அமைத்து, உரிய பில், ஆவணங்களுடன் விண்ணப்பித்து, பின்னேற்பு மானியமாக தொகையை பெற்றுக்கொள்ளலாம்.மேலும், விபரங்களுக்கு தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    ×