search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சுடுகாட்டில் மின்தகன மேடை- சம்பத் எம்.எல்.ஏ. மனு
    X

    தேங்காய்திட்டு சுடுகாட்டில் மின்தகன மேடை திட்டத்தை ஸ்மார்ட் சிட்டி திட்ட நிறுவனமே நேரடியாக செயல்படுத்த வலியுறுத்தி, திட்ட இணை செயல் அதிகாரியிடம் சம்பத் எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி.

    சுடுகாட்டில் மின்தகன மேடை- சம்பத் எம்.எல்.ஏ. மனு

    • மின்தகன மேடை திட்டத்தை, ஸ்மார்ட் சிட்டி திட்ட நிறுவனமே நேரடியாக செயல்படுத்த வேண்டும் என சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
    • 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த சுடுகாட்டில் தினமும் இறந்தோரின் உடல்கள் எரிப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கிறது.

    புதுச்சேரி:

    தேங்காய்திட்டு சுடுகாடு மின்தகன மேடை திட்டத்தை, ஸ்மார்ட் சிட்டி திட்ட நிறுவனமே நேரடியாக செயல்படுத்த வேண்டும் என சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

    இது குறித்து அவர், ஸ்மார்ட் சிட்டி திட்ட இணை செயல் அதிகாரியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    முதலியார்பேட்டை, தேங்காய்திட்டில் சுடுகாடு உள்ளது. இதனை சுற்றி பல குடியிருப்புகள் வந்து விட்டது. இங்கு, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

    இந்த சுடுகாட்டில் தினமும் இறந்தோரின் உடல்கள் எரிப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கிறது. மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

    இதனால் கருவ–டிக்குப்பத்தில் உள்ளது போல மின்தகன மேடை அமைக்க வேண்டும் என நான் கோரிக்கை வைத்தேன். அதனையேற்று அரசு ரூ.4 கோடியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒதுக்கீடு செய்து, பணியை செயல்படுத்தும் பொறுப்பு புதுவை நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    10 மாதங்களாகியும், திட்டத்தை செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இத்திட்டத்தை ஸ்மார்ட் சிட்டி திட்ட நிறுவனமே, நேரடியாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×