search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nokia 9 PureView"

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போனினை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #Nokia9PureView



    நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. ஐந்து கேமரா சென்சார் கொண்டிருக்கும் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. 

    இதனை உறுதிப்படுத்தும் வகையில், நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் வீடியோவினை நோக்கியா மொபைல் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது. நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் மூன்று மோனோக்ரோம் மற்றும் இரண்டு ஆர்.ஜி.பி. சென்சார்களை கொண்டிருக்கிறது.



    நோக்கியா மொபைல் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கும் டீசர் வீடியோவில் நோக்கியா 9 பியூர் வியூ மொபைல் வெவ்வேறு கோணங்களில் காணப்படுகிறது. இத்துடன் விரைவில் நோக்கியா 9 கொண்ட தலைசிறந்த புகைப்படங்களை படமாக்க தயாராகுங்கள் என்ற வார்த்தை பதிவிடப்பட்டிருக்கிறது.

    சர்வதேச சந்தையில் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் விலை 699 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.48,300) என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு நிறத்தில் தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் மட்டும் தற்சமயம் விற்பனை செய்யப்படுகிறது.

    எனினும், இந்திய விலை மற்றும் விற்பனை பற்றிய விவரங்கள் அறியப்படவில்லை. இந்தியாவில் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் விலை ரூ.45,000 முதல் ரூ.50,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 



    நோக்கியா 9 பியூர் வியூ சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2560x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. pOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 630 GPU
    - 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள், f/1.82, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP67)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3320 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்
    - வயர்லெஸ் சார்ஜிங்
    ஹெச்.எம்.டி. குளோபல் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் எஃப்.சி.சி. வலைதளத்தில் சான்று பெற்றிருக்கிறது. #Nokia9PureView



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போன் எஃப்.சி.சி. வலைதளத்தில் சான்று பெற்றிருக்கிறது.

    அதன்படி புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் செய்ஸ் கேமரா ஆப்டிக்ஸ் வழங்கப்படுவது உறுதியாகியிருக்கிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனின் டூயல் சிம் சர்வதேச வேரியண்ட் TA-1087 என்ற மாடல் நம்பரும், சிங்கிள் சிம் கொண்ட சர்வதேச வேரியண்ட் TA-1082 என்ற மாடல் நம்பரும், டூயல் சிம் சீனா வேரியண்ட் TA-1094 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. எனினும், ஸ்மார்ட்போனின் கேமரா ரெசல்யூஷன் பற்றி எவ்வித தகவலும் இல்லை. 

    சீனாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இரண்டு 12 எம்.பி. கேமராக்களும், 16 எம்.பி. பிரைமரி கேமராக்களும், ஒரு 8 எம்.பி. பிரைமரி கேமராவும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு டெலிபோட்டோ, வைடு-ஆங்கிள் மற்றும் டெப்த் சென்சிங் லென்ஸ் இடம்பெற்றிருக்கிறது.


    புகைப்படம் நன்றி: fcc

    புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் லைட் கேமரா தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என்றும் இது ஒரே சமயத்தில் ஐந்து புகைப்படங்களை படமாக்கும் என்றும், வழக்கமான ஸ்மார்ட்போன்களை விட 10X அதிக வெளிச்சத்தில் புகைப்படங்களை எடுக்கும் என கூறப்படுகிறது. இவற்றை ஒன்றிணைக்கும் போது 64 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை எடுக்க முடியும்.

    ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களை பொருத்தவரை 5.99 இன்ச் QHD பிளஸ் பியூர் டிஸ்ப்ளே, HDR10 வசதி, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட்போனில் ஹெச்.எம்.டி. குளோபல் வயர்லெஸ் சார்ஜிங் வசதி மற்றும் மேம்பட்ட கேமரா மோட்களை வழங்கும் என தெரிகிறது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் லைவ் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது. #Nokia9PureView #Smartphone
     


    நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் பிப்ரவரி 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதன் லைவ் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் ஐந்து கேமரா லென்ஸ் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக நோக்கியா 9 பியூர் வியூ மாடல் இருக்கும். இந்த ஸ்மார்ட்போனுடன் ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 8.1 மற்றும் நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    நோக்கியா பவர்யூசர் சார்பில் வெளியாகி இருக்கும் புதிய லைவ் புகைப்படங்களில் ஸ்மார்ட்போன் மெட்டல் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதும் கிளாஸி பேக் பேனல் கொண்டிருப்பதும் உறுதியாகியிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறம் வளைந்த ஓரங்களை கொண்டிருக்கிறது.


    புகைப்படம் நன்றி: NokiaPowerUser

    ஸ்மார்ட்போனில் டிஸ்ப்ளே நாட்ச் எதுவும் காணப்படவில்லை, இதன் பெசல்கள் தடிமனாகவும் அதில் செல்ஃபி கேமரா, இயர்பீஸ் மற்றும் இதர சென்சார்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. முன்னதாக வெளியான ரென்டர்களிலும் நோக்கியா 9 பியூர்வியூ மாடலில் டிஸ்ப்ளே நாட்ச் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஸ்மார்ட்போனின் பின்புறம் ஐந்து கேமரா சென்சார்கள், எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் வட்ட வடிவம் கொண்ட டெப்த் சென்சார் இடம்பெற்றிருக்கிறது. ஸ்மார்ட்போனின் பேக் பேனல் ரிஃப்ளெக்டிவ் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. 

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் 5.99 இன்ச் QHD பிளஸ் பியூர் டிஸ்ப்ளே, HDR10 வசதி, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட்போனில் ஹெச்.எம்.டி. குளோபல் வயர்லெஸ் சார்ஜிங் வசதி மற்றும் மேம்பட்ட கேமரா மோட்களை வழங்கும் என தெரிகிறது.
    ×