என் மலர்

  தோஷ பரிகாரங்கள்

  பினாமி சொத்தால் ஏற்படும் பிரச்சனைக்கு பரிகாரம்
  X

  பினாமி சொத்தால் ஏற்படும் பிரச்சனைக்கு பரிகாரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • யார் பெயரில் சொத்து வாங்குவது என்பது மிக முக்கியம்.
  • இந்த பரிகாரம் செய்யும் நாட்களில் அசைவ உணவை தவிர்க்க வேண்டும்.

  பலர் சொத்து வாங்கும் போது சுய ஜாதகத்தை பரிசீலிப்பது இல்லை. யார் பெயரில் சொத்து வாங்குவது என்பது மிக முக்கியம். ஒருவரின் சுய ஜாதகத்தில் புதன் + சனிக்கு ராகு/கேதுக்கள் சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தாலும் பினாமி பெயரில் சொத்து வாங்கக் கூடாது. ஒருவரின் தார்மீக அடிப்படை உரிமையைத் தட்டிப் பறித்து நிர்கதியாக நிற்க வைப்பதே இந்த கிரக கூட்டணிகளின் வேலை. பினாமி பெயரில் சொத்து வாங்கும் பலருக்கும் இதே நிலை தான்.

  சுய ஜாதகத்தில் 4, 8, 11-ம் பாவகங்களுக்கு செவ்வாய் சம்பந்தம் இருந்தால் விபரீத ராஜ யோகத்தால் பினாமி சொத்து கிடைக்கும். அதை அனுபவிக்கும் பாக்கியமும் உண்டாகும். ஜனன கால ஜாதகத்தில் 4,8,12-ம் பாவகங்களுக்கு சம்பந்தம் இருந்தால் விபரீத ராஜ யோகத்தால் பினாமி சொத்து கிடைக்கும். அதை அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்காது. குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு கை நழுவிப் போகும் அல்லது யாருக்கும் பயன்படாத, பயன்படுத்த முடியாத சொத்தாகவே பல தலைமுறைக்கு இருக்கும்.

  மேற்கண்ட நிலை மாற கோட்சார குருவின் சம்பந்தம் 4,8,12-ம் இடங்களுக்கு கிடைக்கும் காலங்களில் தொடர்ந்து 27 பஞ்சமிகள், மாலை வேளையில் சிவன் சன்னதியில் சிகப்பு திரி கொண்டு மண் அகலில் இலுப்பெண்ணெய் தீபம் 9 ஏற்றி மனமுருகி வேண்டி வந்தால் பரிகாரம் முடிவதற்குள் பலன் கை மேல். இந்த பரிகாரம் செய்யும் நாட்களில் அசைவ உணவை தவிர்க்க வேண்டும்.

  மேலே கூறப்பட்ட அனைத்து நிலைகளும் பலரை நீதிமன்ற படி ஏற வைக்கிறது. பலர் வழக்கை நடத்த முடியால் சொத்தை இழக்கிறார்கள். இவர்கள் காஞ்சிபுரம் வழக்கீஸ்வரர் கோவில் சென்று வழிபட நியாயமான வழக்குகள் வெகு விரைவில் சாதகமாகும். காஞ்சிபுரம் காந்தி வீதியில் உள்ள இக்கோவிலில் வழக்குகளில் சிக்கி நிம்மதி இழந்தவர்கள் சிறப்பு பூஜை செய்தால் வழக்குகளிலிருந்து விடுபடுவார்கள். இறைவனே நேரில் வந்து வழக்கை தீர்த்து வைத்ததால், இக்கோவிலில் உள்ள இறைவன், 'வழக்கறுத்தீஸ்வரர்' என அழைக்கப்படுகிறார்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  Next Story
  ×