search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Northern worker"

    • வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ஈரோடு:

    பீகார் மாநிலம் நானேய்யா கிழக்கு பாகாட்டியா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பஸ்வான் (22). இவர் காஞ்சிக்கோயில் அருகே உள்ள எருக்காட்டு வலசு பகுதியில் உள்ள மஞ்சள் தூள் தயாரிக்கும் மில்லில் பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று இரவு அவரது மனைவியுடன் செல்போனில் பேசி கொண்டிருந்தார். பின்னர் ஊருக்கு செல்வதாக கூறி சென்றவர் மில்லின் மதில் சுவர் அருகே உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காஞ்சிக்கோவில் போலீசார் ரமேஷ் பஸ்வானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • அனைத்து தொழிலாளா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
    • பிரச்சினைகளுக்கு போலீசார் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூரில் வேலை செய்து வரும் வடமாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து ஐஎன்டியூசி. தொழிற்சங்கம் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    திருப்பூா் பூங்கா சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் அச்சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளா் சிவசாமி பேசியதாவது:- திருப்பூரின் வளா்ச்சியிலும், பனியன் தொழிலின் வளா்ச்சியிலும் வடமாநில தொழிலாளா்களின் பங்கு இன்றிமையாதது. ஆனால் சமீபகாலமாக தமிழக தொழிலாளா்கள், வடமாநில தொழிலாளா்கள் இருதரப்பினரிடையே பல்வேறு விரோத சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனைத்தவிா்க்க அனைத்து தொழிலாளா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    பனியன் நிறுவன உரிமையாளா்கள் தங்களது நிறுவனங்களில் உள்ள தமிழக தொழிலாளா்கள் மற்றும் வடமாநில தொழிலாளா்கள் இடையே சுமூகமான உறவை தொடரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிறுவனத்துக்கு வெளியே நடைபெறுகிற பிரச்சினைகளுக்கு போலீசார் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் போலீசார், வடமாநிலத் தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.

    • பல்லடத்தில் ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.
    • பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம்:

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அமிட் கஞ்சு (வயது 23). இவர் பல்லடத்தில் ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு உடல் நலம் சரியில்லாததால் பல்லடத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளார். பின்னர் அங்கிருந்து டீ குடிப்பதற்காக வெளியில் நடந்து சென்றுள்ளார். அப்போது மயங்கி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொண்டும் பலனின்றி அமிட் கஞ்சு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கும்பல் சரமாரியாக அவரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
    • முத்தம்மாள்புரம் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து கும்பலை தேடி வருகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள அத்திமரப்பட்டியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் காம்பவுண்ட் அருகே சிலர் மதுகுடித்து வந்துள்ளனர். இது தொடர்பாக அசாம் மாநிலம் மொரிக்கன் மாவட்டத்தை சேர்ந்த முகுதுகில் இஷாம் (வயது 24) என்பவர் ஒப்பந்ததாரரிடம் புகார் தெரிவித்தார்.

    இதையடுத்து அவர் மதுகுடிப்பது குறித்து தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்கு முகுதுகில் இஷாம் மீது ஆத்திரம் ஏற்பட்டது. நேற்று மாலை முகுதுகில் இஷாம் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், எப்படி எங்கள் மீது புகார் கூறலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கும்பல் சரமாரியாக அவரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக முத்தம்மாள்புரம் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து கும்பலை தேடி வருகிறார்.

    ×