search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வேல்ராம்பட்டில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்
    X

     பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்த காட்சி.

    வேல்ராம்பட்டில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்

    • சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • தற்போது இந்த 2 ஏரிகளையும் ஆழப்படுத்தி நீர் தேக்கி மிகப்பெரிய சுற்றுலா தளமாக மாற்ற இந்த அரசின் சுற்றுலா துறையும் பொதுப் பணித்துறை யும் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

    புதுச்சேரி:

    வேல்ராம்பட் ஏரியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணணிடம் முதலியார் பேட்டை சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார். இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    முதலியார்பேட்டை வேல்ராம்பட்டில் உள்ள உழந்தை மற்றும் முருங்கப்பாக்கம் ஆகிய 2 பெரிய ஏரிகள் உள்ளன நகரப் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய நீர் பிடிப்பு பகுதியாகவும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும் இந்த ஏரிகள் பயன்படுகிறது.

    இந்த ஏரிக்கு ஊசுடு ஏரியிலிருந்து உபரி நீர் கால்வாய் வழியாக வந்தடைகிறது. இந்நீர் வழிப்பாதையில் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும் கலந்து வருகின்றது. தற்போது இந்த 2 ஏரிகளையும் ஆழப்படுத்தி நீர் தேக்கி மிகப்பெரிய சுற்றுலா தளமாக மாற்ற இந்த அரசின் சுற்றுலா துறையும் பொதுப் பணித்துறை யும் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

    இதற்கு முதலியார் பேட்டை தொகுதி மக்கள் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஏரிகளில் மழை நீரை தேக்க பல கோடி ரூபாய் செலவில் புதுச்சேரி பொலிவுறு நகரத்திட்டம் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு பொதுப்பணி த்துறை சார்பில் வாய்க்கால் அமைக்க ப்பட்டு வருகின்றது. இந்த ஏரிக்கு வரும் நீரில் கழிவு நீரும் கலந்து வருகின்றது. இதனால் இந்த ஏரி கழிவுநீர் தேங்கி குட்டையாக மாறி வரும் அபாயம் உள்ளது. இதனால் இந்த பகுதியில் சுற்றுலா திட்டம் நிறைவேற்ற வாய்ப்பு குறைந்து, நோக்கமே கேள்விக்குறியாகி விடும்.

    எனவே, இந்த ஏரியின் முகப்பில் ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைத்து ஏரிக்கு வரும் நீரை முறையாக சுத்திகரிப்பு செய்து பின்னர் தான் நீரை ஏரிக்கு செல்லும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×