search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    புகைப்படம் நன்றி: fcc
    X
    புகைப்படம் நன்றி: fcc

    எஃப்.சி.சி. தளத்தில் சான்று பெற்ற ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்

    ஹெச்.எம்.டி. குளோபல் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் எஃப்.சி.சி. வலைதளத்தில் சான்று பெற்றிருக்கிறது. #Nokia9PureView



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போன் எஃப்.சி.சி. வலைதளத்தில் சான்று பெற்றிருக்கிறது.

    அதன்படி புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் செய்ஸ் கேமரா ஆப்டிக்ஸ் வழங்கப்படுவது உறுதியாகியிருக்கிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனின் டூயல் சிம் சர்வதேச வேரியண்ட் TA-1087 என்ற மாடல் நம்பரும், சிங்கிள் சிம் கொண்ட சர்வதேச வேரியண்ட் TA-1082 என்ற மாடல் நம்பரும், டூயல் சிம் சீனா வேரியண்ட் TA-1094 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. எனினும், ஸ்மார்ட்போனின் கேமரா ரெசல்யூஷன் பற்றி எவ்வித தகவலும் இல்லை. 

    சீனாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இரண்டு 12 எம்.பி. கேமராக்களும், 16 எம்.பி. பிரைமரி கேமராக்களும், ஒரு 8 எம்.பி. பிரைமரி கேமராவும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு டெலிபோட்டோ, வைடு-ஆங்கிள் மற்றும் டெப்த் சென்சிங் லென்ஸ் இடம்பெற்றிருக்கிறது.


    புகைப்படம் நன்றி: fcc

    புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் லைட் கேமரா தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என்றும் இது ஒரே சமயத்தில் ஐந்து புகைப்படங்களை படமாக்கும் என்றும், வழக்கமான ஸ்மார்ட்போன்களை விட 10X அதிக வெளிச்சத்தில் புகைப்படங்களை எடுக்கும் என கூறப்படுகிறது. இவற்றை ஒன்றிணைக்கும் போது 64 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை எடுக்க முடியும்.

    ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களை பொருத்தவரை 5.99 இன்ச் QHD பிளஸ் பியூர் டிஸ்ப்ளே, HDR10 வசதி, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட்போனில் ஹெச்.எம்.டி. குளோபல் வயர்லெஸ் சார்ஜிங் வசதி மற்றும் மேம்பட்ட கேமரா மோட்களை வழங்கும் என தெரிகிறது.
    Next Story
    ×