என் மலர்

  நீங்கள் தேடியது "Property Remedies"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சொத்துக்கள் மேல் அதிகம் பற்று உள்ளவர்களின் ஆன்மா எளிதில் உடலை விட்டு பிரிவதில்லை.
  • ஒவ்வொரு பாவத்திற்கும் ஒவ்வொருவிதமான பரிகாரங்கள் செய்ய வேண்டும்.

  மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் அவரவர் பொருள் மீது பற்று இருப்பது இயல்பு. அதுவும் வீடு, நிலம், தோட்டம், வாகனம், நகை போன்ற அசையும், அசையாச் சொத்துக்கள் மீது ஈர்ப்பு மிகுதியாகவே இருக்கும். அதனால் அவர்களின் ஆயுட்காலத்திற்கு பின் இது போன்ற உடமைகளை அவர்களுடைய வாரிசுகளுக்கு பகிர்ந்து கொடுப்பார்கள். ஆனால் குழந்தை இல்லாதவர்களுக்கு ஆழ் மனதில் தங்களது சொத்து சுகங்களை அனுபவிக்க வாரிசுகள் இல்லை என்ற மனத்தாங்கள் இருந்து கொண்டே இருக்கும். அதனால் அவர்கள் தங்களது ஆயுள் காலத்தில் தங்களது உடமைகளை பிறருக்கு எளிதில் வழங்க முன் வருவதில்லை.

  வெகு சிலர் நல்லெண்ணத்துடன் தங்கள் கடைசி காலத்திற்குள் தங்கள் சொத்துக்கள் யாரைச் சென்று அடையும் என்று உயில் எழுதிவிடுவார்கள். பொதுவாக சொத்துக்கள் மேல் அதிகம் பற்று உள்ளவர்களின் ஆன்மா எளிதில் உடலை விட்டு பிரிவதில்லை. சிலரின் ஆன்மா உடலை விட்டு வெளியேற முடியாமல் மரணப்படுக்கையில் அவஸ்தையை அனுபவிக்க இதுவே மூல காரணமாகும். அல்லது சிலருக்கு நிறைவேறாத ஆசையால் உயிர் பிரிய மிகவும் சிரமப்படுகிறது.

  மேலும் அவர்கள் இறந்த பிறகும் அவர்களின் ஆன்மா அந்த சொத்துக்கள் உள்ள இடத்தில் தான் வாழும். தாங்கள் உபயோகித்த பொருட்களை அவர்களுக்கு பிடிக்காதவர்கள் பயன்படுத்தினால் அவர்களுக்கு மன வேதனையால் அவர்களை சபிப்பார்கள். இதிலிருந்து புரிந்து கொள்வது என்னவென்றால் விருப்பம் இல்லாத ஒருவரின் பொருளை பயன்படுத்துபவர்களுக்கு அவஸ்தையை தருகிறது.

  இன்னும் சில குடும்பங்களில் 3 தலை முறைக்கு மேல் விற்கவோ அனுபவிக்கவோ முடியாத வாரிசு இல்லாத சொத்துக்கள் இருக்கும் அல்லது அதன் மீது யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சினையில் வழக்கு நடக்கும்.

  பல குடும்பங்களில் 2,3 தலைமுறையாக வாரிசு இல்லாத சொத்தை உருட்டி கொண்டு இருப்பார்கள். 4 வது தலைமுறையில் திடீரென அந்த சொத்து தொடர்பாக ஒரு நல்ல முடிவு வரும். இது எப்படி சாத்தியமாகியது என்று ஆய்வு செய்து பார்த்தால் வாரிசு இல்லாமல் இறந்தவருக்கும் சொத்து பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வந்தவருக்கும் உருவ ஒற்றுமை, பெயர் ஒற்றுமை என ஏதாவது ஒரு ஒற்றுமை நிச்சயம் பார்க்க முடியும். முன் ஜென்மம், நிகழ் ஜென்மத்திற்கும் உள்ள உருவ ஒற்றுமை, பெயர் ஒற்றுமை ஆகியவை இருக்கும் விதமாக பல திரைப்படங்கள் வந்து கொண்டு இருப்பதே இதற்கு சாட்சி.

  பல குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களே திரைப்படங்களாக சித்தரிக்கப்படுகின்றன.அதனால் தான் நமது முன்னோர்கள் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த பெரியவர்களின் பெயர்களை தம் வாரிசுகளுக்கு வைத்து மகிழ்ந்திருக்கிறார்கள். இது போன்ற வாரிசு இல்லாதவர்களின் சொத்து பங்குக்கு பங்காளிகள் பல வருடங்களாக அன்னம், தண்ணீர் புழங்காமல் நல்லது கெட்டதில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். இதை நமது தாத்தா, பாட்டிகள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடந்த வாரிசு இல்லாத சொத்துக்கள் மூலம் ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றி பேசுவதை நாம் கேள்வி பட்டு இருப்போம்.

  நம்பிக்கை உள்ளவர்களுக்கு மறுபிறவி. ராகு என்பது பாட்டன் முப்பாட்டன். ஜோதிடத்திலும் மறுபிறப்பிலும் நம்பிக்கை உள்ள யாரும் இந்த கருத்தை மறுக்க முடியாது. இதை பல குடும்பத்தினர் உணர்ந்தும் இருப்பர். கலியுகத்திற்கு ஏற்ப பலன் சொல்ல வேண்டுமானால் பெரும் பணத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்ற குழந்தை உருவாக கால பகவான் எடுத்துக் கொண்ட கால அளவு.

  எனவே உயில் எழுதாத வாரிசு சொத்து எளிதாக யாருக்கும் பயன் தருவதில்லை. உளவியல் ரீதியாக அந்த சொத்துக்களை அனுபவிப்பவர்களின் வாரிசுகள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். வெகு சிலருக்கு மட்டுமே இது போன்ற சொத்துக்கள் பயன்படும்.

  ஜனன கால ஜாதகத்தில் அஷ்டம, பாதக ஸ்தானத்திற்கு புதன், சனி+ ராகு/கேது சம்பந்தம் இருப்பவர்கள் வாரிசில்லா சொத்து அல்லது உயில் சொத்தை தவிர்த்தல் நலம் அல்லது ஆதரவற்ற முதியவர்கள் இல்லம், குழந்தைகள் காப்பகத்திற்கு,தொண்டு நிறுவனங்களுக்கு தானம் தருதல் புண்ணிய பலனை அதிகப்படுத்தும். உழைக்காத பணம் ஒரு ரூபாயாக இருந்தால் கூட பலமடங்காக இழக்க நேரும். ஜனன கால ஜாதகத்தில் 5,8-ம் பாவகத்திற்கு புதன்,சனி + ராகு/கேது சம்பந்தம் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்ட பணம், உயில் சொத்து, வாரிசில்லா சொத்து பயன்தரும். அதை பயன்படுத்துபவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சொத்தின் உரிமையாளர்களுக்கு நீத்தார் கடன் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

  பிரச்சினையும் சரியாக வேண்டும். ஓரளவு நன்றாக வாழவேண்டும். இது தான் அனைவரின் ஆசைகள். சராசரி மனிதனின் வாழ்வை ஆன்மீகத்தின் துணை கொண்டு வெல்ல முடியுமா என்றால் நிச்சயம் வெல்ல முடியும்.இதை நிறைவேற்றி தருவது பிரபஞ்சத்தின் கடமை. ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஆத்ம சுத்தியுடன் பரிகாரங்களை கடைபிடித்தால் பிரபஞ்சத்திடமிருந்து நல்ல செய்திகள் தேடி வரும்.

  வாழ்க்கை வசந்தமாகும் கடந்து போன வினாடியோடு நம் வாழ்க்கை முடியாமல் இன்று, இந்த நிமிடம், இந்த நொடி நாம் உயிரோடு இருப்பது நமக்குள் இருக்கும் இறையருள் என்பதை உணர வேண்டும். இதை விட இறைவன் நமக்கு எதைக் கொடுக்க முடியும். ஒவ்வொரு வினாடியும் நம்மை உயிரோடு இருக்கச் செய்யும் இறைவனுக்கு நாம் நன்றி சொல்வதற்காகவே கோடிப் பிறவிகள் எடுக்க வேண்டும்.

  அதை விடுத்து காசு, காமம், சொத்து போன்ற விதிப்பயன் மீறிய லவுகீக ஆசைகள் வாழ்வை நரகமாக்குவதுடன் சந்ததியினரை பாதிக்கும்.ஒவ்வொரு பாவத்திற்கும் ஒவ்வொருவிதமான பரிகாரங்கள் செய்ய வேண்டும். அதே சமயம் திரும்பவும் அதே பாவங்களை செய்யாமல் இருக்க வேண்டும். அதனால் பாவம் செய்து பின் பரிகாரம் தேடி அலைவதைவிட மனப்பூர்வமான இறை காரியங்களில் ஈடுபட்டு பிறவிக் கடனிலிருந்து மீள முயல வேண்டும்.

  எனவே இறைவன் எனக்கு இதைக் கொடுக்கவில்லை அதைக் கொடுக்கவில்லை என்று புலம்புவதை தவிர்தது அவர் கொடுத்த அழியாத உயிரைக் கொண்டு நன்மை செய்து நம் ஆன்மாவை புனிதப்படுத்த வேண்டும்.தூய பக்தி, நேர்மையான வாழ்வு, மனமார்ந்த தெய்வீக சேவை, சரணாகதி இவற்றால் மட்டுமே நிம்மதியாக வாழமுடியும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முன்னோர்களால் கிடைக்கும் சொத்தே பூர்வீகச் சொத்தாகும்.
  • பூர்வீகச்சொத்து பிரச்சனை உள்ளவர்கள் இந்த பரிகாரங்களை செய்யலாம்...

  ஒருவருக்கு தாய், தந்தை மற்றும் தாய், தந்தை வழி முன்னோர்களால் கிடைக்கும் சொத்தே பூர்வீகச் சொத்தாகும். ஜனன கால ஜாதகத்தில் 5,9-ம்மிடத்துடன் செவ்வாய் சுப வலிமை பெறுவதுடன் குரு,சனி, சம்பந்தம் இருப்பவர்கள் வம்சாவழியாக பூர்வீகச் சொத்தை பயன்படுத்தும் பாக்கியம் பெற்றவர்கள்.

  பூர்வீக சொத்துக்கள் அதிகம் இருந்திருந்தாலும் அவர்கள் பிறந்தபின் பூர்வீக சொத்து முழுவதும் ஒவ்வொன்றாக காலியாகிவிடும். ஜனன கால ஜாதகத்தில் 5-ம் அதிபதி 6-ல் இருந்தால் பூர்வீகச் சொத்தை கடனுக்காக இழக்க நேரும். 5-ம் அதிபதி எட்டில் இருந்தால் பூர்வீகச் சொத்தால் அங்காளி, பங்காளி வம்பு,வழக்கு, அவமானம் ஏற்படும். 8ம் இடத்திற்கு சுப கிரக சம்பந்தம் இருப்பவர்களுக்கு வழக்கில் வெற்றியுண்டாகும்.

  ஆனால் பல வருடங்களாக வழக்கு நடத்தி சொத்தின் மதிப்பிற்கு மேல் பணம் செலவு செய்ய நேரும். 5-ம் அதிபதி 12-ல் நின்றால் பூர்வீக சொத்தை இழந்து பூர்வீகத்தைவிட்டு வெளியேற நேரும்.

  ஐந்தாம் அதிபதி அல்லது ஐந்தாமிடத்தில் நீசம், அஸ்தமனம் வக்ர கிரகங்கள் நிற்பது, திதி சூன்யத்தால் பாதிப்பு,லக்னத்தில் சூரியன்,ஒன்பதில் சூரியன், சனி, சனி +ராகு/கேது,அல்லது 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறும் சூரியன், சனி, ராகு/கேதுக்கள்.சூரியன், சந்திரன்+ ராகு,கேது, சனிபோன்ற கிரக சேர்க்கைகள் இருந்தால் பயன்களை விட துன்பமே அதிகம்.

  மேலே கூறிய அமைப்பை பெற்றவர்கள் பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கிக்கொள்ள வேண்டும் அல்லது பூர்வீகச் சொத்தில் வசிக்கக் கூடாது. 5, 9ம்மிடத்திற்கு ராகு ,கேது சம்பந்தம் இருந்தால் தொடர்ந்து துர்க்கை அல்லது காளியை சனிக் கிழமை ராகு காலத்தில் வழிபட்டால் பூர்வீக சொத்தால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நலம் உண்டாகும்.

  சொத்துக்களை இழந்தோரும், ஏமாற்றி பிடுங்கப்பெற்றோரும்,வர வேண்டிய நியாயமான பூர்வீகச்சொத்துக்கள் வராமல் தவிப்போரும், இழந்த செல்வம், புகழ் , கவுரவம் அனைத்தையும் திரும்ப பெற வராகி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6 முதல் 7மணி அல்லது இரவு 8 முதல் 9 மணி அளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை முடிந்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் இழந்த அனைத்தையும் திரும்ப பெறலாம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நல்ல உத்தியோகத்தில் உள்ள பலர் கடன் பெற்றே சொத்து வாங்குகிறார்கள்.
  • புதன் ராகு சம்பந்தம் இருப்பவர்களுக்கு கடன் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும்.

  பல வங்கிகள் நிலையான நிரந்தரமான வருமானம் உள்ளவர்களுக்கு சொத்து வாங்க கடன் உதவி வழங்குகிறது. அதனால் நல்ல உத்தியோகத்தில் உள்ள பலர் கடன் பெற்றே சொத்து வாங்குகிறார்கள். சிலர் அவசர தேவைக்கு வீடு, நிலம், தோட்டங்களை அடமானம் வைத்து பணம் பெறுகின்றனர்.

  சுய ஜாதகத்தில் ஆறு மற்றும் நான்காம் பாவகத்திற்கு சம்பந்தம் இருப்பவர்களே பெரும்பாலும் அசலும், வட்டியும் கட்டி சொத்துக்களை கடனுக்காக இழக்கும் சூழ்நிலையும் உருவாகுகிறது. புதன் ராகு சம்பந்தம் இருப்பவர்களுக்கு கடன் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும். எளிதில் தீராத மற்றும் தீர்க்க முடியாத சொத்து அடமான கடனை தந்து மனிதனை வாழ்நாள் கடனாளியாகவே வாழ வைக்கிறது.

  இந்த கிரக சம்பந்தம் இருப்பவர்கள் கடனால் ஏற்படும் துக்கத்தை எளிதில் மறக்க முடியாத பாதிப்பையும் தருகிறது. இது போன்ற அமைப்பு ஜாதகத்தில் இருப்பவர்கள் சுய ஜாதக அமைப்பு அறிந்து சொத்துக்களை அடமானம் வைக்க வேண்டும். இவர்கள் செவ்வாய் கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரையான எமகண்ட நேரத்தில் 48 வாரம் விநாயகருக்கு வெள்ளெருக்கு மாலை அணிவித்து 9 தேங்காய் எண்ணெய் தீபம் இட வேண்டும்.

  சொத்துக் கடனால் வங்கியால் சட்டச் சிக்கலை சந்திப்பவர்கள் பிரச்சினை தீரும் வரை தினமும் மாலை 4.30 மணி மதல் 6 மணி வரையான பிரதோஷ வேளையில் ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வழிபட்டு வர பொருளாதாரம் உயரும். சட்டச் சிக்கல் தீரும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முறையற்ற பாகப்பிரிவினை போன்ற சொத்து தொடர்பான ஆவணங்களால் தீராத, தீர்க்க முடியாத மன உளைச்சல் இருக்கும்.
  • ஜோதிடத்தில் இளைய சகோதர, சகோதரியால் பற்றிக் கூறும் மூன்றாமிடமே ஆவணங்களைப் பற்றியும் கூறுகிறது.

  மனிதர்களின் நிகழ் கால மற்றும் எதிர்கால தேவைக்கான அனைத்து தகவல்களுக்கும் எழுத்துப் பூர்வமான ஆதாரமே ஆவணங்கள். ஜோதிட ரீதியாக ஒருவரின் ஆவணங்களைப் பற்றிக் கூறுமிடம் லக்னத்திற்கு மூன்றாமிடம் என்றாலும் ஆவணங்களுக்கான காரக கிரகம் கால புருஷ மூன்றாம் அதிபதியான புதன் பகவான்.

  மூன்றாம் அதிபதி மற்றும் மூன்றில் நின்ற கிரகங்களின் வலிமையை பொறுத்தே ஒருவருக்கு ஆவணங்கள் தொடர்பான சாதக பாதகங்கள் நிகழ்கின்றன.

  ஒருவருக்கு ஆவணங்கள் தொடர்பான அனைத்தும் சுப பலனாக நடைபெற புதனும் மூன்றாமிடமும் வலிமை பெற வேண்டும்.

  மூன்றாமிடமும் புதனும் வலிமை குறைந்து ராகு/கேதுக்களின் சம்பந்தம் பெறும் போது ஆவணங்களால் ஏற்படும் அசுப பலன்கள், மன உளைச்சலை சற்று மிகைப்படுத்தலாகவே தருகிறது. ஜாதகத்தில் புதனுக்கு ராகு/கேது சம்பந்தம் இருப்பவர்களுக்கு பூர்வீகச் சொத்தின் மூலம் கையெழுத்து மாற்றம் ,சர்வே எண் திருத்தம், எல்லைத் தகராறு, முறையற்ற பாகப்பிரிவினை போன்ற சொத்து தொடர்பான ஆவணங்களால் தீராத, தீர்க்க முடியாத மன உளைச்சல் இருக்கும்.

  ஜோதிடத்தில் இளைய சகோதர, சகோதரியால் பற்றிக் கூறும் மூன்றாமிடமே ஆவணங்களைப் பற்றியும் கூறுகிறது. மூன்றாம் பாவகக்காரர் செவ்வாய். செவ்வாய் என்றால் சொத்து, சகோதரம்.நமது ஜோதிட முன்னோடிகள் தீர்க்க தரிசிகள். மூன்றாமிடத்தால் ஒருவருக்கு அசவுகரியம் என்றால் சகோதரத்தாலும், ஆவணத்தாலும், சொத்தாலும் மட்டுமே வரும் என்று எவ்வாறு ஆனித்தரமாக வரையறுத்துள்ளார்கள். ஆக மூன்றாமிடம் வலுவிலந்தவர்களுக்கு சகோதரத்தால் ஆவணத்தால் சகாயமற்ற பலன் ஏற்படுகிறது.

  எத்தனையே குடும்பங்களில் பூர்வீகச் சொத்தை பிரிக்கும் போது சகோதரர்களுக்குள் கருத்து வேறுபாட்டால் சொத்துடன் சகோதர, சகோதரிகளும் பிரிவதை அனுபவத்தில் பார்க்கிறோம். இவர்களுக்கு மூன்றாமிடம் பலவீனமாக இருப்பதுடன் புதனுக்கு ராகு, கேதுக்களின் சம்பந்தமும் இருக்கும். ஜனன கால ஜாதகத்தில் நான்காமிடம், நான்காம் அதிபதி, செவ்வாய் வலிமை பெற்று இருந்தாலும் புதன்,ராகு/கேது சம்பந்தம் இருந்தால் சொத்துக்களால் பயனடைய முடியாத வகையில் ஆவணங்கள் தொடர்பான பிரச்சினை தலை விரித்து ஆடும்.

  இது ஒருபுறம் இருக்க கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் சிலர் மூன்றாமிடத்தால் தமக்கு ஏற்படப் போகும் அசவுகரியத்தை உணராமல் உடன் பிறந்தவர்கள் பெயரில் சொத்து வாங்கி குவித்து விட்டு பின் நாட்களில் மன உளைச்சலை சந்திக்கிறார்கள். மூன்றாமிடம் பலவீனத்துடன் புதன் + சனி +ராகு சம்பந்தம் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை வாழ்வாதாரத்தையே அசைக்கும் விதமாகவே இருக்கிறது.

  சுய ஜாதகத்தில் செவ்வாய்க்கு ராகு/ கேது சம்பந்தம் இருப்பவர்களுக்கு வில்லங்கமான சொத்தால் பண முடக்கம் ஏற்படும். அல்லது மூலப் பத்திரம், ஈசி இவற்றின் மூலம்வேறு யாராவது சொத்தின் மேல் உரிமை கொண்டாடுவார்கள்.

  அதாவது முறையான ஆவணங்கள் இல்லாத ஒரு சொத்திற்கு பலர் உரிமை கொண்டாடுவது அல்லது சம்பந்தம் இல்லாத சொத்தை போலிப் பத்திரங்கள் தயாரித்து விற்பவர்களிடம் சொத்து வாங்கி ஏமாறுவது அல்லது புறம் போக்கு நிலங்களை பட்டா போட்டு விற்பவர்களிடம் நிலம் வாங்கி ஏமாறுவார்கள். அரசின் சட்ட திட்டங்களால் போலி பத்திர சொத்து விற்பனை தற்போது குறைந்துள்ளது. என்றாலும் இன்றும் பல போலி பத்திர வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதே போல் ஜாதகத்தில் சூரியன் + ராகு சம்பந்தம் இருப்பவர்களின் சொத்து கோவில், சர்ச், மசூதி போன்றவற்றின் அருகில் இருக்கும்.

  அதனால் சொத்து தொடர்பான வழக்கு, தொடர் சட்ட சிக்கல் இருந்து கொண்டே இருக்கும். சொத்தால், முறையான ஆவணம் இன்மையால் அவதிப்படுபவர்கள் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரையான சனி ஒரையில் 21 பேருக்கு இட்லியுடன் எள் சட்னி தண்ணீருடன் தானம் தரவும். (48 வாரம்) அல்லது செவ்வாய் காலை 6 மணி முதல் 7 மணி வரையான செவ்வாய் ஓரையில் வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்து (27 எண்ணம்) 9 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி 48 வாரம் வழிபடவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • யார் பெயரில் சொத்து வாங்குவது என்பது மிக முக்கியம்.
  • இந்த பரிகாரம் செய்யும் நாட்களில் அசைவ உணவை தவிர்க்க வேண்டும்.

  பலர் சொத்து வாங்கும் போது சுய ஜாதகத்தை பரிசீலிப்பது இல்லை. யார் பெயரில் சொத்து வாங்குவது என்பது மிக முக்கியம். ஒருவரின் சுய ஜாதகத்தில் புதன் + சனிக்கு ராகு/கேதுக்கள் சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தாலும் பினாமி பெயரில் சொத்து வாங்கக் கூடாது. ஒருவரின் தார்மீக அடிப்படை உரிமையைத் தட்டிப் பறித்து நிர்கதியாக நிற்க வைப்பதே இந்த கிரக கூட்டணிகளின் வேலை. பினாமி பெயரில் சொத்து வாங்கும் பலருக்கும் இதே நிலை தான்.

  சுய ஜாதகத்தில் 4, 8, 11-ம் பாவகங்களுக்கு செவ்வாய் சம்பந்தம் இருந்தால் விபரீத ராஜ யோகத்தால் பினாமி சொத்து கிடைக்கும். அதை அனுபவிக்கும் பாக்கியமும் உண்டாகும். ஜனன கால ஜாதகத்தில் 4,8,12-ம் பாவகங்களுக்கு சம்பந்தம் இருந்தால் விபரீத ராஜ யோகத்தால் பினாமி சொத்து கிடைக்கும். அதை அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்காது. குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு கை நழுவிப் போகும் அல்லது யாருக்கும் பயன்படாத, பயன்படுத்த முடியாத சொத்தாகவே பல தலைமுறைக்கு இருக்கும்.

  மேற்கண்ட நிலை மாற கோட்சார குருவின் சம்பந்தம் 4,8,12-ம் இடங்களுக்கு கிடைக்கும் காலங்களில் தொடர்ந்து 27 பஞ்சமிகள், மாலை வேளையில் சிவன் சன்னதியில் சிகப்பு திரி கொண்டு மண் அகலில் இலுப்பெண்ணெய் தீபம் 9 ஏற்றி மனமுருகி வேண்டி வந்தால் பரிகாரம் முடிவதற்குள் பலன் கை மேல். இந்த பரிகாரம் செய்யும் நாட்களில் அசைவ உணவை தவிர்க்க வேண்டும்.

  மேலே கூறப்பட்ட அனைத்து நிலைகளும் பலரை நீதிமன்ற படி ஏற வைக்கிறது. பலர் வழக்கை நடத்த முடியால் சொத்தை இழக்கிறார்கள். இவர்கள் காஞ்சிபுரம் வழக்கீஸ்வரர் கோவில் சென்று வழிபட நியாயமான வழக்குகள் வெகு விரைவில் சாதகமாகும். காஞ்சிபுரம் காந்தி வீதியில் உள்ள இக்கோவிலில் வழக்குகளில் சிக்கி நிம்மதி இழந்தவர்கள் சிறப்பு பூஜை செய்தால் வழக்குகளிலிருந்து விடுபடுவார்கள். இறைவனே நேரில் வந்து வழக்கை தீர்த்து வைத்ததால், இக்கோவிலில் உள்ள இறைவன், 'வழக்கறுத்தீஸ்வரர்' என அழைக்கப்படுகிறார்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அரசின் சட்ட திட்டங்களால் போலி பத்திர சொத்து விற்பனை தற்போது குறைந்துள்ளது.
  • சொத்தால், முறையான ஆவணம் இன்மையால் அவதிப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்...

  சுய ஜாதகத்தில் செவ்வாய்க்கு ராகு/ கேது சம்பந்தம் இருப்பவர்களுக்கு வில்லங்கமான சொத்தால் பண முடக்கம் ஏற்படும். அல்லது மூலப் பத்திரம், ஈசி இவற்றின் மூலம்வேறு யாராவது சொத்தின் மேல் உரிமை கொண்டாடுவார்கள்.

  அதாவது முறையான ஆவணங்கள் இல்லாத ஒரு சொத்திற்கு பலர் உரிமை கொண்டாடுவது அல்லது சம்பந்தம் இல்லாத சொத்தை போலிப் பத்திரங்கள் தயாரித்து விற்பவர்களிடம் சொத்து வாங்கி ஏமாற்றுவது அல்லது புறம் போக்கு நிலங்களை பட்டா போட்டு விற்பவர்களிடம் நிலம் வாங்கி ஏமாறுவார்கள்.

  அரசின் சட்ட திட்டங்களால் போலி பத்திர சொத்து விற்பனை தற்போது குறைந்துள்ளது. என்றாலும் இன்றும் பல போலி பத்திர வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதே போல் ஜாதகத்தில் சூரியன் + ராகு சம்பந்தம் இருப்பவர்களின் சொத்து கோவில், சர்ச், மசூதி போன்றவற்றின் அருகில் இருக்கும். அதனால் சொத்து தொடர்பான வழக்கு, தொடர் சட்ட சிக்கல் இருந்து கொண்டே இருக்கும்.

  சொத்தால், முறையான ஆவணம் இன்மையால் அவதிப்படுபவர்கள் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரையான சனி ஒரையில் 21 பேருக்கு இட்லியுடன் எள் சட்னி தண்ணீருடன் தானம் தரவும். (48 வாரம்) அல்லது செவ்வாய் காலை 6 மணி முதல் 7 மணி வரையான செவ்வாய் ஓரையில் வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்து (27 எண்ணம்) 9 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி 48 வாரம் வழிபடவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×