என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை
- தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு.
- மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே சென்னையில் பகல் நேரங்களில் வெயிலும், இரவில் இடியுடன் கூடிய மழையும் பெய்து வந்தது. இந்நிலையில், இன்று சென்னையில் அசோக் நகர், வடபழனி, கோடம்பாக்கம், ஆலந்தூர், ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், கே.கே.நகர், மேடவாக்கம், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
Next Story






