என் மலர்

  சினிமா

  விஜய்க்காக ராஜமவுலியை சந்தித்த சசிகுமார்
  X

  விஜய்க்காக ராஜமவுலியை சந்தித்த சசிகுமார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இயக்குநர், நடிகர் என பன்முக திறமைகளை கொண்ட சசிகுமார் அடுத்ததாக வரலாற்று படமொன்றை இயக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், விஜய்யை வைத்து அந்த படத்தை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. #Vijay #Sasikumar
  நடிகர் சசிகுமார் சமீபத்தில் இயக்குனர் ராஜமவுலியை சந்தித்திருந்தார். சசிகுமார் ஒரு வரலாற்று திரைப்படம் எடுக்க திட்டமிட்டுள்ளார். வரலாற்று திரைப்படங்கள் எடுப்பதில் கைதேர்ந்தவர் ராஜமவுலி என்பதால், சமீபத்தில் அவரை சந்தித்து ஆலோசனை பெற்றுள்ளார். சமீபத்தில் இருவரும் சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை, சசிகுமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

  ராஜமவுலி இயக்கத்தில் சசிகுமார் நடிக்க இருப்பதாக வதந்திகள் வந்த நிலையில், சசிகுமார் இயக்கவிருக்கும் படத்திற்காக ராஜமவுலியை சந்தித்தது தெரியவந்தது. அந்த படத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.  சில ஆண்டுகளுக்கு முன்பு சசிகுமார், விஜய்யிடம் ஒரு வரலாற்று திரைப்படக் கதையை சொன்னபோது அவர் மிகவும் ரசித்து நிச்சயம் பண்ணலாம் என சொல்லியிருக்கிறார். இதை சசிகுமாரே ஒரு பேட்டியில் கூறி இருந்தார். எனவே சசிகுமார் இயக்கத்தில் வரலாற்று படத்தில் விஜய் நடிக்கிறார் என்பதை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

  விஜய் தற்போது ஏ.ஆர்.முருகாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். விஜய் அடுத்ததாக அட்லியுடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் சசிகுமார் இயக்கத்தில் நடிக்கிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். #Vijay #Sasikumar

  Next Story
  ×