search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rain In Chennai"

    • சென்னை உள்ளிட்டு சுற்றுப்புற பகுதிகளில் நள்ளிரவு முதல் லேசான மழை பெய்து வருகிறது
    • தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 20ம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு அதிகனமழை பெய்யக்கூடும் எனவும் இதற்காக இந்த மூன்று மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை உள்ளிட்டு சுற்றுப்புற பகுதிகளில் நள்ளிரவு முதல் லேசான மழை பெய்து வருகிறது

    இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், நெல்லை, தேனி, தென்காசி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (10 மணி வரை) லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • காலையில் வெயில் தலைகாட்டிய நிலையில் இன்று நள்ளிரவில் கனமழை.
    • சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

    சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெயிலால் அவதிப்பட்டு மக்கள் சற்று ஆறுதல் அடைந்து வருகின்றனர்.

    இருப்பினும் நேற்று காலையில் வெயில் தலைகாட்டிய நிலையில் இன்று நள்ளிரவில் சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிழ மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக, மயிலாப்பூர், ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, எழும்பூர், தேனாம்பேட்டை, சேப்பாக்கம், அம்பத்தூர், முகப்பேர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    ஏற்கனவே, சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு.
    • மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

    தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கடந்த சில நாட்களாகவே சென்னையில் பகல் நேரங்களில் வெயிலும், இரவில் இடியுடன் கூடிய மழையும் பெய்து வந்தது. இந்நிலையில், இன்று சென்னையில் அசோக் நகர், வடபழனி, கோடம்பாக்கம், ஆலந்தூர், ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், கே.கே.நகர், மேடவாக்கம், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

    சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதாலும் சீரற்ற வானிலை நிலவுவதாலும் இன்று விமானங்கள் தாமதமாக வந்து செல்கின்றன. #ChennaiRain #ChennaiAirTraffic
    சென்னை:

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. நகர்ப்புறங்களில் ஒருசில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து மெதுவாக இருந்தது. வானம் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.

    இந்நிலையில் சென்னையில் வானிலை சீரற்ற நிலையில் இருப்பதால் இன்று காலையில் விமானங்கள் தாமதமாக வந்து சென்றன.

    மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றாலத்தில் மட்டும் இன்று குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.



    அரபிக்கடலில் உருவாகியிருக்கும் மேலடுக்கு சுழற்சியானது குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகும் என்றும்,  அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் எனவும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. எனவே, தமிழகத்திற்கு அடுத்து வரும் நாட்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக 7-ம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #ChennaiRain #ChennaiAirTraffic
    ×