search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Quality Certificate"

    • ஆஸ்பத்திரியில் 20 டாக்டர்கள் 26 செவிலியர்கள் 4 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • தரம் மற்றும் சிகிச்சை, பயன்பாடுகள் கண்டறிந்து மதிப்பெண் அடிப்படையில் 88.82 சதவீதம் மத்திய குழுவினரால் வழங்கப்பட்டன.

    பொன்னேரி:

    பொன்னேரியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மேலும் பொது அறுவை சிகிச்சை எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை, குழந்தை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, மகப்பேறு மருத்துவம், டயாலிசிஸ், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பிரிவு, பல் மருத்துவம், தோல் மருத்துவம், எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம், 24 மணி நேர ஆய்வகம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், 24 மணி நேரம் செயல்படும் விபத்து சிகிச்சை பிரிவுகள் உள்ளன.

    ஆஸ்பத்திரியில் 20 டாக்டர்கள் 26 செவிலியர்கள் 4 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி 16,17, 18-ந்தேதிகளில் மத்திய சுகாதாரத் துறை சார்பில் மருத்துவர்கள் அருண்குமார்ரஸ்தோகி, சுனிதா பாலிவால், வைஷாலி தட்டாத்ரியா, ஆகிய மூவர் அடங்கிய குழுவினர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் விபத்து பிரிவு, பொது மருத்துவம், ஆய்வகக் கூடம், நுண்கதிர் பிரிவு, சமையல் கூடம், உணவின் தரம், மகப்பேறு பிரிவு, உள்ளிட்ட 13 துறைகளை ஆய்வு செய்தனர். அவற்றின் தரம் மற்றும் சிகிச்சை, பயன்பாடுகள் கண்டறிந்து மதிப்பெண் அடிப்படையில் 88.82 சதவீதம் மத்திய குழுவினரால் வழங்கப்பட்டன.

    இதன் அடிப்படையில் 2023-ம் ஆண்டிற்கான தேசிய தரச்சான்று பொன்னேரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த தகவலை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் அசோகன் தெரிவித்தார்.

    • குழந்தைகளின் நலன், ஆய்வக பராமரிப்பு போன்றவை குறித்து ஆய்வு செய்து மதிப்பெண் வழங்கினர்.
    • ஈரோடு மாநகராட்சியில் அகத்தியர் வீதி, நேதாஜி சாலை, சூரியம்பாளையம், வீரப்பன் சத்திரம்,

    ஈரோடு, 

    ஈரோடு மாநகரில் 10 இடங்களில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்கள் உள்ளன. தேசிய தர உறுதி குழுவை சேர்ந்த மத்திய சுகாதாரத்துறை மருத்துவ அதிகாரிகள் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையமாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    மருத்துவமனை சுகாதாரம், மருந்துகளின் இருப்பு, உள் நோயாளிகள், வெளி நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை, மருத்துவர்கள் செவிலி யர்கள் வருகை. நோயாளிகளுக்கு அடிப்படை வசதி, மகப்பேறு சிகிச்சைமுறை, குழந்தைகளின் நலன், ஆய்வக பராமரிப்பு போன்றவை குறித்து ஆய்வு செய்து மதிப்பெண் வழங்கினர்.

    மத்திய அரசின் சுகாதார துறை சார்பில் சமீபத்தில் தேசிய தரச்சான்று பெற்ற நகர்ப்புற, கிராமப்புற சுகாதார நிலையங்களின் பட்டியல் வெளியி டப்பட்டது.

    இதில் ஈரோடு மாநகராட்சியில் அகத்தியர் வீதி, நேதாஜி சாலை, சூரியம்பாளையம், வீரப்பன் சத்திரம், பெரிய சேமூர் 5 நகர்ப்புற சுகாதார நிலைய மும், மாவட்டத்தில் கோபி, பவானி, ஜம்பை, குத்தி யாலத்தூர், சித்தோடு ஆகிய 5 ஆரம்ப சுகாதார நிலைய மும் தேசிய தரச் சான்றி தழுக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளன. 

    • தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தேசியச் தரச்சான்றிதழை வழங்கி, மருத்துவக்குழுவினரை பாராட்டினார்.
    • கர்ப்பிணிப் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை தினங்களில், 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்று வருகின்றனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த பேளூரில் இயங்கி வரும் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் 12-–ல் சென்னையில் நடந்த விழாவில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தேசியச் தரச்சான்றிதழை வழங்கி, மருத்துவக்குழுவினரை பாராட்டினார்.

    இதனையடுத்து, பேளூர் சுகாதார வட்டாரத்தில் இயங்கி வரும் திருமனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் அனைத்து அடிப்படை மற்றும் கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி, தேசிய தரச்சான்றிதழ் பெற திருமனுார் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக்குழுவினர் முன் வந்தனர். இந்த சுகாதார நிலையம் 1982-–ம் ஆண்டு தொடங்கப்பட்டு தொடர்ந்து 40 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த சுகாதார நிலையத்தில், 2 மருத்துவர்கள், 3 செவிலியர்கள், ஒரு ரத்த பரிசோதகர், இரு சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த சுகாதார நிலையத்தில், நாளொன்றுக்கு சராசரியாக 100 பயனாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாரத்திற்கு இருமுறை நடைபெறும் கர்ப்பிணிப் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை தினங்களில், 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்று வருகின்றனர். ஆத்தூர் சுகாதார மாவட்ட துணை இயக்குனர் ஜெமினி மற்றும் பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் சி.பொன்னம்பலம் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில், மருத்துவ அலுவலர்கள் சிவா, சிமி, பேரின்பம், ராகுல், வெற்றிவேல் மற்றும் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஒன்றிணைந்து, சுகாதாரத்துறை, அரசு சாரா நிறுவனங்கள், பெரு நிறுவனங்களை அணுகி, திருமனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி புதுப்பித்தனர்.

    இந்த சுகாதார நிலையத்தை, கடந்த அக்டோபர் 18,19-–ம் தேதிகளில், புதுதில்லியில் இருந்து வந்த மத்திய அரசின் தேசிய தரச் சான்று குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து, திருமனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்று வழங்குவதாக அறிவித்துள்ளனர். இதனால், திருமனூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 557 படுக்கை வசதிகள், பல்வேறு சிகிச்சை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.
    • ஆய்வு கடந்த ஜூலை மாதம் 13, 14 , 15-ந்தேதிகளில் நடைபெற்றது.

    தென்காசி:

    தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 557 படுக்கை வசதிகள், பல்வேறு சிகிச்சை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக தேசிய தரச்சான்று பெறுவதற்கான முயற்சியை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

    தேசிய தரச்சான்று

    இதற்காக மருத்துவ மனையின் தரத்தினை உயர்த்துவதற்காக நோயாளிகளின் நலனுக்காக உயர் சிறப்பான சிகிச்சை கிடைப்பதற்கும், தேவையான பல்வேறு மருத்துவ உபகரணங்கள் மருத்துவமனையில் நிறுவப்பட்டு வந்தது.

    மேலும் பல்வேறு நன்கொடையாளர்கள் மூலம் மருத்துவமனையின் பல்வேறு கட்டிடங்களை புதுப்பித்து வர்ணம் பூசி புதுமையாக்கினர்.

    மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் மற்றும் உறைவிட மருத்துவர் வழிகாட்டுதலுடன் தரச்சான்று பெறுவதற்கு மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்துதுறை பணியாளர்களும் முழு ஒத்துழைப்பும் கொடுத்து தேசிய தரச்சான்று பெற்று முதன்மையான மருத்துவ மனையாக மாற்றிடும் முயற்சியில் ஈடுபட்டனர் .

    இந்த ஆய்வு கடந்த ஜூலை மாதம் 13, 14 , 15-ந்தேதிகளில் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் நேற்று முன்தினம் இணையதளம் வாயிலாக அறிவிக்கப்பட்டது . இதில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அனைத்து தரத்தினையும் பெற்ற சிறந்த மருத்துவ மனைக்கான சான்றினை பெற்ற முதன்மை மருத்துவமனையாக தேசிய தர குழுவினரால் அறிவிக்கப்பட்டது.

    இதில் மருத்துவ மனையின் அவசர சிகிச்சை பிரிவு, வெளிநோயாளிகள் சிகிச்சைப்பிரிவு, பிரசவ அறை , பிரசவ வார்டு உள்ளிட்ட 18 பிரிவுகளின் தரமும் சிறந்ததாக உள்ளதாக தேசிய தரக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது .

    மேலும் இத்தரத்தினை மேற்படுத்த உதவிய மருத்துவமனை அனைத்து துறை பணியாளர்கள், பொதுமக்களுக்கும் மருத்துவமனையின் நிர்வாகம் சார்பாக மருத்துவ மனை கண்காணிப்பாளர் நன்றியினை தெரிவித்தார் .

    மேலும் பொது மக்களுக்கு தரமான சேவையை வழங்குவதில் மருத்துவமனை நிர்வாகமும், பணியா ளர்களும் எப்போதும் தயாராக இருப்பதாகவும், மருத்துவமனையின் இத்தரத்தினை எப்போதுமே நிரந்தரமாக பேணிக்காத்து சிறப்பான சேவையினை வழங்கு வதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு மருத்துவமனையின் கண்கா ணிப்பாளர் ஜெஸ்லின் கேட்டுக் கொண்டுள்ளார்.

    ×