என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Period Film
நீங்கள் தேடியது "Period Film"
சசிகுமார் இயக்கத்தில் உருவாகும் வரலாற்று படத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Sasikumar #Vijay #Suriya
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சசிகுமார், நடிகராக பிசியாகிவிட்டார். கடைசியாக ஈசன் படத்தை இயக்கிய பிறகு நடிப்பில் முழு கவனம் செலுத்தி வந்த சசிகுமார் தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சசிகுமார், விஜய்யிடம் ஒரு வரலாற்று கதையை சொன்னபோது, அவர் மிகவும் ரசித்து, நிச்சயம் பண்ணலாம் என சொல்லியிருக்கிறார். இதை சசிகுமாரே ஒரு பேட்டியில் கூறி இருந்தார். எனவே சசிகுமார் இயக்கத்தில் விஜய் வரலாற்று படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போதைய தகவலின்படி, விஜய் அந்த படத்தில் நடிக்கவில்லையாம்.
இதையடுத்து சசிகுமார், சூர்யாவிடம் அந்த கதையை கூறியதாகவும், கதை பிடித்துப்போன சூர்யா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்திலும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு ஹரி, சுதா கொங்காராவுடன் தலா ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Sasikumar #Vijay #Suriya
இயக்குநர், நடிகர் என பன்முக திறமைகளை கொண்ட சசிகுமார் அடுத்ததாக வரலாற்று படமொன்றை இயக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், விஜய்யை வைத்து அந்த படத்தை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. #Vijay #Sasikumar
நடிகர் சசிகுமார் சமீபத்தில் இயக்குனர் ராஜமவுலியை சந்தித்திருந்தார். சசிகுமார் ஒரு வரலாற்று திரைப்படம் எடுக்க திட்டமிட்டுள்ளார். வரலாற்று திரைப்படங்கள் எடுப்பதில் கைதேர்ந்தவர் ராஜமவுலி என்பதால், சமீபத்தில் அவரை சந்தித்து ஆலோசனை பெற்றுள்ளார். சமீபத்தில் இருவரும் சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை, சசிகுமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
ராஜமவுலி இயக்கத்தில் சசிகுமார் நடிக்க இருப்பதாக வதந்திகள் வந்த நிலையில், சசிகுமார் இயக்கவிருக்கும் படத்திற்காக ராஜமவுலியை சந்தித்தது தெரியவந்தது. அந்த படத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சசிகுமார், விஜய்யிடம் ஒரு வரலாற்று திரைப்படக் கதையை சொன்னபோது அவர் மிகவும் ரசித்து நிச்சயம் பண்ணலாம் என சொல்லியிருக்கிறார். இதை சசிகுமாரே ஒரு பேட்டியில் கூறி இருந்தார். எனவே சசிகுமார் இயக்கத்தில் வரலாற்று படத்தில் விஜய் நடிக்கிறார் என்பதை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். விஜய் அடுத்ததாக அட்லியுடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் சசிகுமார் இயக்கத்தில் நடிக்கிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். #Vijay #Sasikumar
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X