search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sampath MLA"

    • சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • தற்போது இந்த 2 ஏரிகளையும் ஆழப்படுத்தி நீர் தேக்கி மிகப்பெரிய சுற்றுலா தளமாக மாற்ற இந்த அரசின் சுற்றுலா துறையும் பொதுப் பணித்துறை யும் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

    புதுச்சேரி:

    வேல்ராம்பட் ஏரியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணணிடம் முதலியார் பேட்டை சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார். இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    முதலியார்பேட்டை வேல்ராம்பட்டில் உள்ள உழந்தை மற்றும் முருங்கப்பாக்கம் ஆகிய 2 பெரிய ஏரிகள் உள்ளன நகரப் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய நீர் பிடிப்பு பகுதியாகவும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும் இந்த ஏரிகள் பயன்படுகிறது.

    இந்த ஏரிக்கு ஊசுடு ஏரியிலிருந்து உபரி நீர் கால்வாய் வழியாக வந்தடைகிறது. இந்நீர் வழிப்பாதையில் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும் கலந்து வருகின்றது. தற்போது இந்த 2 ஏரிகளையும் ஆழப்படுத்தி நீர் தேக்கி மிகப்பெரிய சுற்றுலா தளமாக மாற்ற இந்த அரசின் சுற்றுலா துறையும் பொதுப் பணித்துறை யும் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

    இதற்கு முதலியார் பேட்டை தொகுதி மக்கள் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஏரிகளில் மழை நீரை தேக்க பல கோடி ரூபாய் செலவில் புதுச்சேரி பொலிவுறு நகரத்திட்டம் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு பொதுப்பணி த்துறை சார்பில் வாய்க்கால் அமைக்க ப்பட்டு வருகின்றது. இந்த ஏரிக்கு வரும் நீரில் கழிவு நீரும் கலந்து வருகின்றது. இதனால் இந்த ஏரி கழிவுநீர் தேங்கி குட்டையாக மாறி வரும் அபாயம் உள்ளது. இதனால் இந்த பகுதியில் சுற்றுலா திட்டம் நிறைவேற்ற வாய்ப்பு குறைந்து, நோக்கமே கேள்விக்குறியாகி விடும்.

    எனவே, இந்த ஏரியின் முகப்பில் ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைத்து ஏரிக்கு வரும் நீரை முறையாக சுத்திகரிப்பு செய்து பின்னர் தான் நீரை ஏரிக்கு செல்லும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
    • மாநில இளைஞர் அணிக்கு தலைமை கழகத்தால் விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. 15-வது உட்கட்சித் தேர்தலில் முதல் கட்டமாக மாநில நிர்வாகம், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு, தொகுதி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

    அடுத்த கட்டமாக கட்சியின் 23 அணிகளில் முதல் அணியாக உள்ள மாநில இளைஞர் அணிக்கு தலைமை கழகத்தால் விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது.

    தி.மு.க. அமைப்பாளர் சிவா பரிந்துரைப்படி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒப்புதலுடன், புதுவை மாநில தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமித்து தி.மு.க.வின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    புதுவை மாநில தி.மு.க. இளைஞர் அணிக்கு புதிய அமைப்பாளராக முலியார்பேட்டை சம்பத் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார்.

    துணை அமைப்பாளர்க ளாக மணவெளி தொகுதி தமிழ்பிரியன், முத்தியால் பேட்டை உத்தமன், உருளையன் பேட்டை வக்கீல் ரெமி எட்வின்குமார், மண்ணாடிப்பட்டு வக்கீல் அகிலன், உருளை யன்பேட்டை தொகுதி தாமரைக்கண்ணன், நெல்லித்தோப்பு கிருபா சங்கர், நெல்லித்தோப்பு சந்துரு, வில்லியனூர் பஜூலுதீன், உப்பளம் நித்திஷ் நிமோத்தி, திருபுவனை முகிலன் அல்லிமுத்து ஆகிய 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • 65 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறு வதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழச்சிக்கான ஏற்பாடுகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் முதியோர் , விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியவருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் முதலியார் பேட்டை தொகுதியைச் சேர்ந்த தகுதி வாய்ந்த 65 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறு வதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி முதலியார் பேட்டை பாரதிதாசன் நகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் முதலியார் பேட்டை சம்பத் எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறு வதற்கான ஆணையை வழங்கினார். நிகழச்சிக்கான ஏற்பாடுகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

    • குடிநீரில் இரும்பு துகள்கள் கலந்து மாசு பட்டும் பழுப்பு நிறத்திலும் வருவதாக பொதுமக்கள் சம்பத் எம்.எல்.ஏ.விடம் புகார் தெரிவித்தனர்.
    • புதிய குடிநீர் குழாய் அமைக்க ரூ. 17 லட்சம் செலவில் திட்டம் தயாரிக்கபட்டது.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை ஏ.எப்.டி. ஆலை வீதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பட்டம்மாள் நகர் , இந்திரா நகர், மாங்காளி அம்மன் நகர், தயானந்த வீதி ஆகிய பகுதிகளில் குடிநீர் வழங்கும் குழாய்கள் துருபிடித்ததால் வீடுகளுக்கு வரும் குடிநீரில் இரும்பு துகள்கள் கலந்து மாசு பட்டும் பழுப்பு நிறத்திலும் வருவதாக பொதுமக்கள் சம்பத் எம்.எல்.ஏ.விடம் புகார் தெரிவித்தனர்.

    இதனை சரிசெய்ய பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட அதிகாரிகளிடம் தேவையான நடவ டிக்கையை எடுக்க சம்பத் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து புதிய குடிநீர் குழாய் அமைக்க ரூ. 17 லட்சம் செலவில் திட்டம் தயாரிக்கபட்டது.

    அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி சம்பத் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. இதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மின்தகன மேடை திட்டத்தை, ஸ்மார்ட் சிட்டி திட்ட நிறுவனமே நேரடியாக செயல்படுத்த வேண்டும் என சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
    • 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த சுடுகாட்டில் தினமும் இறந்தோரின் உடல்கள் எரிப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கிறது.

    புதுச்சேரி:

    தேங்காய்திட்டு சுடுகாடு மின்தகன மேடை திட்டத்தை, ஸ்மார்ட் சிட்டி திட்ட நிறுவனமே நேரடியாக செயல்படுத்த வேண்டும் என சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

    இது குறித்து அவர், ஸ்மார்ட் சிட்டி திட்ட இணை செயல் அதிகாரியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    முதலியார்பேட்டை, தேங்காய்திட்டில் சுடுகாடு உள்ளது. இதனை சுற்றி பல குடியிருப்புகள் வந்து விட்டது. இங்கு, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

    இந்த சுடுகாட்டில் தினமும் இறந்தோரின் உடல்கள் எரிப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கிறது. மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

    இதனால் கருவ–டிக்குப்பத்தில் உள்ளது போல மின்தகன மேடை அமைக்க வேண்டும் என நான் கோரிக்கை வைத்தேன். அதனையேற்று அரசு ரூ.4 கோடியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒதுக்கீடு செய்து, பணியை செயல்படுத்தும் பொறுப்பு புதுவை நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    10 மாதங்களாகியும், திட்டத்தை செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இத்திட்டத்தை ஸ்மார்ட் சிட்டி திட்ட நிறுவனமே, நேரடியாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட கீழ்தோப்பு பகுதியில் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த குடியிருப்புகள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
    • இதனையறிந்து, யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ண ராஜூ, தனது நிர்வாக குழுவினரை அனுப்பி பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக உணவு வழங்க ஏற்பாடு செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட கீழ்தோப்பு பகுதியில் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த குடியிருப்புகள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

    இதனால், அங்கு வசித்து வந்த 18 குடும்பத்தினர் வீடு மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த நிலையில் அவர்கள் தற்காலிகமாக சமுதாய நலக்கூடத்தில் தங்கியுள்ளனர்.

    இதனையறிந்து, யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ண ராஜூ, தனது நிர்வாக குழுவினரை அனுப்பி பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக உணவு வழங்க ஏற்பாடு செய்தார்.

    அதன்படி 18 குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உட்பட 70 பேர்களுக்கு இரவு உணவு, பால், பிஸ்கட், தண்ணீர், பாய் மற்றும் தலையனை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக அவர்களுக்கு யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் 3 வேளை உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.

    மேலும் இதுகுறித்து நிறுவனர் கிருஷ்ணராஜூ முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. சம்பத்தை சந்தித்து பேசியதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கான காசோலையை, யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ முன்னிலை யில் சம்பத் எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்ட குடும்ப ங்களுக்கு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் யுவர் பேக்கர்ஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • முதலியார்பேட்டை தொகுதியில் நிலவும் மின்சார பிரச்சினைகள் தொடர்பாக மின்துறை அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் சம்பத் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.
    • பொதுமக்கள் சார்பில் மின்துறை தொடர்பாக எழுந்த புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து மின் துறை அதிகாரிகளிடம் சம்பத் எம்.எல்.ஏ. எடுத்துரைத்தார்.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தொகுதியில் நிலவும் மின்சார பிரச்சினைகள் தொடர்பாக மின்துறை அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் சம்பத் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.

    ஆலோசனைக் கூட்டத்தில், மின் துறை உதவி பொறியாளர் கில்பர்ட் ஜேம்ஸ், இளநிலை பொறியாளர்கள் செல்வ பாண்டியன், செல்வமுத்தையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பொதுமக்கள் சார்பில் மின்துறை தொடர்பாக எழுந்த புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து மின் துறை அதிகாரிகளிடம் சம்பத் எம்.எல்.ஏ. எடுத்துரைத்தார்.

    இந்நிலையில், எரியாத மின்விளக்குகள் படிப்படியாக மாற்றி தருவது என்றும், முக்கிய சந்திப்புகளில் ஹைமாஸ் விளக்குகள் பொருத்துவது என்றும், கடலூர் சாலையிலிருந்து பணிகள் துவங்க அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

    முதலியார்பேட்டை தொகுதியில் ஓட்டல்களில் தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் சம்பத் எம்.எல்.ஏ.,விடம் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தொகுதி மக்களுக்கு பாதுகாப்பான உணவு பொருட்கள் கிடைக்க ஏதுவாக உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு, உணவு பாதுகாப்பு துறை மற்றும் எடை அளவு ஆகிய துறைகளின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் முதலியார்பேட்டை எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு  சம்பத் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.
    கூட்டத்தில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ரக்சனாசிங், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பாலகிருஷ்ணன், எடை அளவுகள் துறை ஆய்வாளர் தேவதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் பெட்ரோல், டீசல் அளவீட்டிலும், தரத்திலும் தவறு நடக்காமல் தடுப்பது. 
    தொகுதிக்குட்பட்ட பகுதியிலுள்ள அசைவ மற்றும் துரித உணவகங்கள், ஓட்டல்களில் பொது மக்களுக்கு தரமான உணவு வழங்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.
    மீன் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்களில் தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பது, மளிகை கடையில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம் மற்றும் எடையின் அளவு சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்வது என பல கோணங்களில் விவாதிக்கப்பட்டது.

    முதலியார் பேட்டை தொகுதிக்குட்பட்ட கடைகள் மற்றும் உணவகங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரம் மற்றும் எடையை சரியாக இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் சம்பத் எம்.எல்.ஏ.,விடம் உறுதி அளித்தனர். இதுதொடர்பாக விரைவில் திடீர் கள ஆய்வுகள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×