வட மாநில தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

பல்லடத்தில் ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

பல்லடம்:

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அமிட் கஞ்சு (வயது 23). இவர் பல்லடத்தில் ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு உடல் நலம் சரியில்லாததால் பல்லடத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளார். பின்னர் அங்கிருந்து டீ குடிப்பதற்காக வெளியில் நடந்து சென்றுள்ளார். அப்போது மயங்கி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொண்டும் பலனின்றி அமிட் கஞ்சு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com